நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவான தேனி மாவட்ட மண்டலத் தலைவர் அப்பர் ராஜா கைது .
மதுரை, எஸ்.எஸ்.காலனியில் தலைமையிடமான நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வீரசக்தி ஆகியோர் மீது பொதுமக்களின் முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் , இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன் ஆகியோர் அடங்கிய 27 பேரைக் கைது செய்தனர்.
17 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ரூபாய்.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி கணக்குப் பரிவர்த்தனைகளையும் முடக்கினர், அதன் துணை நிறுவனமான டிரான்ஸ்கோ பிராபர்டிஸ் பி.லிட். மற்றும் டிரைடாஸ் பிராப்பர்டிஸ் பி.லிட்., போன்ற கிளை நிறுவனங்களின் இயக்குநர்களையும் தேடி வந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் மேத்தா (வயது 42), டிரைடாஸ் பிராப்பர்ட்டிஸ் பி.லிட்., நிறுவன இயக்குநர் மதிவாணன் (வயது 40) ஆகியோரை பொருளாதாரகஹ குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தவர்களில் அசோக் மேத்தா, 400 பேரிடம் ரூ.60 கோடியும், மதிவாணன் 200 பேரிடம் ரூ.45 கோடியும் மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்த நிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தேனி மாவட்ட மண்டல தலைவர் அப்பர் ராஜா கைது செய்யப்பட்டார். பலகோடி ரூபாய் மோசடி செய்து சொத்து சொத்துக் குவித்திருந்த அப்பர் ராஜாவை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த குழு ஒன்று நடத்தியதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் அமைந்துள்ள ரூபாய் .207 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையிலிருந்து ED விசாரணை உருவாகிறது.
நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் மீது முதலீட்டாளர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. லிமிடெட் மற்றும் அதன் குழும நிறுவனங்கள், "பல முதலீட்டாளர்களைப் பல்வேறு திட்டங்களில் (பிளாட் டெவலப்மெண்ட்) அதிக வருமானம் 12-30 சதவீத வட்டியுடன், தருவதாகக் கூறி, பல முதலீட்டாளர்களை ஏமாற்றி, அதில் அவர்கள் தராமல் "தோல்வியடைந்ததாக" ED ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்ற இயழவில்லை எனக் கூறியது
நியோமேக்ஸ் குழும நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலித்து, இந்த நிதியை ஷெல் நிறுவனங்கள், குழு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு (குழுவிற்கு வெளியே) "திறந்து" ஏமாற்றியதாக ED தெரிவித்துள்ளது.
குற்றத்தின் வருமானத்தை மறைக்க குழு அதன் கணக்குப் புத்தகங்களை "கையாண்டது" மற்றும் குழுவின் தணிக்கையாளர் தனது அறிக்கையில் இதை ஒப்புக்கொண்டார்.நியோமேக்ஸ் முறைகேடு ரூபாய்.78 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை முடக்கி அரசிதழில் வெளியிட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு . நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில் ஆகியோர் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில், நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் கண்டறியப்பட்ட சொத்துகளை முடக்கி அரசிதழில் வெளியிடப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதற்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் , சிவகங்கை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உள்ளனர். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் மூன்றாண்டுகளில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகத் தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்ததை நம்பி பலர் பல கோடிக்கு முதலீடுகளைச் செய்தனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டியோ அசலோ தராமல் ஏமாற்றினர். அதனால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ள கமலக்கண்ணன், வீரசக்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர். நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி, ரவிசங்கர், ராஜ்குமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் நம்பி செல்வன், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் சுமார் 51 லட்சம் சதுர அடி நிலம் மற்றும் 78 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையால் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடைபெறுகிறது என்றும் இந்தச் சொத்துக்களை முடக்கி, அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி அரசிதழில் வெளியிடப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
கருத்துகள்