செய்தியாளர் :- ஆர்.சரத்பவார் பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட 16 பால் மலைப்பாம்புகள், ஒரு கருப்பு அணில் பறிமுதல்
ரகசிய தகவலின் அடிப்படையில், பாங்காக்கில் இருந்து வந்த ஒரு பயணியிடம், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர்.
அவரது உடைமைகளைப் பரிசோதித்தபோது, 16 பால் மலைப்பாம்பு குட்டிகள்,கருப்பு அணில் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவை மீட்கப்பட்டு, சுங்கச் சட்டம், 1962 இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் சிவபிரகாஷ் வீரேஷ் பட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்