முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் சீமானுக்கு எதிரான புகாரை இரண்டாம் முறையாக வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி பெங்களூருக்கு ஓடடம்

நடிகரும் இயக்குநருமான நாம் தமிழர் கட்சி நடத்தும் செபஸ்தியான் சைமன் என்ற செந்தமிழன் சீமானுக்கு எதிராக  விஜயலட்சுமி நடத்திய ஆட்டம்,


க்ளைமாக்ஸுக்கு ஒரு கட்சியின் மூத்த  தலைவர் முயற்சியால் முடிவுக்கு வந்தது, சண்டைக்கு. முக்கிய காரணம்  வீரலட்சுமி தான் என்பதும் வீரலட்சுமியை களத்தில் இறக்கியது யார் என்பதை பத்திரிக்கைகள் அறியும் என்றாலும் அதை மக்கள் அறியாத நிலை நள்ளிரவில் புகாரை வாபஸ் பெற்று  பெங்களூர் புறப்பட்டார் விஜயலட்சுமி! அவரது பூர்வீகம் இலங்கை வாழ் பிள்ளை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திடீரென சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, 12 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வராக இருந்த காலஞ்சென்ற ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் கொடுத்த புகாரை தூசு தட்டி அதே பஞ்சாயத்தை மீண்டும் கூட்டினார். அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக,


தமிழர் முன்னேற்றப் படை என்ற வெகுஜன மக்கள்  அறியாத கட்சியின் தலைவர் வீரலட்சுமியும் அவருடன் களத்துக்கு வந்தார். சென்னை காவல்துறையினரும் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர் பின்  மருத்துவப் பரிசோதனை நடத்தியது நீதித்துறை நடுவர் முன்பு சி ஆர் பி சி 161 பிரிவு மூலம் வாக்குமூலம் கொடுத்தார்  பின் சம்மன் அனுப்பி சீமானையும் விசாரணைக்கு அழைத்தது சென்னை காவல்துறை.

அந்த  விசாரணையானது அப்போது நடிகர் சீமான் விஸ்வரூபம் காட்டினார். 12 ஆண்டுகளுக்கு முந்தைய வாபஸ் பெறப்பட்ட ஒரு வழக்கு விவகாரம் இப்போது ஏன் தூசு தட்டப்படுகிறது? காரணம் கேட்டார் நடிகர் சீமான். காவல்துறை விசாரணைக்குப் போக மறுத்தார். நீதிமன்ற ஒப்புதல் இருக்கிறதா? என எதிர்கேள்வியும்  கேட்டார்.         நடிகர் சீமான் தன் பக்கம் உள்ள வாதங்களை அடுக்கிய நிலையில், வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே உக்கிரமான  மோதலும் வந்தது இடதுசாரிகளின் ஜனநாயக மாதர் சங்கத்துக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே உக்கிர மோதல்- கைது என அன்றாடம் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் ஒரு ஒன்றுமில்லாத விஷயம் ஊடக நண்பர்கள் ஊதிப் பெரிது படுத்தியதால் நகர்ந்தது இந்த விவகாரம்.


இப்போது க்ளைமாக்ஸ் சண்டை நடக்கிறது : சீமான் ஒரு திரை நட்சத்திரம்.. விஜயலட்சுமி ஒரு திரைநட்சத்திரம்.. அதனால் என்னவோ க்ளைமாக்ஸ் காட்சிகள் ஆக்‌ஷன் ரேஞ்சில் தான் இருந்தன பார்ப்பதற்கு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி என என எத்தனை பேர் வந்தாலும் ஒருவரையும் விடாமல் வெளுத்து எடுத்தார். ஒரு கட்டத்தில் கட்சியாவது ஒன்றாவது வெட்டிப் போட்டு போயிடுவேன்.. என எகிரிப் பேசிய நிலையில் வீரலட்சுமியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவேன் என்றெல்லாம் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளாக நடிகர் சீமான் பேட்டிகள் அமைந்திருந்தன.


