முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள்   


 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 7 மணிக்கு தொடங்கினாலும், மாலை போட்டி முடிவதற்கு 6.10 மணி ஆகிவிட்டது. இதற்கு, மாவட்ட நிர்வாகத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அமைச்சர் உதயநிதியை வரவேற்பதிலும், அவரை ஜல்லிக்கட்டு பார்த்து திரும்பி செல்லும் வரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதிலுமே கவனமாக இருந்ததால் காளைகளை அவிழ்ப்பதில் தாமதம் ஏற்பட்டது.                      

நடிகர் சூரி காளைக்கு முன்னுரிமை முதல் போட்டி தாமதம் வரை - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ‘சம்பவங்கள்’



மதுரை: நடிகர் சூரியின் காளை தாமதமாக வந்த போதிலும் அதற்கு முன்னுரிமை கொடுக்க அதிகாரிகள் போராடினர். மேலும் அரசு அலுவலர்கள்  அதிகாரிகளின் மெத்தனத்தால் ஜல்லிக்கட்டு போட்டி தாமதமாக முடிந்தது. அந்த வகையில் 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் காளைகள், பிடிப்பட்டாலும், பிடிபடாவிட்டாலும் கடைசியில் காளைகள் சேகரிக்கும் இடத்தில் ஓடிப்போய் நிற்கும். அங்கு காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளை பிடித்து அழைத்துசெல்ல வேண்டும். அதில் சில காளைகள் பிடிப்படாமல் ஊருக்குள் வந்துவிடும். சில காளைகள், ஓடிச்சென்று காணாமல் போய்விடும். காளை உரிமையாளர்கள், ஒரு வாரம், ஒரு மாதம் முழுவதும் தேடி ஜல்லிக்கட்டு காளை கண்டுபிடிக்கும் சம்பவங்களும் நடக்கும். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் சேரிக்கும் இடத்தில் காவலர்கள்  பாதுகாப்பு சரியாக போடப்படவில்லை




அதனால், உள்ளூர் இளைஞர்கள், சிறுவர்கள், காளைகள் சேகரிக்கும் இடத்தில் குவிந்து, ஓடி வந்த காளைகளின் கொம்புகளை பிடித்தும், திமில்களை பிடித்தும் அடக்க ஆரம்பித்தனர். அதனால், வாடிவாசலில் ஒரு ஜல்லிக்கட்டும், காளைகள் சேகரிக்கும் இடத்தல் இரண்டாவது ஜல்லிக்கட்டும் நடந்தது. அதில் சினம் அடைந்த சில காளைகள் பார்வையாளர்கள் பகுதியில் புகுந்து பொதுமக்களையும், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர், 5 காவலர்கள் என பலரை முட்டித் தாக்கியதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முன்னாள்  அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காளையை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தார்.




 நடிகர் சூரியின் காளை 90-ஆம் நம்பர் டோக்கன் பெற்றிருந்தாலும் வரிசை முறையில் எந்த இடத்தில் நிற்கிறது என்பது தெரியவில்லை. நள்ளிரவே வந்து காத்து கிடந்தால் மட்டுமே காளையை முன்கூட்டியே அவிழ்க்க முடியும். ஆனால், சூரி தாமதமாக காளையை கொண்டு வந்ததால் அவரால் முன்கூட்டியே அவிழ்க்க முடியவில்லை. ஆனால், அவர் மேடையில் இருந்த உதயநிதியிடம் தனக்கு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, காளையை முன்கூட்டியே அழைக்க ஏற்பாடு செய்தார். விழா கமிட்டியினர், அனைத்து துறை அதிகாரிகளும் சூரியின் காளை வாடிவாசல் பின் பகுதி வரிசையில் எங்கு இருக்கிறது என தேடினர்.

அதனை உடனடியாக வாடிவாசலுக்கு அனுப்ப கால்நடை பராமரிப்பு துறைக்கு மாவட்ட உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து உத்தரவுகள் பறந்து கொண்டிருந்தது. மறைத்து செய்ய வேண்டிய இந்த விஷயத்தை, மேடையில் வர்ணணை செய்த விழாக்குழுவினர், ‘‘ஏப்பா சூரி மாட்டை முன்னாடி விடுங்கப்பா, எங்கிருந்தாலும் அழைத்துவாங்கப்பா’’ என பகிரங்கமாக மைக்கில் தெரிவித்தனர். ஆனால், கடைசிவரை அவரது மாடு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. சூரி காளை அவிழ்ப்பதற்காக காத்திருந்த அமைச்சர் உதயநிதி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சென்றுவிட்டார்.






545 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க வாடிவாசலுக்கு காலை வந்திருந்தனர். அவர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்ததில் மது அருந்தியது, 18 வயதிற்கு குறைந்தவர்கள், உடல்நலக் குறைவு போன்ற பல காரணங்களால் 45 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 7 மணிக்கு தொடங்கினாலும், மாலை போட்டி முடிவதற்கு 6.10 மணி ஆகிவிட்டது. இதற்கு, மாவட்ட நிர்வாகத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அமைச்சர் உதயநிதியை வரவேற்பதிலும், அவரை ஜல்லிக்கட்டு பார்த்து திரும்பி செல்லும் வரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதிலுமே கவனமாக இருந்ததால் காளைகளை அவிழ்ப்பதில் தாமதம் ஏற்பட்டது.

