முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களின் தற்போதய தேவை ஊழலற்ற நேர்மையான ஜனநாயகமா? அல்லது பழமையான ஜனாதனமா? விடை தெரியாத நிலை

 தமிழ்நாடு விளையாட்டுத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக,டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டிங்கரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோபால் கிருஷ்ணா, மூத்த எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், திரைப்படக்  கலைஞர்கள், இசைப் பாடகர்களென 262 பிரபல நபர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளதில், "2022 ஆம் ஆண்டு ஜாகிர் அப்துல்லா வசந்த் எதிர் யூனியன் ஆப் இந்தியா  வழக்கில் சமுதாயத்தில் ஒருவர் பிரிவினையையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறாரெனில் சம்பந்தப்பட்ட அரசு புகாரளிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்காமல், அந்த நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய அதிகாரமுள்ளதென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிததுள்ளதனால், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

மட்டுமல்லாமல், அரசும் காவல்துறையும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் புகார் கொடுக்கவில்லை எனில் அது உச்சநீதிமன்ற வழக்கில் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். அதனால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தாமாக முன்வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.         இதில் கூர்நோக்க வேண்டியது யாதெனில்
தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம்.உள்ளிட்டஇரு மாநிலங்களையும் கடந்த 400 ஆண்டுகள் என்ற அளவீட்டின் படி வணிகம், பொருளாதார மற்றும் ஆன்மீகம் சார்ந்த காரணிகளால் மட்டும் ஆய்வுகள் செய்து சில நூல்களை வெளியிட்டால், இந்தியாவில் பத்தே ஆண்டுகளில் மாற்றத்தைக் கண்டு விடும்.   கடந்த காலத்தில் நடந்த நிகழ்விது அதை மீண்டும் நினைவூட்டுவோம் இராமர்  கடல் நடுவில்  பாலம் கட்டினார் அதுவே ராமர் பாலம்  அது சேதுபாலம் இது வந்த செய்தி..முன்னால் தமிழ்நாட்டின் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியிடம் இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் அப்போது கேள்வி. எழுப்பியபோது 'அவர் எந்தக் கல்லூரியில் படித்து பொறியாளர் பட்டம் பெற்றார்''. என்ற ஒரு பதில்.திரும்பக் கேட்கவே..

அதைத் தொடர்ந்து வட இந்தியா முழுவதும் சாமியார்கள் மத்தியில் ஒரே  கொந்தளிப்பு..
கலைஞருக்கு எதிராக கண்டனக் குரல்களும். போராட்டம் இப்படிப் பல நிகழ்வுகள் விஸ்வ ஹிந்து பரிஷித்தின் தலைவராக உள்ள வேதாந்தி என்ற சாமியார் ஒருவர் வெகுண்டெழுந்தார்...அப்போது டாக்டர் கலைஞர் மு

கருணாநிதியின்  தலையைச் சீவினால் அவருக்கு 5 லட்சம், 10 லட்சம் எனச் சீறினார். அந்தநாள்  மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த  விழா..திமுக

பொதுக்கூட்டம்  தொண்டர்களால் நிரம்பியது. ஒரே பரபரப்பு..தலைவர் மேடைக்கு வருகிறார் விசில் பறக்கிறது.. உடன்பிறப்புக்கள் மத்தியில் ஒரே பரபரப்பு ,  புரிந்து கொண்டார் டாக்டர் கலைஞர். தொண்டன்னின் மன ஓட்டத்தை அறிந்தவர்

எதிரில் மைக்கை  ஆள் காட்டி விரலில் லேசாக இரு முறை தட்டி உடன்பிறப்புக்களே!! என்றார்... என்னை ஒருவர் தலை சீவப் போவதாகக் கூறியிருக்கிறார். நான்  சீப்பை எடுத்து வரவில்லை , அப்படியே இருந்தாலும் எனக்கு முடி இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். 