இறுதி சீன் வந்தது : இதன் உச்சமாக யாருமே எதிர்பாராத திருப்பமாக, நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி நடிகர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக் காவல்நிலையத்தில் வந்து தெரிவித்தார். அப்போது பேசியவர் சீமானை எதிர்த்துப் போராட முடியவில்லை; எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என அறிவித்து விட்டுப் பெங்களூரு போய்விட்டார். திரைப்படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கலந்த ஒரு கலவையான படைப்பு போல இந்த விவகாரம் முடிந்துவிட்டது நடிகர் சீமான் Vs நடிகை விஜயலட்சுமி மோதல்!  இவ்வளவு பிரச்சனைக்கும் முக்கிய காரணம் அந்த வீரலட்சுமி தான்.. அவரால் மனரீதியாக மிகுந்த வேதனை அடைந்தேன் என விரக்தியுடன் கூறிய. நடிகை  விஜயலட்சுமி பெங்களூரு செல்கிறேன் இனி தமிழ்நாட்டிற்கு வர மாட்டேன் என்று நடிகைக்கான சாமுந்திரிகா லட்சனத்துடன் அதற்கான கிளிசரின் கண்ணீருடன் கிளம்பினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் மீது புகார் கூறி 12 ஆண்டுகள் போராடிய நடிகை விஜயலட்சுமி இரண்டாவது  முறையாக தமது புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார்.  நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும்  நடிகர் சீமான் செப்டம்பர் மாதம்  18 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்

சென்னை வளசரவாக்கம் காவல்துறை  அளித்த விளக்கம் வருமாறு விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப காவல்துறை முடிவு 

பெண்கள்  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப முடிவு செய்யப்படுள்ளது, 

நடிகை விஜயலட்சுமி புகாரை இரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது நடிகர் சீமான் தரப்பு  பெங்களூரில்  சொகுசாகவே வாழ்ந்துவிட்டு  வாங்கிய பணத்தை செலவு செய்து முடித்ததும் திரும்ப வந்து காவல் நிலையத்தில்  புகார் கொடுப்பது தான் நடிகை விஜி என்பது ஒரு தரப்பில் வாதம் .  இப்போது வீரலட்சுமி ஒத்தைக்கு ஒத்தைன்றாங்கோ







ஆனா நீ உன் படையோட வா, நான் என் படையோட வான்றாங்கோ.

எது சரியா இருக்கும்?

ஷத்திரிய வன்னியர்ன்னு சொன்ன  சொல்லோ டங் சிலிப் டைப்படிச்சதை பலர் சென்னை மொழியில் கண்டுகினீங்களா?

முதலியார் என் மாமனாருன்றாங்கோ, தன்னை வன்னியருன்றாங்கோ.

அப்போ இவங்க பிள்ளை என்ன ஜாதின்னு சொல்லுவாங்கோ?

இதுவே மக்கள் தற்போது விவாதிப்பதாகும் 


சரி. விவகாரத்திற்கு வருவோம். எல்லோருக்கும் ஒரு சிறியதோ அல்லது பெரியதோ ஒரு கூட்டம் இருக்குன்னா நீங்கள் சம்பாதிங்க கூட இருக்கறவங்களும் ஜாதிகாரர்களும் ஒருத்தரை ஒருத்தரை ஆங்காங்கே அடித்துக் கொண்டு சாகணுமா?

இங்கு சிக்கலே அனைத்து தமிழ் ஜாதிகள் பெயரிலும் ஒளிந்துள்ள சில நாடகக் கூட்டங்கள் கொக்கரிப்பது தான்.வாழ்க்கை பயணத்தில் ஒரு முறை தவறு செய்யும் போது காலம்  இன்னொரு வாய்ப்பை தரும்.அது நடிகை விஜலட்சுமிக்கும் வந்தது.

 நாம அதுலயும் தவறு செய்யும் பட்சத்தில்  அதிலிருந்து மீள ஒரு எச்சரிக்கையை  அடையாளம் காட்டும்.அப்படித்தான் இப்போது அந்தத் தலைவர் வழி காட்டியுள்ளார்,

மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பட்சத்தில்  மீளவே முடியாத சிக்கல்களையே காலம் இவர்களுக்குப் பரிசாக கொடுக்கும்....இது விஜயலெட்சுமிக்கும் பொருந்தும் தானே ...!?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...