நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, ராகுல்காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டது மக்களவைச் செயலகம். வயநாடு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு தடை நிறுத்தி வைக்கப்படுகிறது அவர் பதவியில் தொடரலாமென -உச்சநீதிமன்றம்மோடி பெயர் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு.
உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் .4 ஆம் தேதி ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்மூலம், தகுதியிழப்புக்கு ஆளான ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரலாம் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோடி பெயர் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை, புத்தரின் மேற்கோளைக் கூறி பிரியங்கா காந்தி வரவேற்றுள்ளார்.
‘உண்மையை மறைக்க முடியாது’ - இந்த உத்தரவை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "மூன்று விஷயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், நிலவு, உண்மை - கௌதம புத்தர்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், நியாயமான தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ளவர், "வாய்மையே வெல்லும்" என்றும் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ‘எது நடந்தாலும் எனது கடமை ஒன்றே... இந்தியாவின் எண்ணத்தை பாதுகாப்பது’ எனத் தெரிவித்துள்ளார்.கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், "சபாநாயகர் இப்போது முடிவு எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும், உலகமும் சபாநாயகரை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. தாமாகவே தகுதி இழப்பை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அதுநான் நமது தேவை நாட்டுக்கானத் தேவை. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் நீதிமன்ற உத்தரவு நகலுடன் சபாநாயருக்குக்கோரிக்கை வைப்பார்கள்" எனக் கூறினார்.
“உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ராகுல் காந்திக்கு மிகப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. ராகுல் காந்திக்கு எதிரான சதிச்செயல் இன்று தோல்வியடைந்துள்ளது. நாங்கள் சபாநாயகரைச் சந்தித்து ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரினோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் சிங்கம் மீண்டும் கர்ஜிக்க இருப்பதால் நாங்கள் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் ராகுல் காந்தியின் தகுதி இழப்பை சபாநாயகர் ரத்து செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் தண்டனைக்கு இடைக்காலத் தடை: கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, "இந்த வழக்கில் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு எந்த விதமான சிறப்பு காரணத்தையும் விசாரணை நீதிமன்றம் குறிப்பிடவில்லை. தண்டனை 1 வருடம் 11 மாதங்கள் வழங்கப்பட்டிருந்தால் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்காது. இறுதி தீர்ப்பு வரும் வரை அந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். விசாரணை நீதிமன்ற உத்தரவின் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. அது ராகுல் காந்தி தனது பொது வாழ்க்கையைத் தொடரும் உரிமையைப் பாதிப்பது மட்டும் இல்லாமல், அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமையையும் பாதித்துள்ளது” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது
கருத்துகள்