திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக இன்று வருண்குமார் இ.கா.ப., பொறுப்பேற்றுக் கொண்டார்.
திரு வருண்குமார் ஐபிஎஸ் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வந்திதா பாண்டே ஐபிஎஸ் இவரது மனைவியாவார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் பணி ஏற்பு முடிந்த பின் புதிய தொலைபேசி எண் வெளியீடு
திருச்சிராப்பள்ளி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக டாக்டா். வீ.வருண்குமாா் ஐபிஎஸ் இன்று ( 11.08.2023 ) பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற பின்னர் வருண்குமார் தெரிவிக்கையில்ல் :
திருச்சிராப்பள்ளி மாவட்டொத்தில் தேங்கியுள்ள குற்ற வழக்குகள் முழுவதும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, 94874 64651 என்ற பிரத்தியேக மொபைல் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் மூலமும் தங்களது தகவல்களை உடன் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளாா். காவல்துறையில் ஒரு தகுதியான சாமானிய மக்கள் மீது மிகுந்த பற்றுக்கொண்ட ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி இதற்கு முன் இவர் பணி செய்த திருவள்ளூர் மாவட்டத்தில் மீன் பண்ணையில் வேலை செய்த பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற வடநாட்டு இளைஞர் ஒருவரை அந்தப்பெண் தற்காப்புக்காக முதலில் தாக்க , பின்னர் அவரது கணவரும் சேர்ந்து தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.
பழங்குடி வமூகத்தைச் சேர்ந்த பெண்ணான அமுதா என்பவர் மீது அப்பகுதி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்த நிலையில் திருவள்ளூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளராக வருண்குமார் இந்த வழக்கை தீர விசாரித்து தற்காப்புக் காரணத்தை மேற்கோள் காட்டி இந்தியத் தண்டணைச் சட்டம் பிரிவு 100 ன் கீழ் அந்தப் பெண்ணை விடுதலை செய்தார்.
நியாயம் அறிந்தவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் தான் சட்டத்திற்கு பெருமை.
இவர் போல நீதிநெறி அறிந்த மனச்சாட்சி உள்ளவருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில்
நமது பாராட்டுக்கள் அது திருச்சிராப்பள்ளியிலும் தொடரட்டும்.
கருத்துகள்