அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு கால சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை .
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்ததெப்படி’’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி பேசியது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியதன் மூலம் மோடி என்ற சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக, குஜராத் மாநிலத்தின் பாரதிய ஜனதா கடசியின் சட்டமன்ற உறுப்பினரான பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்ததில் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், கேரளா மாநிலம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் . பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றம், மற்றும் குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, சஞ்சய் குமார் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
தையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்ட போது : வழக்கைத் தொடர்ந்த பர்னேஷ் மோடியின் உண்மையான பெயர் மோடி அல்ல. அவர் மோத் வணிக சமாஜ் சமூகத்தை (ஜாதி) சேரந்தவர்.அவர்தனது பெயரை மாற்றியுள்ளார். ராகுல் காந்தி தனது பேச்சில் குற்றம்சாட்டிய யாரும் வழக்குத் தொடரவில்லை. வழக்கு தொடர்ந்தவர்களும் மோடி ஜாதியான சமூகத்தினரல்ல.
அவதூறு வழக்குகள் முழுவதும் பாரதிய ஜனதா கடயவியின் தொண்டர்களால் தொடரப்பட்டவை. அவற்றில் ராகுல் காந்திக்கு எந்தத் தண்டனையும் விதிக்கப்படவில்லை. அவர் கொடிய குற்றவாளியும் அல்ல. ஒழுங்கீனமான குற்றங்களில் அவர் ஈடுபடவில்லை.
அவர் மீதான குற்றச்சாட்டு தண்டனைக்குரிய குற்றமுமல்ல. சமூகத்துக்கு எதிரான குற்றமோ, கடத்தலோ, வன்கொடுமையோ, கொலைக் குற்றமோ அல்ல. அந்த குற்றச்சாட்டு ஜாமீனில் வரக்கூடியது, இரு தரப்பினரும் பேசி தீர்க்கக்கூடியது. ஆனாலும், அதிகபட்சமாக இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல எந்த ஒரு வழக்கிலும், இரண்டாண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதில்லை. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு கால சிறைத் தண்டனைக்குத் தடை விதிக்க வேண்டும். அப்போது தான் அவரால் நாடாளுமன்றம் செல்ல முடியும். இவ்வாறு சிங்வி வாதிட்டார். அதன்
பின்னர், நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கில் விசாரணை நீதிமன்ற நீதிபதி அதிகபட்சமாக இரண்டாண்டு கால சிறைத் தண்டனை விதித்துவிட்டார். ஒரு நாள் குறைவாக விதித்திருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதியிழப்பு ஆகியிருக்க முடியாது. இந்தத் தகுதியிழப்பால் ஏற்பட்ட விளைவுகள் தனிநபர் உரிமையை மட்டுமின்றி, அவரது நாடாளுமன்றத் தொகுதி சார்ந்த மக்களையும் பாதித்துள்ளது. எனவே, இரண்டாண்டு கால சிறைத் தண்டனைக்குத் தடை விதிக்கப்படுகிறது,
அதேநேரம், பிரச்சாரக் கூட்டத்தில் மனுதாரர் பேசியது சரியானதல்ல. பொது வாழ்வில் இருப்பவர் இது போல பேசக் கூடாது. மனுதாரர் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அப்படியிருக்கையில், இது எப்படி தார்மிக ஒழுக்கக் கேடான குற்றாமாகும்?
ஜனநாயகத்தில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஜனநாயகத்தில் நமக்குள் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. ராகுல் காந்தி ஒன்றும் கொடுங்குற்றவாளி கிடையாது. பாஜக தொண்டர்களால் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எதற்கும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ராகுல் காந்தி ஏற்கெனவே இரண்டு நாடாளுமன்ற அமர்வுக்கு செல்லமுடியவில்லை” என்று வாதிட்டார்.
இதற்கு பதில் அளித்த புர்னேஷ் மோடி சார்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி, "அந்த மொத்தப் பேச்சும் 50 நிமிடங்கள் நீடித்தன. தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் அதற்கான ஆதாரங்களும் வீடியோ பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. ராகுல் காந்தி ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்” என்று வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் மூன்று விஷயங்களை அவதானித்தது. அவை:
ராகுல் காந்தி பேசியது ரசிக்கக் கூடியதாக இல்லை என்பதில் சந்தேகமில்லை. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்களின் பேச்சுக்களில் கவனமாக இருக்க வேண்டும். அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரது பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அவர் (ராகுல்) தனது பேச்சில் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
இந்த வழக்கில் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு எந்த விதமான சிறப்பு காரணத்தையும் விசாரணை நீதிமன்றம் குறிப்பிடவில்லை. தண்டனை 1 வருடம் 11 மாதங்கள் வழங்கப்பட்டிருந்தால் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்காது. இறுதி தீர்ப்பு வரும் வரை அந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
மனுவில், ‘‘கடந்த ஜூலை 7-ம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்காவிட்டால், பேச்சுரிமை, கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பது போலாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘‘ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த 111 நாட்களாக அவரால் எம்.பி. பணிகளை செய்ய இயலவில்லை.
மேலும், அந்தத் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்க கூடும். எம்.பி. பதவி தகுதியிழப்பால் அவரால் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க முடியவில்லை. தற்போது நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்க முடியவில்லை. எனவே, ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை வைக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தீர்ப்புக்குப் பின் டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்திக்கு கட்சியின் அகில இந்தியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மலர்க் கொத்து வழங்கி வாழ்த்தும் தெரிவித்தார்.
ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பர்னேஷ் மோடி பேசிய போது, ‘‘இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம். செஷன்ஸ் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தைத் தொடர்வோம்’’ எனத் தெரிவித்தார்.
கருத்துகள்