பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதா மீண்டும் பேரவையில் விவாதம்
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாக்களை மாநில ஆளுநர் அரசுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதையடுத்து,
உடனே சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை கூட்டி, மீண்டும் அந்தத் தீர்மானத்தை திரும்ப ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
"1994ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியன்று தமிழ்நாட்டில் அப்போதிருந்த 13 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு, மாநில ஆளுநரிடம் இருந்ததை மாற்றி முதல்வர் தான் அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியது அப்போதய அ தி மு க அரசு. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் முதல்வர் இருக்க மாட்டாரே, அப்போது யார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எப்போதுமே பேசப்படும் நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், தி மு க வின் சார்பில் அந்தச் சட்டம் தேவையற்றது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டதென்று'' தி மு க வின் தலைவரக முன்னால் முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களே குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம் : நெஞ்சுக்கு நீதி, நான்காம் பாகம், பக்கம் 512). ல் கண்டபடி
மேலும், 30, ஜூலை 1996 ஆம் நாளில் அன்றய தமிழ்நாடு சட்டசபையில், அப்போதய கல்வித் துறை அமைச்சரும், தி மு க வின் நீண்ட காலப் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன் அ தி மு க அரசு கொண்டு வந்த சட்டத்தைத் திரும்பப் பெற்றதோடு, மாநில ஆளுநரே இனி வேந்தராகத் தொடருவார் என்றும், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் தி மு க தலைவர் கருணாநிதி அவர்கள் 'தேவையற்ற சட்டம்' என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வருவது நியாயமா? நீதியா? என்பதை முதல்வர் மாற்றுவது அரசியல் காரணமா என்பதே தற்போதய எழுவினா?
மேலும், எப்போதாவது மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் வேந்தராக யார் இருப்பார்கள்? என்ற வினா விடை காணப்படவேண்டும்.
அதேபோல முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் குறித்த கேள்வியும், பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்ற அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி மு க அரசின் முடிவிற்கு மாற்றாக ஒரு சட்டமா
மறைந்த முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் விருப்பத்திற்கெதிராக இன்றைய தி மு க அரசின் தற்போதய செயல்பாடுகளை மக்கள் வியப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்! இதில் பொதுநீதி யாதெனில் இச்சட்டம் தேவை எனில் முன்னால் முதல்வர் காலம் சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த போதே ஆதரித்து இருந்தால் இப்போது இந்தத் தேவை இருந்திருக்காது என்பதே பொதுவான நீதி
கருத்துகள்