முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்களை விற்று சித்திரம் வாங்கும் நெய்வேலி மக்கள், பற்றி எறியும் பழுப்பு நிலக்கரி உண்மை நிலவரம்

தமிழ்நாட்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி) நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு வழங்கிய விவரங்கள்


ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கும் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்.எல்.சி இந்தியா மட்டுமே

என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு தேவையான நிலங்கள், நடைமுறையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி, மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்படுகின்றன. நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் பிற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றப் பயன்கள் முழுமையாக வழங்கப்படுவதுடன் வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது, "தொழில் நோக்கங்களுக்காக தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் சட்டம், 1997"ன் படி, முதல் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி இழப்பீடு நிர்ணயம், இரண்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் ஆர்.எஃப்.சி.டி.எல்.ஆர் சட்டம், 2013 இன் மூன்றாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விதிகளுடன் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுரங்க மேம்பாட்டிற்குத் தேவையான சுமார் 1054 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியான மின் உற்பத்தி தக்கவைத்துக் கொள்ளப்படும். இது மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்யும்.


விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் (25.08.2022 தேதியிட்ட சிறப்பு அரசாணை நிலை எண் 185, குறைந்தபட்ச நில இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.23 லட்சம் மற்றும் மீதமுள்ள ரூ.2 லட்சம் முன்பணமாக வழங்கப்படுகிறது)

(ii) ஊரகப் பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்படும் வீட்டுமனை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 லட்சம்.

(iii)      நகர்ப்புறங்களிலிருந்து கையகப்படுத்தப்படும் வீட்டு நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.75 லட்சம்.

என்.எல்.சி.ஐ.எல். திட்டங்களுக்கு, நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பொருந்தக்கூடிய மொத்த நில இழப்பீட்டுத் தொகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையின் அடிப்படையில் டெபாசிட் செய்யப்படுகிறது. நில உரிமையாளர்களிடமிருந்து தேவையான விளக்கங்களைப் பெற்ற பின்னர் நில எடுப்பு அலுவலர் தனிப்பட்ட நில உரிமையாளர்களுக்கு மின்னணு பரிவர்த்தனை (இ-பேமெண்ட்) மூலம் நில இழப்பீட்டை வழங்குகிறார். இவை தவிர புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ஏற்பாடுகளின் கீழ் பணப்பயன்களும் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளின்படி வழங்கப்படுகின்றன.


நெய்வேலி மண்டலத்தில் திட்ட பாதிப்பு நபர் (பிஏபி) களுக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகள் பின்வருமாறு:

வ.எண்

ஆண்டு

நிரந்தர பணி

ஏஎம்சி அல்லாத வேலை

ஏஎம்சி வேலை

மொத்தம்

1

2009க்கு முன்

1827

1510

--

3337

2

2009-2019

--

1214

--

1214

3

2019-2021

--

706

--

706

4

2021-22

--

265

--

265

5

2022-23

--

180

42

222

6

2023-24

-

-

154

154

மொத்தம்

1827

3875

206

589

இதுவரை 5126 ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அடையாள அட்டைச் சட்டம் 1947-ன் கீழ் 12(3) ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 517 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிறுவனத்தின் பணிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெய்வேலியில் ஒப்பந்ததாரர்களால் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். நெய்வேலியில் உள்ள சுரங்கங்களுக்கு 192 சுரங்க சர்தார், சர்வேயர் மற்றும் மேற்பார்வையாளர்  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை என்.எல்.சி.ஐ.எல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ளூர் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில் விண்ணப்பித்த 39 திட்ட பாதிப்பு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.எம்.இ ஆபரேட்டர் உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு (3 ஆண்டு பயிற்சி திட்டத்தின் கீழ்) முறையே 238 பயிற்சி இடங்கள் மற்றும் 262 பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பை என்.எல்.சி.ஐ.எல் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஒன்று வீதம், 1000 பி.ஏ.பி.க்களுக்கு தொடர்ச்சியான ஒப்பந்த வேலை. இதில் 206 ஏ.எம்.சி வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. குரூப் சி மற்றும் டி பிரிவுகளில் நிரந்தர பணிக்கான எழுத்துத் தேர்வில் பி.ஏ.பி.க்களுக்கு போனஸ் 20 மதிப்பெண்கள். டி.என்.பி.எஸ்.சி.யில் (குரூப்-1, குரூப்-2, குரூப்-4) போட்டித் தேர்வுகளுக்கு பி.ஏ.பி.க்களுக்கு சிறப்பு பயிற்சி. தொழில்நுட்ப ரீதியாக தகுதிவாய்ந்த பி.ஏ.பி.க்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள்.

மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையில் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ஊராட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கூட்டங்களை நடத்தி நில உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது

மேலும், கிராம மக்களுடன் முறைசாரா கூட்டங்கள் பல முறை நடத்தப்பட்டன.  தலைமைச் செயலாளர் மற்றும் தொழில் துறை ஏ.சி.எஸ்., தலைமையில், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கூட்டம் நடைபெற்றது .

வேளாண்மை மற்றும் விவசாயிகள்  நலத்துறை அமைச்சர்,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், நில உரிமையாளர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு இவ்வளவு இழப்பீடு வழங்கும் இந்தியாவின் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்.எல்.சி இந்தியா மட்டுமே. முதல் முறையாக, ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ஒரு வீடு இழந்தால், நில உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு திருத்தப்பட்ட புதிய சலுகைகளை பெரும்பாலான நில உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், என்.எல்.சி.ஐ.எல் தங்கள் நிலங்கள் மற்றும் வீடுகளை இழக்கும் உரிமையாளர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை சரி செய்யவும், அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரச்னைகளை சுமூகமாக தீர்க்கவும், நெய்வேலியில் குறை தீர்க்கும் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.       இந்த நிலையில்,   நெய்வேலி விவகாரம் சார்பாக 

நமக்குத் தெரிந்த சிலவற்றைப் பார்க்கலாம், இழப்பீட்டுப் பிரச்சனை முழுக்க முழுக்க  சட்டபூர்வமாக முடிந்து விட்டால் அந்த இடத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.

காலியாக விட்டு வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்  பணிகள் தொடங்கும் வரை அந்த நிலத்தை பழைய உரிமையாளர் கண்டிப்பாக பயன்படுத்தத் தான் செய்வார்.

அதிலும் விவசாயம் மட்டுமே  பழகிப்போன மக்களுக்கு அந்த இடத்தை காய்ந்த பாலைவனமாக அப்படியே விட்டு வைக்க இயலாது அதற்கு மனசு வராது.

ஒன்று பயிர் வைத்திருக்க அனுமதித்திருக்கக் கூடாது அல்லது. அறுவடை முடியும் வரை காத்திருந்திருக்க வேண்டும்.


நெய்வேலி சுரங்கத்திற்காக என்எல்சி   தொடர்ந்து நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலேயும் நிலத்தின் மதிப்பும் இழப்பீடும் கூடிக் கொண்டே தான் இருக்கும்.

இதில் பின்னாளில் நிலம் கொடுத்து அதிக இழப்பீடு பெறுபவர்களைப் பார்த்து பழைய நில உரிமையாளர்கள் தங்களுக்கும் அதே போல புதிய மதிப்பிலான இழப்பீடு   கோருவார்கள். நெய்வேலி சுரங்க சுற்று வட்டாரப் பகுதியில் தொடர்ந்து நடக்கிற சம்பவங்கள் தான் இவை

எல்லாவற்றிற்கும் மூலகாரணம், என்எல்சி என்கிற நிறுவனத்தின் நேர்மையின்மை. அது எந்தக் காலத்திலும் அந்த நடுநாட்டு மண்ணின் மைந்தர்களிடம் நேர்மையை, நன்றியை ஒரு அமைப்பும் காட்டியது கிடையாது.

