முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விண்வெளி பற்றி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

விண்வெளி பற்றி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்


வதோதராவில் உள்ள இந்திய ரயில்வேயின் விரைவு சக்தி பல்கலைக்கழகம் (ஜி.எஸ்.வி), ஏர்பஸ் ஆகியவை கையெழுத்திட்டன.

வதோதராவில் உள்ள இந்திய ரயில்வேயின் விரைவு சக்தி பல்கலைக்கழகம், ஏர்பஸ் ஆகியவை இந்திய விமானப் போக்குவரத்துத் துறையை கணிசமாக வலுப்படுத்த  கைகோர்த்துள்ளன. புதுதில்லியில் உள்ள ரயில் பவனில் திரு.ரெமி மைலார்ட் (ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்),  பேராசிரியர் மனோஜ் செளத்ரி (விரைவு சக்தி பல்கலைக்கழக துணைவேந்தர்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் ,  விரைவு சக்தி பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தருமான திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி ஜெய வர்மா சின்ஹா மற்றும் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏர்பஸ் உலகின் மிகப்பெரிய வணிக விமான உற்பத்தியாளராகவும், ஹெலிகாப்டர்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரணங்களின் முன்னணி உற்பத்தியாளராகவும் உள்ளது. இந்நிறுவனத்திற்கு இந்தியாவுடன் நீண்டகால உறவு உள்ளது. நிறுவனம் இந்தியாவை உலகளாவிய விமானப் போக்குவரத்தின் முக்கிய இயக்கியாகவும், தவிர்க்க முடியாத திறமை மற்றும் வள மையமாகவும் அங்கீகரித்துள்ளது. மேலும் நாட்டில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட விண்வெளிச் சூழல் அமைப்பை உருவாக்கத் தேவையான அனைத்துக்  கட்டுமான வசதிகளையும் அமைத்துத்தர உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனத்தின் வர்த்தக உத்தியின் மையமாக இந்தியாவில் உற்பத்தி உள்ளது. இந் நிறுவனம் அதன் உலகளாவிய தயாரிப்புகளில் இந்தியாவின் பங்களிப்பை சீராக அதிகரித்து வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், "ஜி.எஸ்.வி தீவிரமான தொழில்-கல்வி கூட்டாண்மையில் கவனம் செலுத்தும். அதன் அனைத்துப்  படிப்புகளும் தொழில்துறையுடன் இணைத்து வடிவமைக்கப்படும். ஜி.எஸ்.வி.யில் படிக்கும் மாணவர்கள் தொழில்துறைக்கு தயாராக இருப்பார்கள். போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் வேலைவாய்ப்புக்காக அவர்கள் மிகவும் விரும்பப்படுவார்கள். ஏர்பஸ் உடனான இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த இலக்கை அடைவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகும்" என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ரெமி மைலார்ட், "இந்தியாவில் விண்வெளிச் சூழல் அமைப்பை மேம்படுத்த உறுதிபூண்டுள்ள ஒரு நிறுவனம் என்ற முறையில், மனித மூலதன மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் உணர்கிறோம். விரைவு சக்தி பல்கலைக்கழகத்துடனான கூட்டாண்மை நாட்டில் திறமையான பணியாளர்களின் வலுவான சூழலை உருவாக்கும், இது வேகமாக வளர்ந்து வரும் விண்வெளித் துறைக்கு சேவை செய்ய எதிர்காலத்தில் தயாராக இருக்கும்" என்றார்.

இந்தத் தொழில்துறை-கல்விக் கூட்டாண்மை தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஏர்பஸ் இந்திய விமானங்களில் 15,000 மாணவர்கள்பணியமர்த்தப்படுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.