நடிகர் மன்சூர் அலிகான் இன்று நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு.
நடிகர் மன்சூர் அலிகான் லியோ திரைப்படம் விழாவில் நடிகை த்ரிஷா குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்ட பின் அவர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த பின் நடிகை திரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டார். அதற்கு நடிகை திரிஷாவும் மன்னிப்பது தெய்வீகமென கருத்தை பதிவிட்டிருந்தார். நடிகர் மன்சூரலிகான் தனது பதிவில் நான் பேசிய கருத்தில் திரிஷாவின் மனம் புண்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதனால் மனம் வருந்தி திரிஷாவிடம் மன்னிப்புக் கேட்கிறேன் . அவருக்கு திருமணம் நடக்கும் போது ஆசிர்வாதம் செய்யத் தான் வருவேன் எனக் தெரிவித்திருந்தார்.
தற்போது அவர் நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், போடவும் திட்டமிட்டுக் கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை பத்து நாட்களாகக் கெடுத்து, மடைமாற்றம் செய்யத் தூண்டிய அனைத்துப் பிரிவுகளிலும் வழக்குத் தொடுக்கப்படும். எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் இன்று தாக்கல் செய்யப்படுமென குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதம் 11 ஆம் தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நான் பேசிய அசல் 'உண்மை வீடியோவை' தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.
இந்த வீடியோவைத்தான், சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 ஆம் தேதியன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, நடிகை திரிஷாவை ஆபாசமாகப் பேசியதாகச் சித்தரிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார். உண்மை வீடியோவை தற்போது அனுப்பியுள்ளேன்! மேலும் சில ஆதாரங்களுடன் வழக்குத் தொடுக்க உள்ளேன்! நன்றி! -நடிகர் மன்சூர் அலிகான் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுப்பார் எனத் தெரிகிறது.
கருத்துகள்