எவ்வளவோ முயன்றும் ஒரு பகுதியில் நிலங்களை எடுக்க முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். 

உடனே தரகர் போல செயல்படும் சில அதிகாரிகளை நாசுக்காக களத்திலிறக்கி விடும். அவர்கள், நிலங்களை கொடுக்க மறுப்பவர்கள் கூட்டத்தில் யாருக்கு உடனடியாகப் பணத் தேவை என்பதை தெரிந்து ஆழம் பார்ப்பார்கள்.

"எப்படியும் நிலத்தை எடுக்கத்தான் போகிறார்கள். அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டு முதல் ஆளாக கொடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பும், நல்ல இழப்பீட்டுத் தொகையும் மற்றும் அருமையான மாற்றிடமும் கிடைக்குமென்று ஆசை வார்த்தையும்  காட்டுவார்கள்.

இப்படியே நான்கு ஐந்து பேரை வலையில் விழ வைத்து காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். அதன் பிறகு   

மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக என்எல்சி நிறுவன அதிகாரிகளின் வலையில் விழத் துவங்குவார்கள். 

ஆனால் கடைசி வரை எந்த நடுநாட்டு மண்ணின் மைந்தனுக்கும் நிரந்தர வேலை வாய்ப்பை தராது. கேட்டால் ஒட்டுமொத்த சீனியாரிட்டி அது வட மாநிலத்தவர் தகுதியானவர்கள் நிறைந்து விட்ட நிலை என்பார்கள்.

ஒட்டு மொத்த சீனியாரிட்டி என்றால்  நிலம் கொடுத்த ஒருவனுக்கு வேலை கிடைக்க நாற்பதாண்டுகள் ஆகும்.

இதுவும் ஒரு  மோசடித்தனம் தானே அதைப் புரிந்து கொள்ளாமல் தான்,  ஒப்பந்தத் தொழிலாளர் என்று போய் நெய்வேலிப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இன்றும் வருடக் கணக்கில் கூலித் தொழிலாளர்களாகவே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்எல்சி என்கிற நிறுவனம் நான்கு பேருக்கு வேலை கொடுத்தது என்றால், பல்லாயிரம் பேரின் வாழ்க்கையை இப்படித்தான் ஒப்பந்த  தொழிலாளர்களாகவே வருடக் கணக்கில் பாழாக்கி வருகிறது. 

இதையெல்லாம் சகல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள்  கண்டு கொள்ள மாட்டார்களா என்று கேள்வி தான் சாமானிய மக்கள் மத்தியில் எழும். 

பிரச்சனை எழும்போது போராட்டத்தில் பாமக சார்பில் முதலில்  குதிப்பார்கள். சமரசம் பேசுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை  நிபந்தனைகளை வைப்பார்கள்.

ஒன்று இரண்டிற்கு கொஞ்சம் சுமாரான வகையில் தீர்வு கிடைத்து விட்டாலே போதும், அதோடு மக்களின் ஆவேசமும் குறைந்து விடும் அரசியல் கட்சி தலைவர்களும், என்எல்சிக்கு விசுவாசியாய் மாறிக்  கிளம்பி விடுவார்கள். இதற்கான லாபம் தனி. 

இப்போது கூடப் பாருங்கள் மூன்று கோஷங்கள் என்எல்சி பகுதியில் தொடர்ந்து வலிமையாய் ஒலிக்கும் நிலை

இனிமேல் என்எல்சி நிறுவனத்திற்கு ஒரு இன்ச் நிலத்தைக் கூட தர மாட்டோம் என்பது.

இரண்டாவது, நிலமெடுத்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை கொடுத்தே ஆக வேண்டும் என்பது,

மூன்றாவது கோஷம்  சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி ஏரியாவையே பாலைவனமாக்கும்  என்எல்சி நிறுவனத்தை இந்த பகுதியில் இருந்தே விரட்டி அடிக்க வேண்டும் என்பது 

புரியும் படி நமது வாசகர்களுக்குச் சொன்னால் ஒரு பக்கம் நிறுவனத்தை மூட வேண்டும் என்பார்கள். இன்னொரு பக்கம் அதே நிறுவனத்தில் நிரந்தர வேலையும் கேட்பார்கள்.  

