காரைக்குடி ஸ்ரீ வைத்தியநாத சுப்பிரமணிய தண்டாயுதபாணி ஸ்ரீ வாலையம்மன் ஆலய வருஷாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோவிலூர் ரோடு அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனை எதிர்புறம் உள்ள ஜெயம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வைத்தியநாத சுப்பிரமணிய தண்டாயுதபாணி மற்றும் ஸ்ரீ வாலையம்மன் ஆலயத்தில் குடமுழுக்கு நடத்திய பின்னர் ஒரு ஆண்டு பூர்த்தியாகும் வருஷாபிஷேக விழா
நவம்பர் மாதம் 23 ஆம் தேதி வியாழன் மாலை 4:30 மணிக்கு அனுக்ஞை விக்னேஷ்வர பூஜையும், தன பூஜை,
புன்யாகவாசனம் வாஸ்து சாந்தியும், முதல் கால யாக வேள்வியும், த்ரவ் யாகுதி, பூர்ணா குதியும் தீபாராதனையும் நடந்தது தொடர்ந்து நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், இரண்டாம் காலயாக வேள்வியும், கோ பூஜை, த்ரவ் யாகுதி,
பூர்ணாகுதியும், தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது வேள்வி யாகத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித நீரை சாமிநாத சிவாச்சாரியார் குழுவினர் மற்றும் ஆலய பூஜகர் பாண்டியன் ஆச்யசாரியார், மற்றும் ஆணந்தன் ஆச்சாரியார் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆர்.மாணிக்கவாசம் ஆகியோர் தலையில் சுமந்து கடம் புறப்பாடு நடைபெற்று திருக்கோவில் கலசத்தில் மகா அபிஷேகம் நடைபெற்ற பின்னர் சுவாமிகளுக்கு புனித நீர் மஹா அபிஷேகம் செய்யப்பட்டது, சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 1000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, சாக்கோட்டை யூனியன் சேர்மன் சரண்யா செந்தில்நாதன், பாஜக அன்னவாசல் ஒன்றியத் தலைவர் வீர.ரவிச்சந்திரன்,காரைக்குடி நகராட்சி கவுன்சிலர்கள் திமுக நாகராஜன், சன்.சுப்பையா, பிஎல்.ராமசந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மங்கையர்க்கரசி அடைக்கலம், இந்திய அரசின் அனிமல் வெல்பேர் போர்டு தமிழ்நாடு பிரதிநிதி வழக்கறிஞர் ஆர்.ராஜவள்ளி, ஹாங்காங் இந்தியன் அன்ட் எக்ஸ்நோரா சாரிடபிள் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் ராம.ராமசாமி, மற்றும் எம்.சுப்பிரமணியன் செட்டியார், கோட்டையூர் நாரயணன் செட்டியார், அதிமுக நகரச் செயலாளர் மெய்யப்பன் பப்ளிக் ஜஸ்டிஸ் எடிட்டர் புலித்தேவன் பாண்டியன்,, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் நாகலிங்கம், பஞ்சநாதன், வீரப்பன், இந்து முண்ணனி பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அடுத்து நடந்த திருக்கார்த்திகை தீய வழிபாடு
நிகழ்ச்சியில் அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி கலந்துகொண்டு சிறப்பித்தார் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது, ஏற்பாடுகளை மேனேஜிங் டிரஸ்ட்டி ஆர்.மாணிக்கவாசகம் மற்றும் டிரஸ்டிகள் மீனாள் முருகேசன், தி.ரெங்கநாதன், எஸ்.கண்ணன், எஸ்.செல்வமணி, எஸ்.சேகர், லிங்கேஸ்வரன் சடாச்சரம், பி.ஜெகநாதன், தி.மோகனலிங்கம், நா.முத்து சரவணன், சுப.ஆறுமுகம். உள்ளிட்ட அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாத சுப்ரமணிய தண்டாயுதபாணி சுவாமி ஆலய டிரஸ்ட்டின் நிர்வாகிகள் சுறப்பாகச் செய்திருந்தனர்,
கருத்துகள்