முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புரையோடிய ஊழல் புண்ணுக்கு தீர்ப்பெனும் மயிலிறகில் புனுகு தடவியது நீதிமன்றம்

புரையோடிய ஊழல் புண்ணுக்கு  தீர்ப்பெனும் மயிலிறகில்  புனுகு தடவியது நீதிமன்றம்!         

 ஒரு நாடு எப்போது ஊழலற்ற நாடாகிறதோ அப்பொழுது அந்த நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கைத்தரமும் வளர்ச்சியடையும்.

நாட்டில் நடக்கும் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்க வேண்டியது ஒவ்வொருவருடைய தலையாய கடமைகளில் ஒன்று. ஊழலைத் தடுக்கும் வகையில் இந்த பதிவில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வுக் கட்டுரையாகப் பதிவு செய்துள்ளோம். ஊழல் காரணமாகப் பெரிய பிரச்சனைகளை ஒவ்வொரு நாடுகளும் எதிர்கொண்டு வருகின்றன. சிறு ஊழல் கூட அரசினைப் பெரிதும் பாதிக்கின்றது. இத்தகைய ஊழலானது தீராத பிரச்சனையாக சமூகத்தில் இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கின்றது.





இந்த ஊழலை ஒழிப்பது என்பது அவசியமான ஒன்றாகும்.

இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கின்றது. 2011-ஆம் ஆண்டில் இந்தியா தி ட்ரான்சிபரன்சி இன்டர்நேசனலின் ஊழல் மலிவுச் சுட்டெண்ணில் (Corruption Perceptions Index) 178 நாடுகளின் வரிசையில் 95-வது இடத்திலிருந்தது.




பண மோசடித் தடுப்புச் சட்டங்கள், ஊழல் தடுப்பு சட்டம்-1988 உள்ளிட்ட பலவிதமான சட்டங்கள் இந்தியாவிலுள்ள போதிலும் ஊழல் மோசடிகள் இலஞ்சம் இலாவண்யம் போன்றவை சமூகத்தில் அதிகமாகவே காணப்படுகின்றன. தினசரி ஊழல் வழக்குகளை லோக்பால்  மற்றும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள்  மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும்.





ஊழல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படுதல் வேண்டும். இவை போன்றவை அரசினால் மேற்கொள்ளப்படும் போது ஊழல்கள் தடுக்கப்படும். ஊழலை வெளிக்கொண்டு வரும் நபர்களுக்கு தக்க சட்டவழிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்  என்பதே சமூக ஆர்வலர்கள் மார்றும் ஆய்வு அறிஞர்கள் கருத்து

.தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை அப்போதய போக்குவரத்துத்துறையிலும் மற்றும்  உயர்கல்வித்துறையின் அமைச்சரான டாக்டர் கே.பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவான வழக்கில் இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில்,




பொன்முடி  அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என அவர்களை விடுதலை செய்தார்  அதை எதிர்த்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிமுக ஆட்சியில் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மான்புமிகு நீதியரசர்  ஜெயச்சந்திரன்  தீர்ப்பைப் பிறப்பித்ததில்:- அமைச்சராக இருக்கும் 

பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்துச் சேர்த்துள்ளதால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம்  பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக கடந்த  வியாழக்கிழமைநேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் எனத் தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு மூன்று  ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அரசு பதவியில் நீடிக்க முடியாது. பதவிகள் உடனடியாகப் பறிக்கப்பட்டது. மேலும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கவும் முடியாது. இனி மேல்முறையீட்டு மனுவில் ஒட்டுமொத்தத் தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும். தண்டனை மட்டும் நிறுத்தி வைத்தால் பதவியில் நீடிக்க முடியாது. சட்டப்பிரிவு 8(1)-ன் படி குறைந்த அளவு அபராதம் 



(உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதும் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டில் ஒட்டுமொத்த தீர்ப்பையும் நிறுத்தி வைக்கப்பட்டதால் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது) அதுபோலவே பொன்முடியின் அமைச்சர் பதவி பறிப்பும் நடந்துள்ளது,

 இந்தச் சுவர் (வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு)  இன்னும் எவ்வளவு நபர்களைக் காவு வாங்கும் என்பது  யாமறியேன் பராபரமே! 






