எமிஸ் பதிவெண் பதிவுப் பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை என ஆசிரியர் சங்கங்களுன் கூட்டமைப்பு அறிவிப்பு
எமிஸ் பதிவெண் பதிவுப் பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை என ஆசிரியர் சங்கங்களுன் கூட்டமைப்பு அறிவிப்பு
எமிஸ் பதிவேற்ற பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
எமிஸ் வலைதளப் பணிகளை நவம்பர்.1 முதல் மேற்கொள்ள மாட்டோம் என டிட்டோ ஜாக் அறிவித்தது.
எமிஸ் வலைதளப் பணிகளிலிருந்து விடுவித்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக், அக்டோபர் மாதம் .13-ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அதன் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 30-கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டதையேற்று டிட்டோ ஜாக் நிர்வாகிகள் அப்போது போராட்டத்தைக் கைவிட்டனர்.
ஆனால் அமைச்சர் பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதியின்படி எந்தவித அறிவிப்பையும் தொடக்கக்கல்வித் துறை வெளியிடாதது குறித்து டிட்டோ ஜாக் அமைப்பின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக சமீபத்தில் நடைபெற்றதில் இரண்டு தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட 12 கோரிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வித்துறையில் இதுவரை எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாதது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே, கோரிக்கைகளை கல்வித்துறை விரைந்து நிறைவேற்ற வேண்டும்
எமிஸ் பதிவேற்றும் பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஏன ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு அறிவித்தது,
ஆசிரியர்கள் நவம்பர் மாதம்.1 ஆம் தேதி முதல் எமிஸ் பதிவு பணிகளை மேற்கொள்ளத் தேவையில்லை என்று பேச்சுவார்த்தையில் அமைச்சர் உறுதி அளித்ததன்படி, வருகைப்பதிவு தவிர மற்ற எமிஸ் பணிகளிலிருந்து இன்று முதல் ஆசிரியர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசுப் பள்ளிகளின் முக்கியச் செயல்பாடுகள் எமிஸ் தளம் வழியாகவே மேற்கொள்ளப்படுருவது குறிப்பிடத்தக்கது.
எமிஸ் தளம் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறையினர் கூறும்போது, “ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எமிஸ் வலைதளப் பணிகளை மேற்கொள்ள ஒன்பதாயிரம் நபர்கள் வரை பணியிலமர்த்தப்பட உள்ளனர். இது செயல்பாட்டுக்கு வந்த பின்னர் மட்டுமே வருகைப் பதிவை மட்டும் ஆசிரியர்கள் பதிவேற்றினால்போதும்” எனத் தெரிவிதனர்.
கருத்துகள்