முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓ. பன்னீர்செல்வம் அணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் பங்கேற்றது.

கொடநாட்டில்  நடந்தந கொலை, கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு




செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னால் முதல்வருமான  ஓ. பன்னீர்செல்வம் அணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும்  பங்கேற்றது.        "கொடநாடு கொலை - கொள்ளை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத மாநில  திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு  தழுவிய அளவில் அனைத்து  மாவட்டத் தலைநகரங்களிலும் "நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம்" அஇஅதிமுக சார்பில் அமமுக கழகத்தின் ஆதரவுடன் இன்று நடந்தது தேனி மாவட்டம் - பங்களா மேடு அருகில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும்  முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் BA.,MLA தலைமையில்  அமமுக பொதுச்செயலாளர் TTV.தினகரன் BE., முன்னிலையில் மாபெரும் எழுச்சி மாநாடு போல் அலை கடலென அஇஅதிமுக - அமமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து "நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம்" வெகு பிரமாண்டமாக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கட்சியின்  தலைமை நிர்வாகிகள் மற்றும் தேனி மாவட்ட சார்பு அணி, ஒன்றிய, பேரூர் கிளைச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள்,நிர்வாகிகள்,தொண்டர்களுடன்  பொதுமக்களும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டனர். அதில் பேசிய டி.டி.வி.தினகரன் "கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது" என 




-அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு             கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கேற்றது "கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது"

-தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு போலவே முன்னால் அமைச்சர் 

 வைத்திலிங்கம் பேச்சில் வாய் பிளந்த தொண்டர்கள் ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் டி டி வி  தினகரனைக்

காட்டிலும் .செம்மையாகப் பேசிய .முன்னால் அமைச்சர் வைத்திலிங்கம்  ..ஜெ.ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவை நாங்கள் குடியிருந்த கோயிலாக நினைக்கிறோம் 

இந்திய அளவில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதி பெற்று .

24 மணி நேரமும் மின்சாரம் இருக்கக்கூடிய கொடநாடு பங்களாவில் மின்சாரம் ஏன் நிறுத்தப்பட்டது.. 


இரவு ஒன்பது மணிக்கு மேல் வனத்துறையிடம்தான் கொடநாடு பங்களாவின் சாவி இருக்கும். 

அம்மா செல்ல வேண்டும் என்றாலும், வனத்துறையிடம் சாவி வாங்கித்தான் செல்ல வேண்டும். 

அப்படி இருக்கும்போது எப்படிக் கொள்ளையர்கள் உள்ளே சென்றார்கள்.

 சிசிடிவி கேமரா எப்படி துண்டிக்கப்பட்டது... இப்படிப் பல மர்மங்கள் அதில் இருக்கின்றன. 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 நாள்களில் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவோம்' என அப்போது சொன்னார் இன்றைய முதலமைச்சர். 

ஆனால், 900 நாள்கள் ஆகிவிட்டன, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்.

எங்களைப் பார்த்து `பி டீம்' என்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த வழக்கை விசாரிக்காமல் இருப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமியும், மு.க.ஸ்டாலினும் கூட்டாக இருக்கிறார்களோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். என்றார் 

தி.மு.க-வின் `பி டீம்' எடப்பாடி பழனிசாமி தான். கொடநாடு கொலை, கொள்ளை பற்றி எத்தனையோ ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 





கண்ணிருந்தும் குருடனாய், வாய் இருந்தும் ஊமையாய் இந்த அரசு ஏன் செயல்படுகிறது என்பது தான் கேள்வி. என்றார் 

யார் குற்றவாளியாக இருந்தாலும் எங்களுக்கும், மக்களுக்கும் தெரிய வேண்டும். 

ஓ.பன்னீர் செல்வமும் , டி.டி.வி.தினகரனும் மண் குதிரைகள்' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்.

ஓ.பி.எஸ் என்ற மண் குதிரை தான், நடக்க முடியாத எடப்பாடி பழனிசயசாமியை நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக்கி அழகு பார்த்தது. 