ஆக, நான் என் கையால் என் தலையை அழுத்தி, நீவிக்கொள்கிறேன்.. அந்த இந்து தலைவருக்கு சிரமம் வேண்டாம் என்றாரே  பார்க்கலாம்... அதுவரை முக இறுக்கத்துடன் இருந்த திமுக தொண்டன் அதை விட்டுவிட்டு தன் தலைவனை கொண்டாடி மகிழ்ந்தது கடந்த கால நிகழ்வு

இது தான் திமுக  தலைவர் டாக்டர் கலைஞர் இதுதான் திமுக போன்ற ஒரு பேரியக்கத்தை வழி நடத்தும் பக்குவம் ஆகும்.  தமிழ்நாட்டில் 1000 ஆண்டுக்கு முன் 

சிலப்பதிகாரம் காப்பியம் ஒரு வணிகர் குடும்பம் சார்ந்த நூல். அது உற்பத்தி சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்குதல் என்ன என்ற ஆய்வுகள் அடிப்படையில் உத்திரப்பிரதேசத்தில் உருவான சில புதினம், மற்றும் காப்பியம், கவிதைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு ஒப்பீட்டு ஆய்வுகள் செய்ய வேண்டும்.

அது தான் சமூக நீதி சமத்துவம் கோரும் இந்தியாவிற்கு நற்பயன் வழங்கும்.

ஏனையவை வெற்று ஒலி ஒளி அதாவது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் கடநத 2000 ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகின்றன என்பதை நாட்டில் பலரும்  நாக்பூரில் உள்ள ஒரு இயக்கத் தலைமையும் கூட ஏற்றுக் கொண்டார்கள்.

எது பாரம்பரிய தர்மமோ அது ஜனாதனம்னா என்ன?அதானிக்குத் திறக்காத வாய் தற்போது ஜனாதனிக்குத் திறக்குமாம். என்பது மாற்றுச் சிந்தணையாளர்கள்  கருத்து 

அது எந்த வாய்?வேதம் சொல்லிப் பிழைக்காத பிராமணர்கள் அனைவரும் சூத்திரர்களாகி விட்டார்கள்.  தற்போதய நிலையை நாம் இங்கு உற்றுநோக்க வேண்டும் 

பிராமணர்கள் கடல் கடந்துப் போகக் கூடாது. ஆனால் போய் விட்டார்கள்.

உஞ்சவிருத்தி எனும் அந்தந்த வேளைக்கு மாத்திரம் பிச்சை எடுத்தே சாப்பிடவேணும். அதுவம் மாறி விட்டது.

ஆகையால் சிறந்த முற்போக்காளர்கள் இங்கு பிராமணர்கள் தான். 

வேதம் கூறிய அனைத்தையும் உடைத்தவர்கள். அவர்களைப் போய். இங்கு விவாதம் செய்ய இப்போதய தேவை கடந்த நான்காண்டுகாலம் நடக்கும் அரசியல் சூழல் உண்மையில் வர்ணாஸ்ரமம் அல்லது மனூ தர்மம் சொல்வது தான் என்ன?ஜனாதன தர்மம் அல்லது புராதன தர்மம் என்பது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். இதை வெறுக்கும் சில மக்களுக்கு சரியான நிலை அல்லது பாடம் தெரியவில்லை என்பதாலேயே இந்த விரிவான பதிவு. அவர்கள் மத மாற்றக்  கும்பல்களின் கைப்பாவையாக தலைவிரித்து ஆடும் ஆட்டம் ஓரியூரில் சேதுபதி மண்னர் காலத்தில் நடந்த நிகழ்வு தான் இங்கு நினைவில் வருகிறது. 

பிராமணன் தலையில் பிறந்தான்.எனவும்  

ஷத்ரியன் தோளில் பிறந்தான். எனவும் 

வைசியன் தொடையில் பிறந்தான். எனவும்,

சூத்திரன் பாதத்தில் பிறந்தான்.எனவும் 

வரும் விவாதம் குறித்த பார்வை இது.

 சமஸ்கிருதம் தெரியாத படிக்காத பல மக்கள் வேதங்களை யாரோ சொல்லக் கேட்டுத் தூற்றுகின்றனர்.. பொய்யை பலமுறை சொல்லிச் சொல்லி அதை உண்மை போல் ஆக்கி அதை பலரும் உளருகிறார்கள். என்பது இங்கு புரிகிறது,

ஆனால் உண்மை என்ன..?

புருஷ சூக்தத்தில் வரும் ஸ்லோகம் சொல்வதிது..

"பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:, பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத..."

இந்த வரிகளுக்கு அர்த்தம் யாதெனில்..

பிராமணணுக்கு முகமே பலம்..

வேதம் ஓதும் பிராமணன் முக லக்ஷணத்தோடு விளங்கவேண்டும். மேலும் தன் வாயால் நல்லாசி வழங்கவும். நல் உபதேசம் செய்யவும், நல் மந்திரம் உச்சரிக்கவும் முகமே முன் நிற்கும் துணை..