அந்த தாமதத்தை கண்டறிந்து போட்டியை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உதயநிதி சென்றபிறகே அமைச்சர் பி.மூர்த்தி, போட்டியை கையில் எடுத்து நடத்த ஆரம்பித்தார். அவர் நடிகர் சூரி அமர்ந்திருக்க ஒரு அமைச்சராக இருந்தாலும் நின்று கொண்டிருந்தார் அதன்பிறகு போட்டி வேகமெடுத்தாலும் போட்டி தாமதமாகவே முடிந்தது.

ஐபிஎல் போட்டிகளைப் போல ஜல்லிக்கட்டுப் போட்டிகளையும் லீக் முறையில் ஆண்டு முழுவதும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும், ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். மேலும், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கத்தை கட்டியுள்ளோம். இந்த அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

இன்று நடந்த  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார். இந்தப் போட்டியில் 83 பேர் காயமடைந்த நிலையில், 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முழுமையாக வாசிக்க 18 காளைகளை அடக்கியதாக கார்த்திக்கு கார் பரிசு பெற்றாலும் , இரண்டாம் பரிசு நபர் இதை அரசியல் ஓரவஞ்சனை என குற்றம் சாட்டினார். காயம் அடைந்த நபர்கள்  83 

 “ஜல்லிக்கட்டு போன்ற ஒரு வீர விளையாட்டை உலகில் வேறு எந்த நாட்டிலிலும் நாங்கள் பார்த்ததில்லை, ’’ என்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வியந்தனர். 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கேலரியை ஆக்கிரமித்த உள்ளூர் விஐபிகள்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் அமர்ந்து பார்க்கும் கேலரியில் இந்த ஆண்டு உள்ளூர் அரசியல்வாதிகள், அவர்கள் குடும்பத்தினர் ஆக்கிரமித்து கொண்டதால் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 2 மணி நேரமாக வெயிலில் தவித்தனர்.

வெளிநாட்டினர் பார்வையிடுவதற்காகவே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் அருகே ‘உலக சுற்றுலாப் பயணிகள் கேலரி’ என்ற கேலரி அமைக்கப்பட்டிருக்கும். இந்த கேலரியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிப்ட் முறையில் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பார்கள். ஆனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் வந்த விஐபி அரசியல்வாதிகள், அனைவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கேலரியில் போய் அமர்ந்து கொண்டனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலின் மதியம் 12 மணிக்கு செல்லும் வரை, அமர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டனர்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்காக சுற்றுலாத் துறையினரால் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு சுற்றலாப் பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், விழா மேடை அருகே தங்கள் கேலரிக்கு செல்ல இடமில்லாமல் காலை 9.30 மணிமுதல் 11.30 மணி வரை வெளியில் காத்திருந்தனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் வெளிநாட்டினர் கேலரியில் அமர்ந்திருந்த விஐபி அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் வெளியேற்ற முடியாமல் வெளிநாட்டினரையும் காத்திருக்க வைக்க முடியாமல் பரிதவிப்பிற்கும், தர்ம சங்கடத்திற்கும் ஆளாகினர்.

இதற்கிடையில், சுற்றுலாத் துறை அதிகாரிகளையும், வழிகாட்டிகளையும், வருவாய்த்துறை அதிகாரிகள், நாங்கள் சொன்ன பிறகு அழைத்து வந்திருக்கலாமே, ஏன் உடனடியாக அழைத்து வந்துவிட்டீர்கள் என்று கடிந்து கொண்டனர். இரு தரப்பினருக்குமான வாக்குவாதமும், வெளிநாட்டினரின் பரிதவிப்பும், அப்பகுதியில் பரபரப்பையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், வெளிநாட்டினர் காத்திருப்பிற்கும் மத்தியில் எந்த அதிருப்தியையும், சலசலப்பையும் வெளிகாட்டாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். அவரது அமைதியும், பொறுமையுமே  அப்பகுதியில் பிரச்சினை எதுவும் வரவில்லை.

மதியம் 11.45 மணியளவில் அமைச்சர் உதயநிதி புறப்பட தயாரானதால் வெளிநாட்டினர் கேலரியில் அமர்ந்திருந்த விஐபி அரசியல்வாதிகள், அதிகாரிகள் அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டு வெளியே வர ஆரம்பித்தனர். பெரும் நிம்மதியடைந்த காவல்துறை, வருவாய்துறையினர், வெயிலில் காத்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை, அவர்களுடைய கேலரிக்கு கொண்டு சென்று அமர வைத்தனர். ஒரு அமைச்சரே அமராமல் நிறகும் நிலை இப்போது தான் அப்பகுதி மக்கள் காணும் நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...