எங்கள் நிலத்தையும் எடுக்க வேண்டாம் நிரந்தர வேலையும் வேண்டாம் இருக்கிற வரை நிலக்கரியை, (அதுவும் பழுப்பு நிலக்கரி) வெட்டிவிட்டு கிளம்புங்கள் என்று உறுதியான நிலைப்பாட்டை கடலூர் மாவட்ட மக்கள் எடுக்கும் வரை கண்ணாமூச்சி ஆட்டம் மற்றும் அரசியலும் தான் நடக்கும் 

நடுநாட்டு மண்ணின் மைந்தர்களுக்கு அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன என்பதை ஒரு சில விஷயங்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

வீடுகளை இழந்து மாற்று இடம் தரப்பட்டவர்களுக்கு அந்த இடத்திற்கான வரி செலுத்தும் வருவாய்த்துறை வழங்கும் பட்டாக்களைக் கூட இந்த அரசியல் கட்சிகளால் பெற்றுத் தர இயழவில்லை.

பட்டா இல்லாததால் வங்கிகள் வீடுகள் கட்ட கடன்  கொடுக்காது. நெய்வேலி பகுதியில் காலங்காலமாக சாதிக்கப்பட்டு வரும் சாதனை இது.

நெய்வேலியில் நிரந்தரப் பணியில் வெளி மாநிலத்தவர்கள் ஏராளமாக வந்து குவிவார்கள். ஆனால் இந்த வேலை வாய்ப்புகளை எப்படிப் பெறுவது என்பது பற்றி உள்ளூர் மக்களுக்கு துளியும் கூட தெரியாது.

வடமாநில அதிகாரிகள் லாபி முன் உள்ளூர் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு எங்கும் எடுபடவே எடுபடாது.

என்எல்சி நிறுவனத்தில் எத்தனையோ தமிழர்கள் உயர்ந்த பதவியில் இருந்திருக்கிறார்கள். எந்தப் புண்ணியவானும் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புக்காக துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டதே கிடையாது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு கூட மிக உயர்ந்த இடத்தில் இருந்த ஒரு முக்கிய தமிழ்நாட்டின் அதிகாரி கூட இப்படித்தான். இந்த லட்சணத்தில் அவர் மண்ணின் மைந்தர் வேறு. நல்லது செய்யாவிட்டாலும் உள்ளூர் மக்களுக்கு எவ்வளவு கெடுதல் செய்ய முடியுமோ அவ்வளவு கெடுதலையும் செய்து விட்டுத் தான் போனார்.   

காவிரிப் பிரச்சனை என்றால் கர்நாடகாவில் எல்லோரும் எப்படி ஒற்றுமையாக நிற்கிறார்களோ அதுபோன்ற ஒற்றுமை கடலூர் மாவட்ட அரசியல்வாதிகளிடமும் கிடையாது  தொழிலாளர்கள் மத்தியிலும் கிடையாது அதுவே என் எல் சி யின் பலம் . 

ஒருவர் போராட இறங்கினால் அவர் பின்னாடியே அவர் காலை வாரி என்எல்சி இடம் நல்ல பேரை வாங்க இன்னொருவர் இறங்குவார்கள்.

அப்புறம் முக்கியமான விஷயத்தைச்  சொல்லியே ஆகவேண்டும். 

என்எல்சி கொடுக்கிற மின்சாரத்தை தமிழ்நாட்டின் அத்தனை பகுதிகளிலும் கேட்பார்கள். ஆனால் என்எல்சியால் உள்ளூர் மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் கடலூர் மாவட்ட மக்களைத் தவிர வேறு யாருமே அவர்கள் பக்கம் குரல் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

கடலூர் மாவட்டத்திற்கே உண்டான சாபக்கேடு இது தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த