இங்கு சொத்துக்குவிப்புக் குற்ற





வழக்கில் சிக்கித் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கும்,  வழக்கில் சிக்கினாலும் பல தில்லாலங்கடி வேலை செய்து தப்பித்தவர்களுக்கும்... இதுவரை  வழக்கில் சிக்காமல் உயிருடன்  கழுவுற மீனில் நழுவுகிற மீனாக தப்பியவர்களுக்கும். ஒருவார்த்தை 

நல்ல தீர்ப்பை இறைவன் சொல்லும் நாள் வரும் போது அன்று சிரிப்பவர் யார்? அழுபவர் யார்? தெரியும் அப்போது...எனும் எம் ஜி ஆர் படப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.





அரசியல்வாதிகள் மட்டுமின்றி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது  தவறிழைக்கும் அரசு அலுவலர்களுக்கும் அவர்கள் கூட்டாளிகள் மீதும் இதே போல் வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்குத் தொடர்ந்து அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். 

அப்போதுதான் நாட்டில் ஊழலை முற்றிலுமாக நீக்க முடியும். ,அதோடு மக்களும் வாக்களிக்கப் பணம் பெறுவது கூடாது, 





உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். என்பது போல தப்பைச் செய்தவன் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். 

இது சொத்துக் குவிப்பு வழக்குக்கு மட்டுமல்ல.. நாட்டில் அனைத்து விதக் குற்றங்களுக்கும் பொதுவானது.  வெறும் ஒன்றே முக்கால் கோடி தானா அவர்  வருமானத்தை விட அதிகமாக சேர்த்திருக்கிறார், இன்னும் அதிகம் உண்டு இங்கு அதுவல்ல ஒருரூபாய் தவறு செய்தாலும் அதுவே 





கனம் நீதிபதி அவர்கள் ஒரு பிரபலக்  கட்சிக்காரரை குறைத்து மிகவும் மதிப்பீடு செய்திருப்பது நியாயமா..? தர்மமா என ஒரு தரப்பிலும் 

எவ்வளவு முட்டி மோதி தடுத்துப் பார்த்து அரிதினும் அரிதாக இந்த தண்டனை ஒரு மந்திரியான  கட்சிக்காரருக்கு கிடைத்திருக்கிறது! அதைக் கூட அனுபவிக்க வாய்ப்பின்றி ஒரு மாத கால அவகாசம் தந்துவிட்டீர்களே..?  என சட்டம் தெரியாத ஒரு பிரிவும் பேசுவது தெரிகிறது, 






கீழ் நீதிமன்றத்தில் மிகப் பிழையான தீர்ப்புத் தந்தவரை தண்டிக்கவே வழியில்லையா எஜமானே..?  என சில மிகச்சிறந்த சட்ட வல்லுனர்கள் வினா எழுப்பும் நிலை உள்ளது, ஊழல் ஒழிப்பில் லோக்பால் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் 2019 ஆம் ஆண்டில் உத்தரவுவிட்டது.




ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் குறித்து மக்கள் புகாரளித்தால், அது தொடர்பாக விசாரணை நடத்தி தண்டிக்கக் கூடிய அதிகாரம் லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகளுக்கு இருக்கிறது.  அந்த அமைப்பின் தலைவர்களை நியமிக்க நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரையும் சேர்த்து குழு அமைக்கப்பட வேண்டும் என்பது தான் லோக்பால் சட்டத்தின் அமைப்பு விதி. மற்றும் ரூல் 

அரசு அலுவலர்களான அதிகாரிகள், ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்களைக் கொண்ட லோக் பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையில் 2011-ஆம் ஆண்டு டெல்லியில் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின் 

விளைவாக அப்போதிருந்த மத்திய காங்கிரஸ் கட்சியின் அரசு, லோக் பால் சட்டத்திற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து,  ஒப்புதலையும் பெற்றது. 

லோக் பால் சட்டத்தின் படி, லோக் பால் தலைவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், எதிர்கட்சித் தலைவர், நாடாளுமன்றத்தின் சபாநாயகர், உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக யாருமில்லை என்பதால், லோக் பால் தலைவரை நியமிக்க முடியவில்லை என மத்திய அரசு அப்போது காரணம் கூறியது.

