தேசிய பாதுகாப்பு அகாடமியில் என்.டி.ஏ இலையுதிர் கால கண்காட்சி 2023 தொடங்கியது
என்.டி.ஏ இலையுதிர் கால கண்காட்சி – 2023, நவம்பர் 27 அன்று தேசிய பாதுகாப்பு அகாடமியின் குடும்ப நல அமைப்பின் தலைவர் திருமதி ரெய்மன் கோச்சார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 23 உட்புற மற்றும் வெளிப்புறப் பொழுதுபோக்கு அரங்குகளில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நவம்பர் 27 - 29 வரை இக்கண்காட்சி நடைபெறும். பயிற்சியில் தேர்ச்சி பெறும் வீரர்களின் பெருமைமிக்க பெற்றோர்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியின் படைப்பாற்றல் திறமைகளைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்தத் தனித்துவமான அகாடமியின் 75 மகத்துவமான ஆண்டுகளைப் பற்றிய ஒரு பார்வையையும் இந்தக் கண்காட்சி வழங்குகிறது. 75 ஆண்டுகளில் அகாடமியின் வளர்ச்சி குறித்த அம்சங்கள் பல்வேறு அரங்குகளில் காணப்படுகிறது. வீரர்களின் உற்சாகமும், பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலும் கண்காட்சியை நடத்துவதற்கான திறமையை அற்புதமாக வெளிப்படுத்தின.
கருத்துகள்