இதனால் பிராமணணுக்கு முக பலம் தேவை. எனவே, பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பதே இங்கு அர்த்தமாகும் முன்னது தவறு..

ஷத்திரியனுக்கு அல்லது அரச மரபில் வந்தவர்களுக்கு தோள் பலம் தேவை..

ஷத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து போர்கள் செய்து தங்கள் நாட்டு  மக்களைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும், வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் ..தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை.. எனவே, இங்கும் ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பதும் இங்கு தவறாகும்.

வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்பவன்... எனவே வியாபாரம் செய்யவும், கணக்கு மற்றும்  வழக்குகளைப் பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம் மிக்கதாக விளங்க வேண்டும்.

எனவே வைசியன் இடுப்பில் பிறந்தான் என்பதும் இங்கு தவறாகிறது..

சூத்திரன் வேளாண்மையில் உழவுத் தொழில் செய்பவன்... உழவு செய்பவனுக்கு கால் பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால் தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்... எனவே சூத்திரன் காலில் பிறந்தான் என்பதுவும் இங்கு  தவறாகிறது.

மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில் ஜாதி என்பதே எங்குமே வரவில்லை..என்பதே உள்ள உண்மை..

இதில் பிறப்பு என்ற சொல் வரவில்லை இவர்கள் குறிப்பிடுவது போல எங்கே வந்தது? பிறப்பினால் யாரும் எதையும் அடைய முடியாது..

வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு.. தமக்குத் தோன்றியதை அர்த்தம் புகட்டிவிட்டு. அறிவற்ற  மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரைக் குறை சொல்லி என்ன பயன் வரும் .

பிறப்பால் வர்ணங்கள் அல்லது குலங்கள் இல்லை – என்றே சொல்கிறது மனூதர்மம்:

ஆனாக இங்கு மனு தர்மம் தவறாகச்  சொல்கிறது என்று பொய்யாக கடந்த 80 ஆண்டுகளாக விமர்சிக்கிறார்கள்..

மனுதர்ம ஸ்லோகம் சொல்வதென்ன...

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே

அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே...

தொழிலினால் தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்).

இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.

இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது..

ஜன்மனா – பிறப்பால்;

ஜாயதே – பிறந்த அனைவரும்;

சூத்ர – சூத்திரரே;

கர்மணா – தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு;

த்விஜ – இருபிறப்பாளனாக;

ஜாயதே – பிறப்பாளன் ஆகிறான்.

செய்யும் தொழில் தான் ஒருவரை அடையாளம் காண்கிறது. பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

இதையே திருவள்ளுவரும்  சொல்கிறார்

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமை யான்"

இதன் பொருள்:  எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத்தன்மையானதே, அவரவர் செய்கின்ற தொழில்களின் அடிப்படையில் ..தொழில்களின்  வேறுபாடுகளால்.. சிறப்பியல்பான குணம் அல்லது தன்மை ஸல்லது வர்ணம்) ஒத்திருப்பதில்லை.

இரண்டு வரிகளுள்ள திருக்குறளையே சரியாகப் படித்து, பொருள் கூற இயலாத சிலர் சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு தங்கள் விருப்பப்படி, பொருள் கூறி, தானும் குழம்பி... பிற மக்களையும் குழப்புகின்றனர். ஆன்மீகம் பிடிக்காத சில

நாத்திகவாதிகளால் காலம் காலமாக வர்ணாஸ்ரமம் எனபது திரித்துச் சொல்லப்பட்டு வருவதை நாம் இங்கு நினைவில்  கொள்ள வேண்டும்.

உண்மைகளை எளிதில் யாரும் மறைத்து விட முடியாது.

காலகாலமாக செய்து வரும் செய்தொழில் அடிப்படையில் உண்டானதே அர்ச்சகர், தச்சர், கொல்லர், குயவர் மீனவர் ..

இவை நாட்பட்ட காலங்களில் மருவி பல ஜாதிகளஸக அதன் அடிப்படையில் உருவானது...

இப்படி உருவான ஜாதிகள் ஏன் எதற்கு எப்படி உண்டானவை என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் விட்டு விட்டதே. இந்த ஹிந்து தர்மம் எனும் பாரம்பரிய ஜனாதனத்தை திரித்துப் பேசும் வாய்ப்பாக சிலருக்கு அமைந்து விட்டது..