லோக்பால் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இச்சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என இனி மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு தாமதப்படுத்தக் கூடாது”, என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்துமென்று கருதப்பட்டதாலும் . அப்போதே அமைக்கப்பட்டது தான் அந்த அமைப்பு மாநிலங்கள் தோரும் மாவட்ட அமைப்புகள் இன்னும் வரவில்லை

01-06-2014 முதல் 31-03-2023 வரையிலான காலத்தில் மட்டும் புதிதாக நடந்துள்ள வங்கி மோசடிகள் - 65,017. ஆகும் 

ஒன்பதாண்டு காலத்தில் நடந்துள்ள மோசடிகளால் வங்கிகள் அடைந்துள்ள இழப்பானது  ரூபாய் 4,68,899.87 கோடியாகும் 

அதாவது 4 லட்சத்து,68 ஆயிரத்து,900 கோடி ரூபாய் ஆகும் கடந்த காலத்தில் ஏ.ஆர்.அந்துலேவுக்கு அடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா A1 ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது தான் அரசியல் வாதிகள் தண்டணை அடைவதன் துவக்கம் 



அன்றைய தினம் தீர்ப்பை வாசித்து முடிந்ததும், "உங்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. எனவே, இந்த நீதிமன்றத்தை விட்டு எங்கேயும் செல்லக் கூடாது. அந்தப் பெஞ்சில் போய் உட்காருங்கள்'' எனச் சொல்லிவிட்டு, நீதியரசர் மைக்கேல் டி. குன்ஹா பதட்டமே இல்லாமல் கம்பீரமாக எழுந்து போனார். அடுத்த சில நொடிகளில் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாகனத்திலிருந்து தேசிய கொடி அகற்றப்படுகிறது. அந்தக் கணம் மனதளவில் நொறுங்கி வெறுப்பின் உச்சத்துக்குப் போனார் முதல்வராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா. சென்னையிலிருந்து ஒரு மாநிலத்தின் முதல்வராக அடுத்த மாநிலம்  வந்தவரின் அத்தனை அதிகாரங்களையும் சட்டத்தின் மூலம் பிடிங்கி, ஒடுக்கி, எங்கேயும் நகரக்கூடாது என்று மூலையில் உட்காரச் செய்ததன் மூலம் இரும்பு பெண்மணி, அரசியல் ஆளுமை என்று ஊடகங்களால் போலியாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் சரிந்து விழுந்து நொறுங்கி தவிடுபொடியானது.எவரின் அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் பணத்திற்காக விலை போகாமல், சட்டம் அனைவருக்கும் சமம் என சட்டப் புத்தகத்தில் மட்டுமே இருந்ததை நடைமுறையில் நிறைவேற்றிக் காட்டி சத்தியம் தவறாத நீதிபதிக்கான நியாயத்தை நிலைநாட்டிய நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா ஒரு நேர்மையான மனிதர் எனப் பார்க்கப் பட்டார். கவனித்திருக்கிறீர்களா? மற்றொன்று இங்கே பார்க்கப் படவேண்டும் 






அரசு ஊழியர்கள் மேற்கொள்ளும் எல்லா காலகட்டத்துப் போராட்டங்களும் மக்கள் ஆதரவு இல்லாமலேயே தான் நடக்கும்.

'வேற வேலையே இவர்களுக்கு இல்லை' - என்பது தான் குறைந்தபட்ச வசவாக மக்கள் திரளிலிருந்து கேட்கும்.

அரசு அலுவலகங்களுக்கு போகும் மக்கள் நடத்தப்படும் விதம் அப்படியான வலியை வேதனையை ஆறாக புண்ணாக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.

தண்டனை அபராதம் என உச்சபட்சத் தீர்ப்பை வாங்கியிருக்கும் கோல்டுமேன் விவகாரமும் இதேதான்.பேருந்துப்பயணம் ஓசி தானே 

என்று கேட்டதோடு கையறு நிலையில் வந்து நிற்கிற ஏழை பாழைகளைப் பார்த்து அன்று சிரித்தாரே ஒரு ஏளனச் சிரிப்பு.. 





