ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த மோசடிப் புகாரின் பேரில்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணித் துணைத்தலைவராக உள்ள எஸ். ராஜசேகர் என்ற எஸ் ஆர்.தேவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் ரூபாய்.70 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய்.1.40 கோடி மோசடி செய்த காரைக்குடி அருகில் வசித்து தற்போது சென்னை செங்குன்றத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணியின் துணைத்தலைவர் எஸ்.ராஜசேகர் என்ற எஸ்.ஆர் தேவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹிமாச்சலப் பிரதேச ஹரிந்தர் பால் சிங் தொழில் வளர்ச்சிக்காகச் சிங்கப்பூர் நிதி நிறுவனத்திடமிருந்து ரூபாய் 70 கோடி கடனாகப் பெற்றுத் தருவதாகக் கூறி தன்னை சிலர் ஏமாற்றி மோசடி செய்ததாகப் புகார் அளித்திருந்தார்.
அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் சேர்ந்த எஸ்.ராஜசேகர் என்ற எஸ் ஆர் தேவர் (வயது 65) என்பவரை மத்திய குற்றம் மோசடி மற்றும் ஆவணங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவருடன் சேர்ந்து மொத்தம் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதில் ஆலப்பாக்கம் ரஜிதா மெர்னல்சன் என்கிற ரேஷ்மின் (வயது 36), ஜாபர்கான்பேட்டை ராமு(வயது 37), போரூர் தசரதன்(வயது 30) என நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்கள் சேர்ந்து ஹரிந்தர் பால் சிங்கிடம் சிங்கப்பூர் நிதி நிறுவனத்திடமிருந்து ரூபாய் 70 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி 1.40 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர். ந்த மோசடியில் பணம் பயன்படுத்தப்பட்ட சொகுசுக் கார்களும் பரிமுதலானது
ADVERTISEMENT-மேலும் கைது செய்யப்பட்டோரிடமிருந்து ரூபாய் 1.10 லட்சம் ரொக்கத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து இரண்டு அதிநவீன பார்ச்சுனர் காரையும் கைப்பற்றினர். காவல்துறை நடத்திய விசாரணையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி எஸ் ராஜசேகர் என்ற எஸ் ஆர் தேவர் மீது வேலை வாங்கித் தருவதாக மோசடி, கடன் மோசடி, கட்டப்பஞ்சாயத்து என மொத்தம் ஏழு வழக்குகள் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலுவையிலுள்ளது தெரிய வந்தது. பாஜகவில் சேரும் முன்பு, இவர் வேறு சில கட்சிகளிலும் இருந்துள்ளார். மேலும், சில தேர்தல்களிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளார். 2022. ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிலையில், அதன் பிறகே இந்த மோசடியைச் செய்துள்ளதாக காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட போரூரைச் சேர்ந்த ரஜிதா மெர்னல்சன், கே.கே. நகரைச் சேர்ந்த ராமு, வளசரவாக்கத்தைச் சேர்ந்த தசரதன் என 4 பேரை கைது செய்த நிலையில் நான்கு பேரிடமிருந்து ரூ.1.01 கோடி ரொக்கப் பணம் மற்றும் 2 கார்கள், 2 செல்போன்கள் மற்றும் போலி முத்திரைத் தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்