சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை தொடர்பான அரசாணையை தவறாக வெளியிட்டதால் இந்து சமய அறநிலைத்துறை அதைத் திரும்ப பெறும்படி அளித்த பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் நாச்சியப்பன் தலைமையில் மனு
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பாக சென்னை
உயர் நீதிமன்றம் கலந்தாலோசனை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஆலோசனை செய்யாமல் ஹிந்து சமய அறநிலையத்துறை தவறான அரசாணையை வெளியிட்டுள்ளதை
திரும்பப் பெறக் கோரி ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்தித்துப் பேசினர்
சிதம்பரம் கோவிலில் கனகசபை அரசாணை தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் சிதம்பரம் தீட்சிதர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான
இந்தச் சந்திப்பு பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது, சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோவில் பழமையான உலகப் பிரசித்தி பெற்றது அங்கு நடராஜர் நர்த்தனம் நடத்தியதாக நம்பிக்கை கொண்ட கனகசபை மீதிலேறி சுவாமி தரிசனம் செய்ய அங்குள்ள தீட்சிதர்கள் தனியாகப் பணம் வசூலிப்பதாக ஒரு புகார் எழுந்தது. தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு அரசு, எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் கனகசபை மீது பொதுமக்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்யலாமென 2023 ஆம் ஆண்டில் மே மாதம் அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, நிதி மோசடிகள், குழந்தைத் திருமணம் என சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது சர்ச்சைகளும், புகார்களும் எழுந்த சூழலில், கடந்த வாரம் கோவில் கனகசபை மீது பொதுமக்கள் ஏறுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்து அறிவிப்பு பலகையும் வைத்தனர். அதற்கு பொதுமக்களும் இந்து சமய அறநிலைத்துறையும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்தப் பிரச்சினை மீண்டும் காவல் நிலையம் வரை சென்று போராட்டத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது. நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் கனக சபையில் பொதுமக்கள் காவல்துறை பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர். அதனால் தீட்சிதர்களுக்கும் அறநிலையத்துறைக்கும் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் கோயிலை தங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழ்நாடு அறநிலையத்துறை முயன்று வருவதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கருத்துத் தெரிவித்துள்ளார். விரைவில் சிதம்பரத்தில் பெரும் போராட்டத்தை பாஜக சார்பில் நடத்துமெனவும் அறிவித்தார்.
இந்தச் சூழலில் தான், சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் குழு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளது. ஜூலை மாதம் 1 ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்கள் கமிட்டியின் செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில் மூன்று தீட்சிதர்கள் நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தாகத் தெரிகிறது. மேலும், சிதம்பரம் கோயிலில் தற்போது என்னென்ன பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை எப்படி தங்களை தொந்தரவு செய்கிறது என இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமனிடம் தீட்சிதர்கள் குழு எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை தற்போது கையில் எடுத்திருக்கும் பாஜக விரைவில் போராட்டத்தையும் நடத்துவோம் என அறிவித்துள்ளதும், சிதம்பரம் தீட்சிதர்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததும் தமிழ்நாடு அரசியல் மற்றும் ஆலய பக்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
அதே போல கிராமக் கோவில் பூசாரி தட்டில் காணிக்கையாக காசு போட்டால் அதை எடுத்து அறநிலையத்துறை வைத்துள்ள உண்டியலில் போடவேண்டும் என சம்பளத்துக்கு ஆள் போட்டிருக்கிறார்களா? இந்து சமய அறநிலையத்துறையில் என்ற வினா எழுகிறது,
இது அழகர் கோவில் நிர்வாகத்தில் பதினெட்டாம்படிக் கருப்பண்ண சாமி கோவில். பூசாரி பிராமணர் அல்லாதவர். இது இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த சட்டம் அனுமதிக்கிறதா என்பதும் எழுவினா? பக்தர்கள் மத்தியில் எழுந்த நிலையில்
தொழிலாளர் நலச் சட்டங்கள் கோவிலுக்குப் பொருந்துமா? அல்லது
இடஒதுக்கீடு மட்டும் தான் பொருந்துமா? என்பது பலரது சந்தேகம்
கருத்துகள்