அந்தக்காட்சியைப் பார்த்த ஊழலை எதிர்த்து  சொந்த உழைப்பில் சோறு திங்கிறவர்கள் எவரும் வாழ்நாளில் பொன்முடி என்கிற தெய்வசிகாமணியான அந்த ஊழல் யோக்கிய சிகாமணியை மறக்கவே மாட்டான்.

பொழுது விடிந்தாலே போதும் என் நிம்மதியை இன்று யார் கெடுத்து வைத்திருக்கிறார்கள் - என்றுதான் பார்ப்பேன் என்று கட்சியின் தலைவரும் நாட்டின் முதலமைச்சரும் வேதனையாய்ச் சொன்னதைக் கூட இந்த வடிவத்தில் சிரித்து ரசிக்க முடியுமா என்று வியக்க வைத்த வினோதச்  சிரிப்பல்லவா அது.





அரசியல் தொடர்பாக இராவணா யூ-டியூப் சேனலுக்கு நண்பர் ஒருவர்  ஆறுமாதங்களுக்கு முன் கொடுத்த முதல் பேட்டியில், அமைச்ர்கள் செந்தில் பாலாஜியையும், பொன்முடியையும்  தூக்கி வெளியே க போடாமல் திமுகவுக்கு எதிர்காலமிருக்காது- என்று சொல்லியிருந்தார்.

மாண்புமிகு மட்டுமல்ல சட்ட மன்ற உறுப்பினராகவே இனி இல்லை என்றளவுக்கு ஒரு தீர்ப்பை ஏதோ மெடல் வாங்குவது போல வாங்கிக் கொண்டு வந்து நிற்கும் இவர்களையெல்லாம் அப்படியே கைகழுவி விடுவதை விட்டு, "பொன்முடி விவகாரத்தில் எந்த பாதிப்பும் இல்லை" என்று திருவாய் மலர்வது அடித்தட்டுத் திமுக கட்சியின் தொண்டனின் அடிநாதத்தில் போடுகிற வெடிமருந்தேயன்றி வேறென்ன? வாக இருக்க முடியும் 





கல்விமான், பண்பாளன், தலைமுறையாய் திமுக குடும்பத்துக் கு.பிச்சாண்டி எனும்  மாவட்டச் செயலாளராய் வாழ்ந்த ஊரில்   தகரங்களை 'கோல்டு' என ஐடென்டி செய்த அந்தத் தேர்வாளனை நினைத்து நோவதன்றி வேறென்ன சொல்ல இருக்கிறது.  கீழமை மன்றத்தின் நீதிபதிகள் தேர்வெழுதி வருகிறார்கள். அவர்களை இழிவு செய்யக் கூடாது - எனத் திமுக.

நீதிபதிகள் குறித்து விமர்சனங்கள் வைத்தவை, பிப்ரவரி -மாதம் 09- ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு அன்று மெட்ராஸ்  உயர்நீதிமன்ற வளாகத்தில் அடித்து உடைத்த  மண்டைகள் எத்தனை?

திமுகவினர் கர்நாடக நீதிபதி குமாரசாமி குறித்துப் பேசியவை என்ன? ஆனால் தற்போது குற்றவாளி என வந்த தீர்ப்பு






தலைகனம், திமிர், எகத்தாளம், மரியாதையின்மை, என அனைத்தும் ஒரு சேர இந்த நபரிடம் இருந்தது

மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி பாடம் புகட்டியது  பொன்முடி தரித்தவரின் தண்டணைக்கு அடுத்தகட்டமாக நடக்கும் எதுவும் நடக்காமல் போகுமா என்பது பலரது கவலைக்கு தற்போது பலன் என  21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட தீர்ப்பில் தண்டணை பகரப்பட்டுள்ளது,





இப்படி அதிகாரத்தில் இருப்பவர்களை பாரபட்சமின்றி நீதித்துறை அணுகுவது அபூர்வத்திலும் அபூர்வம் தான்! ஆனால், இந்த அதிசயம் இனியும்  நிலைக்குமா? நீடிக்குமா அல்லது மற்றவர்கள் விஷயத்தில் நீர்த்துப் போகுமா? என்பதும் பின்வரும்  தேதிகளில் தெரியும்!   அது உறுதியானால், முன்னாள் அதிமுகவின்  அமைச்சர்களின் வழக்குகளையும் விரைந்து எடுத்துத் தீர்ப்புகள்  வழங்கப்பட வேண்டும்.