ஜனாதனத்தின் அடிப்படை தாத்பரியத்தை தெளிவாகப் புரிந்து கொண்டால் பலருக்குள் இருக்கும் வேறுபாடுகள் உணரப்பட்டு களையப்பட்டு ஒற்றுமையாகும்....

ஜனாதன தர்மம் என்று அழைக்கப்படும் அர்த்தமும் இதுவே. பாரபட்சம் தர்மத்தில் இருக்க முடியுமா என்பதை  சிந்திக்க வேண்டும் ஹிந்து ஜனாதன தர்மத்தை சார்ந்து பாஜக உள்ளிட்ட சில அரசியல் இயக்கங்கள் இருக்கிறது ..ஆனால்  ஜநாதனம் அவர்களைச் சார்ந்து இல்லை அந்தக் கட்விகள் உறுவாகும் முன்பே மக்கள் பிண்பற்றி வந்த நெறிமுறை இது பலராலும் ஆன்மீக குருவாக பார்க்கப்படும் அருள்நிதி வேதாத்திரி மகரிஷிக்குள் ஒரு  போராளியும் இருந்திருக்கிறார் என்பதை அவரது இந்தக் கவிதைகளின் வழியே அறிந்த போது திருவாண்மியூர் மஹான் கொங்கு மண்ணில் வாழ்ந்து மறைந்தாலும் எதிர்க்கும் ஒரு ஆன்மீக மஹான் வாழ்ந்துள்ளார் என நாம் அறியமுடிகிறது!

பக்தி எனும் முத்திரையின் திரைக்குப் பின்னால்

பலர் புரிந்த அநீதிகளை நாம் விளக்குவோமா? அருள்நிதி மஹரிஷி கூறியபடி

புத்தி மிக்க சமணர்களை கழுவில் கொன்றோர் 

புண்ணியர்கள் எனப்பட்டார் அரியாதோரால்!

யுக்தியினால் இரமலிங்க வள்ளலார்  உடல் மறைத்து 

யோகத்தால் ஜோதியாகிவிட்டார் என்றார்!

சக்திமிகு தில்லையந்தணர் நந்தன் போய்த்

தானாகத் தீயில் விழுந்திறக்கச் செய்தார்!

கற்ற அறிவை இழந்து சோழ மன்னன் பசுவுக்கு நீதியாக 

கதறக் கதற மகனைத் தேரால் கொன்றார்!

மற்றவர்கள் மனு நீதி நிலைத்த தென்றார்.

மயக்கத்தால் வல்லாளன் மணந்த நல்லாள்

நற்றவத்தால் ஆண்டியினால் கற்பிழந்தாள்!

’நல்ல அறம் இது’வென்று சான்று கூறிக்

கொற்றவனைப் புகழ்ந்தார்கள்! இவற்றைப் போல

கொடிய பாவச் செயல்கள் உணர்வீர்!

சிற்பிகளின் அறிவும் கைத் திறனும் ஒன்றாய்ச்

சேர்ந்து உருவான விலை உயர்ந்த தேரை

அற்பப் பூங்கொடிக்குப் படரவிட்ட பாரி

அறியாமை ஈகை என மதிக்கலாச்சு!

தற்கொலைகள்,கொலைகள் பல மோட்சமாச்சு.

சாலவித்தை செயல்களெல்லாம் 

அற்புதங்களாயிற்று.  உலகில் பல்லோர்

அறிவு மயக்கச் சேற்றில் ஆழ்ந்து விட்டார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஜனாதன ஒழிப்பு மாநாடு போடுங்கனா

தமிழ் நாட்டில் உள்ள நல்ல அறிவாளிகள் மத்தியில்  போட்டதன்  காரணம் என்ன? என்பதும் இங்கு எழுவினா.?

அப்போ இங்கே ஜாதி இருக்குன்றீங்களா?     இல்லை  ஜனாதனம் இருக்குன்றீங்களா?

புண்ணுக்கு மருந்தைப் போடுங்கனு சொன்னா கண்ணுல போட்டானாம்.! கதையாக மணிப்பூர் விவகாரத்தில் எத்தனை உயர்நீதிமன்ற, மற்றும்  குடிமைப் பணியாளர்கள் என்று 626 பேர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார்கள்? என்பதும் இங்கு எழுவினா ? 1950- ஆம் ஆண்டில் ஹிந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்புன்னு கிளம்புனாங்களே சிலர்.

