முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க சுவாமியின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் நிகழ்த்திய உரை

 வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமலிங்க சுவாமியின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் நிகழ்த்திய உரை


வணக்கம்!

வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமியின் 200-வது பிறந்த நாள் விழாவில் உரையாற்றுவது மிகப் பெரிய மரியாதையாகும். வள்ளலாருடன் நெருங்கிய தொடர்புடைய இடமான வடலூரில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி  அளிக்கிறது. வள்ளலார் 19-ஆம் நூற்றாண்டில்  இந்தியாவில் வாழ்ந்த மிகவும் மரியாதைக்குரிய மகான்களில் ஒருவர். அவரது ஆன்மீக போதனைகள் இன்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கின்றன. வள்ளலாரின் தாக்கம் உலகளாவியது. அவரது சிந்தனைகள் மற்றும் லட்சியங்களைப் பின்பற்றி பல அமைப்புகள் செயல்படுகின்றன

நண்பர்களே,

வள்ளலாரை நாம் நினைவுகூரும் போது, அவரது அக்கறை மற்றும் இரக்க உணர்வை நாம் நினைவு கூர்வோம். வள்ளலார் சக மனிதர்களிடம் இரக்கம் காட்டுவதையே முதன்மையாகக் கொண்ட வாழ்க்கை முறையை நம்பினார். பசியைப் போக்குவதில் வள்ளலாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஒரு மனிதன் வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்வதை விட வேறு எதுவும் அவரை வேதனைப்படுத்தியதில்லை. பசித்தவர்களுடன் உணவைப் பகிர்வது எல்லா இரக்க நடவடிக்கைகளிலும் மிகவும் உன்னதமானது என்று வள்ளலார் நம்பினார். வாடிய பயிரைக்  கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறினார். அவரது லட்சியத்தில் அரசு உறுதிபூண்டு செயல்படுகிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் இலவச உணவு தானியஙகள் வழங்கியதன் மூலம் 80 கோடி பேருக்கு அரசு மாபெரும் நிவாரணத்தை  வழங்கியது.  இது சோதனைக் காலங்களில்  பெரிய நிவாரணமாக அமைந்தது .

நண்பர்களே,

கல்வி மற்றும் கற்றலின் சக்தியில் வள்ளலார் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒரு வழிகாட்டியாக, அவர் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருந்து எண்ணற்ற மக்களை வழிநடத்தினார். திருக்குறளை மேலும் பிரபலப்படுத்த வள்ளலார் முயற்சிகளை மேற்கொண்டதுடன், நவீன பாடத்திட்டங்களுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியக் கல்வியின் உள்கட்டமைப்பை மாற்றுவதற்கு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இளைஞர்கள் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்று வள்ளலார் விரும்பினார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உருவாக்கியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் முழு கல்விச் சூழலையும் இந்த கொள்கை மாற்றுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் சாதனை எண்ணிக்கையிலானவை. இளைஞர்கள் தங்கள் உள்ளூர் மொழிகளில் படிப்பதன் மூலம் இப்போது மருத்துவர்களாகவும் பொறியியலாளர்களாகவும் மாற முடியும். இதன் மூலம் இளைஞர்களுக்குப் பல வாய்ப்புகளை உருவாக்க முடியும்.  

நண்பர்களே,

சமூக சீர்திருத்தம் என்று வரும்போது வள்ளலார் தனது காலத்தை விட முன்னணியில் இருந்தார். வள்ளலாரின் கடவுள் மீதான பார்வை மதம், சாதி மற்றும் இன எல்லைகளைத் தாண்டியது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் தெய்வீகத்தைக் கண்ட வள்ளலார், இந்த தெய்வீகத் தொடர்பை மனித குலம் அங்கீகரித்துப் போற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். வள்ளலாரின் போதனைகள் சமத்துவ சமுதாயத்திற்காக பாடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவருக்கு அஞ்சலி செலுத்தும் போது அனைவரும் இணைவோம்,  அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி  என்பதன் மீதான நம்பிக்கை மேலும் வலுவடைகிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேறுவதற்காக வள்ளலார் ஆசீர்வதித்திருப்பார். வள்ளலாரின் படைப்புகள் எளிமையானவை. அவை படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதானவை. சிக்கலான ஆன்மீக ஞானத்தை எளிய சொற்களில் அவை வெளிப்படுத்துகின்றன. காலத்தாபலும் இடத்தாலும் இந்தியாவின் கலாச்சார ஞானத்தில் உள்ள பன்முகத்தன்மை, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கூட்டு எண்ணத்துக்கு வலு சேர்க்கும் மகான்களின் போதனைகளின் பொதுவான பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், வள்ளலாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் நாம் உறுதியுடன் உள்ளோம். அன்பு, கருணை மற்றும் நீதியை அனைவரும் பரப்ப வேண்டும். வள்ளலாரின் இதயத்திற்கு நெருக்கமான முறையில் நடந்து கொள்ள நாமும் தொடர்ந்து கடினமாக உழைப்போம். நம்மைச் சுற்றி யாரும் பட்டினியாக இருக்காமல் பார்த்துக் கொள்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வோம். அந்த மிகப் பெரிய ஞானியின் 200-வது பிறந்த நாளில் மீண்டும் ஒரு முறை அவருக்கு மரியாதை செலுத்திகிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

நன்றி எனத் வள்ளலார் போதனையை போல பிரதமர் அனைத்து மக்களுக்கும் உணவளித்து வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்தார்.

சென்னை ஆளுநர் மாளிகயில் திருவருட்பிரகாச வள்ளலார் திருவுருவச் சிலையை தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி மற்றும் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேசுகையில், அனைத்து மதங்களிலும் இருக்கக்கூடிய உண்மை ஒன்றே என்பதே உணர்த்தும் விதமாக சன்மார்க்க சங்கத்தை அருட்பிரகாச வள்ளலார் நிறுவினார் என்று தெரிவித்தார். மேலும், சைவ சமயத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்ட வள்ளலாருக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன எனவும், வள்ளலார் சாதிய பாகுபாடுகளை கடுமையாக எதிர்த்தார் எனவும் தெரிவித்தார்.  மேலும்,  வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று தெரிவித்த வள்ளலார், அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்பதற்காக வடலூர் சத்திய ஞான சபையில் இன்றைக்கும் 24 மணிநேரமும் அணையா அடுப்பு இயங்கி கொண்டிருக்கிறது எனவும், இந்த தர்ம சபை பல லட்சம் மக்களுக்கு உணவு அளித்து வருகிறது எனவும் தெரிவித்தார். தனிஒரு மனிதனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வள்ளலார் பக்தர்களுக்கு உணவளித்து வருகின்றனர் என்று கூறினார். மேலும், பாரத பிரதமர் நரேந்திர மோடி 80 கோடி மக்களுக்கு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை வழங்கினார் என்று தெரிவித்தார். வள்ளலார் அவர்களுடைய 200வது பிறந்ததினத்தில் ஆளுநர் மாளிகையில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளதற்காக தமிழ்நாடு மக்கள் சார்பாக ஆளுநர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். முன்னதாக திருவருட்பிரகாச வள்ளலார் குறித்த குறும்படம் ஒனறு வெளியிடப்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...