முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிருஸ்தவ சர்ச்சில் நடந்த விவகாரம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பொது அமைதியைக் கெடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு,


தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் கன்னியாகுமரியில் துவங்கிய `என் மண் என் மக்கள்’ யாத்திரை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் கடந்த சில நாட்களுக்கு முன் தர்மபுரி மாவட்டம்  பாப்பிரெட்டிப்பட்டி, லூர்துபுரத்திலுள்ள கிருஷ்தவ மிஷன் லூர்து அன்னை சர்ச்சுக்கு


அவரது கட்சியினருடன் சென்ற போது அங்கு அண்ணாமலையை சில நபர்கள் உள்ளே வரக்கூடாதென்று  கண்டனம் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

`இது புனிதமான இடம் நீங்கள் வந்து மாலை போடக்கூடாது..!’ என்றதற்கு அண்ணாமலை, `எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்பதற்காக தான் நான் இங்கு வந்தேன்’ என்றார். அதற்கு அந்த நபர்கள், `எல்லோரும் நல்லா இருக்கணும் என்று கூறும் நீங்கள் கிறிஸ்துவ மக்களை வதைப்பது ஏன்? பின்தங்கிய மக்களுக்கு மத்திய அரசின் சலுகைகளை வழங்க மறுப்பது ஏன்?’ என்று கேள்விகளை முன் வைத்ததனால் அதற்கு அண்ணாமலை,



``இலங்கையில் 2009-ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் தமிழர்கள் இறந்த போது, நீங்கள் எங்கே போனீர்கள். கட்சிக்காரர்கள் சிலரின் தூண்டுதல் காரணமாக, நீங்கள் இப்படிச் செய்கிறீர்கள். இங்கே என்னை வரக்கூடாது எனத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

இந்த ஆலயம் உங்கள் பெயரில் இருக்கிறதா. நான் தர்ணாவில் ஈடுபட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்?’ எனக் கேட்டார். அதற்கு இளைஞர்கள் இங்கு வரக்கூடாது.. இது எங்களுக்கான சர்ச் என்றனர். அப்போது அண்ணாமலையுடன்  வாக்குவாதம் செய்த நபர் ஒருவரை பாதுகாப்புக்கு வந்த காவல்துறை யினர் அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.. அப்போது சிலர், `அண்ணாமலை வெளியே போ. பிஜேபியே வெளியே போ. எனக் கோஷமிட்ட நிலையில் நேற்று முன்தினம்   பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததில், `கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே ஆத்திரத்தை ஏற்படுத்துவது, பொது அமைதியைக் குலைப்பது, பொது அமைதிக்கு எதிராகப் பேசுவது’ என, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மற்றொரு பக்கம் அண்ணாமலையுடன் பிரச்னையில் ஈடுப்பட்ட கார்த்திக் எனும் நபர் திமுக இளைஞர் அணியைச் சார்ந்தவர் என்றும், அமைச்சர் உதயநிதியும் அவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


இதனால் திமுக தான் இதனை திட்டமிட்டு பிரச்சனையை கிளப்பிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவிக்கின்றனர்.இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் கருத்தாக வந்த தகவலில்  கிறிஸ்துவ மதத்தின் கடவுளை வணங்கி வழிபடச் சென்ற திரு.அண்ணாமலை அவர்கள் மீது பொது அமைதியைக் குலைக்க முயன்றதாக வழக்கு தொடுத்துள்ளது தமிழக அரசு. கடவுள் அனைவருக்கும் சமம், அனைவருக்கும் ஆலய பிரவேசம் உரிமை எனும் போது, அண்ணாமலையை தடுத்து நிறுத்த எத்தனித்தவர்கள் மீது நடவடிக்கைகள் பாய வேண்டியதற்கு மாறாக, அண்ணாமலை அவர்களை மிரட்டிப் பார்ப்பது சட்ட விரோதம். கடவுளை வணங்கச் சென்ற, கிருஸ்துவ  மதத்தை போற்றச் சென்ற அண்ணாமலை அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதும், ஹிந்து மதத்தை (சனாதன தர்மத்தை) ஒழிப்பேன் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினைப் போற்றுவதும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை ! தி மு க அரசு ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விடச் சான்று தேவையா? என

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்

நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுளளார். இதில் பொதுநீதி யாதெனில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தவர்கள் ஹிந்து ஆலயங்களில் பணி செய்யும் மாற்று மதம் சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்பதுவே நமது எழுவினா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...