முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வருமானவரிப் பிடித்தம் மற்றும் வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

வருமான வரி இணை ஆணையரகம், டி டி எஸ்   சரகம்-3, சென்னை மற்றும் கருவூல கணக்கு ஆணையரகம், சென்னை இணைந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் செய்யும் அலுவலர்களுக்கு  திரு M முரளி, IRS, வருமானவரி ஆணையர் (டி.டி.எஸ்), சென்னை மற்றும் திரு M அர்ஜுன் மாணிக், IRS, வருமானவரி இணை ஆணையர், டி டி எஸ்   சரகம்-3, சென்னை இவர்களின் அறிவுறுத்தலின்படி,  இன்று (20-09-2023) சிங்காரவேலர் மாளிகை, சென்னையில்  வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் தொடர்பான விழிப்புணர்வு கருதரங்கத்தை நடத்தினர்.

திரு ராஜன், உதவி சம்பள கணக்கு அலுவலர் (வடக்கு) தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.

வருமானவரி அலுவலர் திரு L ராஜாராமன், வருமானவரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு TDS / TCS விதிகளின் சாராம்சத்தை விளக்கினார். மேலும் அவர், வருமானவரிப் பிடித்தம் செய்யவேண்டியதன் முக்கியத்துவம், வருமானவரிப் பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்த வேண்டிய கட்டாயம், TDS/TCS காலாண்டு படிவம் தாக்கல் செய்யவேண்டிய தேவை, TDS/TCS சான்றிதழ் வழங்கவேண்டிய அவசியம் இவைகள் குறித்து எளிமையாக விளக்கினார்.

அவர், குறிப்பாக, சம்பளம் மற்றும் ஒப்பந்த செலவில் வருமானவரிப் பிடித்தம் செய்வதன் அவசியம் குறித்தும், உடைசல்களை விற்கும்பொழுது வருமானவரி வசூல் செய்ய வேண்டிய தேவை குறித்தும் தெளிவாக விளக்கினார்.   

மேலும், ஒவ்வொரு வரிப்பிடித்தம் செய்பவரும், நிதி ஆண்டின் ஆரம்பித்திலேயே, தமது அலுவலகத்தில் பணிபுரியம் அனைத்து அரசு அலுவலர்கள் பெறக்கூடிய மொத்த சம்பளத்தை முன்கூட்டியே கணக்கிட்டு, அந்த நிதி ஆண்டிற்கு, வருமானவரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரி விகிதத்தங்களின் அடிப்படையில்  அவரவர் செலுத்த வேண்டிய வருமானவரியை கணக்கிட்டு, அதனை சராசரி அடிப்படையில், முதல் மாத சம்பளத்திலிருந்தே வரிப் பிடித்தம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வருமானவரி அலுவலர் திரு K செந்தில் குமார், வருமானவரிப் பிடித்தம் / வருமான வரி வசூல் விதிகளை முறையாக பின்பற்றவில்லையெனின் ஏற்படும் விளைவுகளான வட்டி, தாமத கட்டணம், அபராதம் மற்றும் வழக்கு இவைகளை தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்த கருத்தரங்கத்தில், தலைமை ஆணையரகம் (TDS), சென்னை அவர்களின் அரும்பணியால், வருமானவரிப் பிடித்தம் செய்பவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கீழ்கண்ட வசதிகளை, அவர்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள வேண்டுதல் விடுக்கப்பட்டது.

1.         இந்தியாவில், முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட CHATBOT என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், TDS நண்பன் என்ற பெயர்கொண்ட ஒரு APPLICATION , PLAYSTORE ல், ஆண்ட்ராயிட் மற்றும் ioS உபயோகிப்பாளர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும், வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களின் பயன்பாட்டிற்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை http://www.tnincometax.gov.in/ என்ற இணையதள முகவரியின் கீழ் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

2.         e - TDS காணொளிகள், தமிழில் உருவாக்கப்பட்டு, அவை, முதன்மை தலைமை ஆணையரகத்தின் அதிகாரபூர்வ YOUTOUBE CHANNEL ல்  https://youtube.com/@incometaxtamilnaduandpuduc9090 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

3.         TDS MANUAL தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சடக்கிப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கணினி வழி நகல், whatsapp வழியாக பகிரப்பட்டது.

4.         மற்றும் TDS PAMPHLETS தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சடக்கிப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கணினி வழி நகல், whatsapp வழியாக பகிரப்பட்டது.

திருமதி ஜானகி, வருமானவரி பிடித்தம் ஆலோசகர், வருமானவரிப் பிடித்தம் காலாண்டு படிவங்கள் எவ்வாறு TRACES தளத்தில் தாக்கல் செய்வது என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தார்.  மேலும் அவர், TRACES தளத்தில் எழுந்துள்ள பல்வேறு விதமான கேட்பு தொகைகளை குறைப்பது என்பது குறித்தும் தெளிவாக விளக்கினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...