அதேபோல் அண்ணன் தினகரன் தான் எதற்கும் லாயக்கற்ற அவரை முதலமைச்சராக்கினார். 

மண் குதிரை என்று சொல்பவர்கள் தான் எடப்பாடி முதலமைச்சராவதற்கு காரணமானவர்கள்.

இரட்டை இலைச் சின்னம் மட்டும் எடப்பாடி பழனிசயசாமியிடம் இல்லை என்றால், 

அனைத்துத் தொகுதிகளிலும் இரண்டாயிரம் வாக்குகள்கூட அவரால் வாங்க முடியாது. 

ஃபிங்கர் டிப்ஸில் பேசுவார்' என்று முன்னால் அமைச்சர் பொன்னையன் சொல்கிறார். 

ஆனால், கம்பராமயணத்தை எழுதியவர் யார் என்றால் சேக்கிழார் என்பார். 

இப்படி ஒரு முட்டாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக, பிரதமராக வருவார் என்கிறார்கள். 

கோமாளிகளின் கூடாரமாக இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் கட்சி.

பணம் ஒன்று தான் அவர்களுடைய எண்ணம், இரட்டை இலைச்சின்னம் இல்லையென்றால் சந்திக்குச் சந்தி நிற்பார்கள்.

நாங்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துவிட்டோம். இந்த சக்திகளை விட்டு தமிழ்நாட்டை யாரும் ஆள முடியாது. 

எங்களுக்குத் தேவை நீதி, நியாயம். மு.க.ஸ்டாலின் அவர்களே, கோவலன் இறந்ததற்கு கண்ணகி, நெடுஞ்செழிய பாண்டியனிடம் போய் நீதி கேட்டார். 

அம்மா வீட்டில் நடந்த கொலைக்கு நாங்கள் நீதி கேட்கிறோம். 

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். 

ஆனால், இப்போது தெய்வம் நின்று கொல்கிறது, அரசன் காலம் தாழ்த்துகிறான். 

அதற்கு நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள். எங்களுக்கு நியாயத்தை சீக்கிரம் வழங்க வேண்டும்"என்றார் அதிமுக கொடி பிடித்து கொண்டு .

தமிழகம் முழுவதும்  .கொடநாடு பிரச்சனையை ..ஓ.பன்னீர் செல்வம் கையில் எடுத்துள்ளார் ..முதன்முறையாக சிறப்பான வியூகத்தை வகுத்துள்ளார்  .

மேல் உள்ள ஆதரவை  மட்டுமே நம்பி . அரசியல் செய்துவந்த ஓ.பன்னீர் செல்வம் இப்போது ..பலரை நம்பி மோசம் போன பிறகுதான்  ...மக்களை நம்பும் அரசியலைத் துவங்கியுளாார் ...அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது ...

நாம் கூட ..தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும்தான் ஓ.பன்னீர் செல்வம் + டி டி.வி

தினகரன் கூட்டனிக்கு ஆதரவு இருக்குமென்று நினைத்தால் .ஆனால் தமிழகம் முழுக்கவே ...நல்ல கூட்டம் அத்தனை ஊர்களிலும் கூடியுள்ளது  .இது நாமே எதிர்பாராதது ...இதை இப்படியே தொடரும்பட்சத்தில் ..

தமிழகத்தில் ..இந்த அணி ..தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் .மாறாக மீன்டும் .வழிநடத்த வேறு கட்சியை இவர்கள்  நம்பினால் ..அவர்களுடன் கூட்டனி வைத்தால் ..பெரிய சரிவில்தான் இவர்களின் அரசியல் முடியும் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து  .இதில் பொதுநீதி யாதெனில் ஓ.பன்னீர் செல்வம் பதவியில் இருந்தபோது வாய்திறக்கவில்லை இப்போது பேசுவது எடுபடுமா தெரியாது, அப்போதே இந்த விவகாரத்தில் இவர் ராஜினாமா செய்து வெளிவந்திருந்தால் இவரை நோக்கி அரசியல் களம் திரும்பியிருக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...