முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் வழிபட்டார்

பிரதமர் அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் வழிபட்டார்



தமிழ்நாட்டில் உள்ள அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாட்டில் ஈடுபட்டார்

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"140 கோடி இந்தியர்களின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், நல்வாழ்வுக்காகவும் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன்."பிரதமர் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்


தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார்.

மகான் கம்பன் தனது ராமாயணத்தை முதன்முதலில் வெளி உலகத்துக்கு  அரங்கேற்றிய கோவிலில் கம்ப ராமாயணத்தின் பாராயணத்தையும் பிரதமர் கேட்டறிந்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"ஶ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த கோவிலுடனான பிரபு ஶ்ரீராமரின் தொடர்பு நெடியது. பிரபு ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசீர்வதிக்கப்பட்டதை  பாக்கியமாக உணர்கிறேன்.


”அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டாவின் பின்னணியில், சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலி செய்திகள் பரவுவதை கவனத்தில் கொண்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.


2024 ஜனவரி 22, அன்று அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டா விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ள சூழலில், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சில சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலிச்செய்திகள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன, அவை வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கக்கூடும் என்று கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.


இதைக் கருத்தில் கொண்டு, 2024 ஜனவரி 20 ஆம் தேதி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கு அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது, தவறான அல்லது போலியான அல்லது நாட்டில் வகுப்புவாத நல்லிணக்கம் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தன்மை கொண்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் வெளியிடுவதையோ அல்லது


ஒளிபரப்புவதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது. மேலும், சமூக ஊடக தளங்கள் தங்கள் உரிய விடாமுயற்சியின் ஒரு பகுதியாக, மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை பதிவேற்றம் செய்யவோ, காட்சிப்படுத்தவோ அல்லது வெளியிடவோ கூடாது என்று நியாயமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் ஒழுங்குமுறை சட்டம், 1995 இன் கீழ் நிகழ்ச்சி குறியீட்டின் பின்வரும் விதிகள் மற்றும் பிரஸ் கவுன்சில் சட்டம், 1978 இன் கீழ் இந்திய பத்திரிகை கவுன்சில் வகுத்துள்ள பத்திரிகை நடத்தை விதிமுறைகள் குறித்த  இந்த ஆலோசனை கவனத்தை ஈர்க்க விழைகிறது. இது தகவல் தொழில்நுட்ப (இடைப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை குறியீடு) 2021விதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதழியல் நடத்தை விதிமுறைகள்

"துல்லியம் மற்றும் நேர்மை: i) துல்லியமற்ற, ஆதாரமற்ற, கருணையற்ற, தவறாக வழிநடத்தும் அல்லது சிதைந்த உள்ளடக்கத்தை வெளியிடுவதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும்.


சாதி, மதம் அல்லது சமூகம் குறிப்புகள்: 6) ஒரு கட்டுரையின் தொனி, உணர்வு மற்றும் மொழி ஆட்சேபனைக்குரியதாகவோ, ஆத்திரமூட்டுவதாகவோ, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகவோ அரசியலமைப்பின் உணர்வுக்கு எதிரானதாகவோ தேசத்துரோகம் மற்றும் ஆத்திரமூட்டும் இயல்புடையதாகவோ அல்லது வகுப்புவாத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகவோ இல்லை என்பதை உறுதிப்படுத்துவது செய்தி நிறுவனங்களின் கடமையாகும்.




முதன்மையான தேசிய நலன்: i) இந்திய அரசியலமைப்பின் 19 வது பிரிவின் பிரிவு (2) இன் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை மீது சட்டத்தால் நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடிய அரசு மற்றும் சமூகத்தின் தலையாய நலன்களுக்கு அல்லது தனிநபர்களின் உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும், தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவொரு செய்தி, கருத்து அல்லது தகவலையும் வழங்குவதில் செய்தித்தாள்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் உரிய கட்டுப்பாட்டையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

நிகழ்ச்சி குறியீடு




"விதி 6 (1) கேபிள் சேவையில் எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்படக்கூடாது:-

(இ) மதங்கள் அல்லது சமூகங்கள் மீதான தாக்குதல்கள் அல்லது மதக் குழுக்களை இழிவுபடுத்தும் அல்லது வகுப்புவாத மனப்பான்மையை ஊக்குவிக்கும் காட்சிகள் அல்லது சொற்கள்;

(ஈ) ஆபாசமான, அவதூறான, வேண்டுமென்றே, தவறான மற்றும் பரிந்துரைக்கும் சூழ்ச்சிகள் மற்றும் அரை உண்மைகளைக் கொண்டுள்ள தகவல்கள்;

(உ) வன்முறையை ஊக்குவித்தல் அல்லது தூண்டுதல் அல்லது சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கு எதிரான அல்லது தேச விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் எதையும் உள்ளடக்கியதாக இருத்தல்;


சமூக ஊடக தளங்கள் உட்பட தொலைக்காட்சி, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகளை பின்பற்றுமாறு அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது, குறிப்பாக பொது ஒழுங்கு தொடர்பான விஷயங்களில், வெளியிடப்படும் / ஒளிபரப்பப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையில் துல்லியம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மத சமூகங்களிடையே வகுப்புவாத நல்லிணக்கத்தையும் பேனவேண்டும்


ஆலோசனையை இங்கே அணுகலாம்.மேற்கு வங்க மக்கள் பிரபு ஸ்ரீ ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்: பிரதமர்


மேற்கு வங்க மக்கள் பிரபு திரு. ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். 

பாயல் கர் பாடிய ஸ்ரீ ராமரின் புகழ்பெற்ற 'மோன் ஜோபோ நாம்' என்ற பஜனையையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;




"மேற்கு வங்க மக்கள் பிரபு ஸ்ரீ ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இங்கே அதன் அடையாளமாக  நஸ்ருல் கீதி மோனோ ஜோபோ நாம் உள்ளது. #ShriRamBhajan"இராமாயணத்தின் உணர்ச்சிகரமான சபரி அத்தியாயத்தில் மைதிலி தாக்கூர் பாடிய பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இராமாயணத்தின் உணர்ச்சிகரமான சபரி நிகழ்ச்சியை முன்னிட்டு மைதிலி தாக்கூர் பாடிய பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.



அயோத்தியில் பிரதிஷ்டை கொண்டாட்டம் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் தொடர்பான பல்வேறு சூழல்களை அனைவருக்கும் நினைவூட்டுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  கூறியிருப்பதாவது;

"அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சி ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் தொடர்பான ஒவ்வொரு சம்பவத்தையும் நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவூட்டுகிறது. அத்தகைய ஒரு உணர்வுபூர்வமான  அத்தியாயம் சபரியுடன் தொடர்புடையது. மைதிலி தாகூர் அவர்கள் தனது இனிமையான ராகங்களில் இதை எவ்வாறு நெய்திருக்கிறார் என்பதைக் கேளுங்கள்.  #ShriRamBhajan "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...