1967 ஆம் ஆண்டில் ஆட்சியே காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தான் திமுகவினர் அமைத்தார்கள்.

2023-ஆம் ஆண்டில் ஜனாதனம்னு புதுப் பெயர் மாற்றம் கண்ட வண்டியை உருட்டி 2024- ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் பங்கெடுத்து விடலாம்னு தமிழ்நாட்டில் இருந்து வெற்றி பெற போட்ட திட்டம் தற்போது  முடிஞ்சே போச்சு.

ஏற்கனவே தமிழ் நாட்டின்  மக்கள் ஊழல் காரணமாக கடும் சினத்தில் உள்ளனர்.

ஆகையால் வேறு ஏதாவது நல்ல செயலே தேவை.

 ஆர்எஸ் எஸ்ஸில் பிராமணர் அல்லாத குறிப்பாக எந்த வேதத்தின் அடிப்படையில் வருபவர்களுக்கும், எந்த வகை ஜாதியினருக்கு வாய்ப்பும் தந்து

தலைவராக வைத்திருக்கிறார்கள் என்றல்லவா வர்ண பேதம் குறித்துப் பேசியிருக்க வேண்டும்?

இங்கே ஈ வே இராமசாமி நாயக்கர் விட்டு விட்டுப் போன பழைய பிராமண ஒழிப்பிற்கு ஜனாதன ஒழிப்புன்னு பெயரை மாற்றி வைத்துக் கொண்டு போராட முயலும் ஒரு கட்சித்தலைவரிடம்  மீட்கப் போய்

முட்டுச் சந்து நிலை தான் ஜனாதன தர்மம் பற்றிப் பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 260 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம். மற்றும்  ஜனாதனத்தை ஆதரித்து ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்திலும், ஆளுநர் நாடெங்கும் பேசலாம். அது நேர்மையோடு எதிர்கொள்ளப்படும். அதுவே ஜனநாயகம்.

ஆனால் ஜனாதனத்தை எதிர்த்துப் பேசினால் நேர்மைக்கு இங்கு வேலையில்லை.

“கழுத்தை வெட்டுகாசு கொடுக்கிறேன்” என்ற சல்லித்தனமே இங்கு அரங்கேறும்.

அதுதான் ஜனாதனமா என்பது இப்போது பலர் அறியாதது,  பக்தி இலக்கியங்கள் தான் இங்கு தமிழ் மொழி கண்ட இலக்கியம் என்பதை ஜனாதனம் பேசிய யாரும் அறியவில்லையா அல்லது தெரியவில்லையா. இதில் பொது நீதி யாதெனில் இங்கு மக்களின் தற்போதய தேவை ஊழலற்ற நேர்மையான ஜனநாயகமா? அல்லது ஜனாதனமா? என்பதே மக்கள் வினாவாகும் இதற்கு ஆட்சியாளர்களின் பதில் தான் தேர்தல் முடிவைத் தேடித்தரும். ஜனாதனத்தை எதிர்ப்போருக்கு

ஒன்னும் தெரியாதுனா.‌..

ஜனாதனத்தை ஆதரிப்போர்க்கும் ஒன்னுமே தெரியாது...

இவங்க போடுற  சண்டை, கூச்சல் எல்லாமே அரசியல் லாபத்துக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சீட்டுகளுக்கும் தான். 

இதைப் புரிஞ்சிக்காத மிஸ்டர் அண்ட் மிஸஸ் பொது ஜனம் ஜனாதனம்னா இந்து... சிந்து சந்து... பொந்து என்று கம்பி கட்டுற வேலை எல்லாம் செஞ்சி சந்தோஷப்படறாங்க. என்ன செய்வது ஜனாதனத்தை ஒழிக்கறேன்னு சொன்னவங்க கிட்டயிருந்து ஜனாதனத்தை காப்பத்தறது தானே அவங்க தலையாய கடமை...இதில் பொது நீதி யாதெனில் 

நாட்டின் எல்லை தாண்டி பல சதுர கிலோ மீட்டர் வரை சீனாக்காரன் உள்ள பூந்து வீடு கட்டுவதை அறியாத ஒரு கூட்டம்... சந்திரன் சூரியனை கிரகங்களை எல்லாம் ஆராய்ந்தறிவது தான் இங்கு ஆச்சரியமான உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த