தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடந்த வியாழக்கிழமை,
02.11.2023 அன்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், பல்கலைக்கழகத்துணைவேந்தர் ஜி.ரவி ஆகியோர் வரவேற்ற பின் வெள்ளிக்கிழமை அழகப்பா பல்கலைக்கழகத்தில் “G20 புதுடில்லி தலைமைப் பிரகடனம் மற்றும் வளர்ந்து வரும் உலக ஒழுங்கு - சுத்தமான எரிசக்திக்கான இந்தியாவின் அதிநவீன ஆற்றல் தொழில்நுட்பங்கள்” எனும் கருத்தரங்கில் பங்கேற்றார்.
சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறையை பார்வையிட்ட ஆளுநர், சிறப்புப் பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் மற்றும் சிறப்புச் சேவைகளை வழங்குவதில் துறையின் சமூக ஈடுபாட்டைப் பாராட்டினார். அவர் அறிவியல் வளாகத்திற்குச் சென்று ஆய்வறிஞர்கள் உருவாக்கிய முன்மாதிரிகளைப் பார்த்தார். டாகடர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் டாகடர் குனசேகரன் உள்ளிட்ட பலர் மற்றும் பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் மற்றும் பல துறைகளின் டீன்களுடன் உரையாடினார். முன்னதாக, பல்கலைக்கழகத்தின் சமீபத்திய வளர்ச்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து துணைவேந்தர் விளக்கினார். இணைப்புக் கல்லூரி முதல்வர்களுடனும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார் அதேபோல மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55 ஆவது பட்டமளிப்பு விழா மு.வ.அரங்கில் நடந்தது. தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மும்பை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் காமாட்சி முதல்வர், பதிவாளர் இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றித் துவங்கி வைத்தனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ.குமார் வரவேற்றார்.
பட்டமளிப்பு விழாவில் காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளர் இராமகிருஷ்ணன், தேர்வாணையர் தர்மராஜ், சிண்டிகேட் உறுப்பினர்கள் தவமணி கிறிஸ்டோபர், நாகரத்தினம், தங்கராஜ் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் 1,34,570 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட தியாகியும் முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் தீர்மானித்த காமராஜர் பல்கலைக்கழக சிண்டிக்கேட், சென்ட் இருமுறை பரிந்துரை செய்தும், பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காததால் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இவ் விழாவைப் புறக்கணித்தார். பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆறு நபர்களில் மூவர் மட்டுமே பங்கேற்றனர். செனட் உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்கவில்லை. இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகள் விழா முடியும் வரை காலியாகவே இருந்தன. உதவிப் பேராசிரியர்கள் சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோர் தமிழ்நாடு ஆளுநர் கையிலிருந்து முனைவர் பட்டம் பெற மறுத்து, விழாவில் பங்கேற்கவில்லை என்ற தகவலும் வெளியானது.
ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்புத் அதிகரித்ததால் பலத்த காவல்துறைப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. விழா நடக்குமிடம், நுழைவு வாயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 200 மீட்டருக்கு முன்பே வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு, விழாவுக்குச் செல்வோர், பட்டம் பெறும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
விழாவில் மாணவர் ஒருவரின் குடும்பத்தினர் தி.மு.க கொடி கட்டிய காரில் வந்து கலந்து கொண்டார். அவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். கொடியை காருக்குள் கழட்டி வைக்க அறிவுறுத்தினர். விழாவுக்குச் செல்வோர் அனைவரையும் வெடிகுண்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.
காவல்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகள், பட்டம் பெற மறுத்த முனைவர்கள், தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த மும்பை பல்கலைக்கழக துணைவேந்தர் என மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இனிதே நிகழ்ந்தது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தாத நிலையில், அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மும்பை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் காமாட்சி முதலி, பெண்கள் உயர் கல்விக்கு உதவும் வகையில் மாதம் ரூ.1000 வழங்குவது பாராட்டுக்குரிய திட்டம் என தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் விழா நடக்குமிடம், நுழைவு வாயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 200 மீட்டருக்கு முன்பே வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, விழாவுக்கு செல்வோர், பட்டம் பெறும் மாணவர்கள், பெற்றோர் அனுமதிக்கப்பட்டனர்.
விழாவுக்கு செல்வோர் அனைவரையும் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.
மேலும் இந்த இதேபோன்று நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்தாலும். பட்டம் பெறுபவர்கள் குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை எனவும் தமிழ்நாடு ஆளுநர் உள்ளே அரங்கிற்குள் நுழையும் போது அணைவரும் எழுந்து நின்று அனைவரும் வரவேற்க வேண்டும் எனவும், ஆளுநர் மேடையில் அமர்ந்த பின்பு தான் மற்றவர்கள் இருக்கையில் அமர வேண்டும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதே போன்று பட்டம் பெறும் போது பட்டங்களை பெறுபவர்கள் ஆளுநருக்கு வணக்கம் செலுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான்
பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய பின்னர் ஆளுநர் உரை நிகழ்த்தாமல் புறப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவின் போது ஆளுநர் உரையாற்றிய நிலையில் இந்த ஆண்டு உரையாற்றாமலேயே புறப்பட்டுச் சென்றார்.
அதேநேரம் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ப்பங்கேற்ற மும்பை எச்.பி.என்.ஐ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் யூ.காமாட்சி முதலி உரையாற்றிப் பேசியதாவது: ''இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் தொழில், கல்வி, பொருளாதாரம், மின்சாரம், பாதுகாப்பு போன்ற வளர்ச்சியை பெற்றுள்ளது. பெண்கள் இன்றி நாடு வளர்ச்சி பெறாது என சுவாமி விவேகானந்தர் கூறியபடி, பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். அவர்களுக்கான முன்னேற்றத்துக்கு கல்வி ஒன்றே ஒரே வழி. பெண்கள் உயர் கல்வியை அதிகம் படிக்கின்றனர்.
கிராமங்களில் பெண்கள் உயர் படிப்பில் சேர போதிய பொருளாதாரமின்றி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியில் சேர உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது பாராட்டுக்குரிய திட்டம். ஆனாலும், வரலாற்று ரீதியில் பெண்களுக்கு எதிரான தாக்குதல், முன்னேற்றத்தில் தடை தான் உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.
மின்சார உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற வேண்டும். மொத்த மின் உற்பத்தியில் 2 அல்லது 3 சதவீத அணு உலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. உலக மக்கள் தொகையில் 66 சதவீதம் பேர் 35 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள். இவர்களை முறையாக வழி நடத்தினால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவலாம். உத்தரவாதம் என்பது வாழ்க்கைக்கு உதவாது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதன்மூலம் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு மாற்றலாம்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள், படைப்பாற்றல் திறன் தேவை. எப்போதும், கல்வி, தொழில் நுட்பம், சிந்தனைகள் சாதாரண மக்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். இது கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். எந்தத் தொழில், பணியாக இருந்தாலும், மனிதநேயமும் இருக்கவேண்டும்.” இவ்வாறு உரையாற்றினார்.
கருத்துகள்