நீதித்துறை ஒன்றேனும் கறைபடாமல் இருந்தால் தான் அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமேனும் பயமிருக்கும் பொதுச் சொத்தை கையாடல் செய்ய!..?  மேலும்  திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு  துணைத்தலைவர் பொங்கலூர் பழனிசாமிக்கு கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் கல்குவாரிகள் இருந்துள்ளன. இதில் முறைகேடு நடைபெறுவதாக கர்நாடகா மாநிலக்காவல்துறையினருக்குப் புகார்கள் வந்தது தொடர்பாக கர்நாடகா மாநிலக் காவல் து றையினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் கர்நாடக மாநிலக் காவல்துறையில்  15 பேர் கோயமுத்தூர் மாநகரில்  இராமநாதபுரம் கிருஷ்ணா வீதியிலுள்ள முன்னால் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத்தில் இரண்டு நாட்கள் முன்  காலை நேரத்தில் சோதனை நடத்தினர். அதேபோல் கோயமுத்தூர் பீளமேட்டிலுள்ள அவரது கல்லூரியிலும் சோதனை நடத்தினர். கல்குவாரி உரிமையாளரான பொங்கலூர் பழனிசாமியின் வீட்டில் சோதனை நடத்த கர்நாடக மாநிலக் காவல்துறை  முடிவு செய்ததற்காக அவர்கள் முறையே உரிய நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தனர். நீதிமன்ற சோதனைகள் மேற்கொள்ள காவல்துறைக்கு அனுமதி வழங்கியதையடுத்து கர்நாடக மாநில காவல்துறையினர் 15 பேர் கொண்ட குழுவினர் நீதிமன்ற உத்தரவுடன்  கோயமுத்தூருக்கு வந்தனர்.





பொங்கலூர் பழனிசாமியின் வீட்டிற்குச் சென்று, நீதிமன்ற உத்தரவைக்  காண்பித்து விட்டு சோதனை மேற்கொண்டனர். அவரது வீடு முழுவதும நடத்திய சோதனையின் போது கல்குவாரி சம்பந்தமாக ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் பார்த்தனர். இந்த வீட்டில் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி வசித்து வருகிறார் தி.மு.க.வில் மாநில விளையாட்டு அணி துணைச் செயலாளராகப் பொருப்பில் வகிக்கிறார்.தற்போதய நிலையில் அரசு ஊழியர்களான பணியாளர்கள் தங்களை எஜமானர்கள் போல நினைத்து புகார் மனுக்கள் சரியாகப் பரிசீலனை செய்யாமல் அவர்கள் எதிர்தரப்பை வரவழைத்து கையூட்டு பெறுவது அதிக இடங்களில் நடக்கிறது இதுவே நீதிமண்றங்களில் உரிமையியல் வழக்குகள் அதிகரிக்கக் காரணமாகிறது, ஒரு அலுவலகத்தில்  உங்களது மனு ஏற்கப்பட்டது. அல்லது உங்களது மனு முடித்து வைக்கப்பட்டது. இதுதான் தமிழ்நாடு அரவின் அரசின் அலுவலக நிலைமை. ஆங்கிலேயக் கிழக்கிந்திய பிரிட்டிஷ் அடிமை ஆட்சியில் கூட இப்படியான ஒரு நிலை இருந்திருக்காது. இறக்கபட்ட்டாவது நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.






ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட வேண்டிய கிராமநிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள்,  வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுநலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வரை   பொது மக்களின் வரிபணத்தில் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவித்து அதிலிருந்து ஆதாயம் அடைகின்றனர்.  இப்படி ஒரு நிலையில சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் அதே குற்றவியல் சட்டம் சார்ந்த வழக்குகளை இனிக் கையாளப் போகிறார் 02 ஜனவரி 2023 ஆம் தேதி முதல். அதனால் ஊழல் வாதிகள் கலக்கத்தில் உள்ளனர் அதில் நாம் போடப்போகும் லோக்பால் சார்ந்த வழக்கும் வரும் என்பதே இங்கு பொதுநீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்