முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 9 நபர்கள் மீது வழக்குப் பதிவு நால்வர் கைது

ஆபாசக் காணொளி வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக 


பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 9 நபர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து பள்ளித் தாளாளர் உட்பட நான்கு நபர்களைக் கைது செய்தனர்.   மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நிர்வாகம் செய்கிற நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின்  பாஜக தலைவரான அகோரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருதகிரி அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதில், தருமபுரம் ஆதீனம் தலைமை பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் சகோதரரும் உதவியாளரும் ஆவேன் கடந்த சில நாட்களாக


ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவர் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாகத் தொடர்பு கொண்டும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு தன்னிடமும், தலைமை மடாதிபதி சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் தான் கேட்கும் பணத்தைக் கொடுக்காவிட்டால் சமூக வனதைளங்களிலும் டிவி சேனல்களிலும் மேற்படி ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதீனத்தையும் மடாபதிடையும் அவமானபடுத்தி விடுவதாகவும் தனது சார்பில் திருவெங்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த ரவுடி விக்னேஷ் உங்களிடம் பேசுவாரெனவும் பணம் கொடுக்காமல் காவல்துறையினரிடம் சென்றால் மேற்படி விக்னேஷ் மூலம் ரவுகளைக் கொண்டு மடத்தை சார்ந்தவர்களைக் கொலை செய்யவும் தயங்கமாட்போம் என ஆபாச வார்த்தைகளால் மிரட்டி பலமுறை என் கழுத்தை நெறித்துகஹ கொலை செய்ய முயற்சித்தனர். 

நான் உயிருக்குப் பயந்து மடத்திலுள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று நடுவதாக தெரிவித்தேன். பின்னார் அது தொடர்பாக கலைமகள் பள்ளி நிறுவனர் கொடியரசு, செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருக்கடையூர் விஜயக்குமார், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் ஆகியோர்களின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ். ஆரியோர தன்னைத் தொடர்பு கொண்டு மடத்தினர் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதனை வெளியிடாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் கேட்டும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டுமென்றும் கூறினார்கள் மேலும் அவ்வாறு அவர்கள் கேட்டும் தொகையை கொடுத்து பிரச்னை இல்லாமல் விஷயத்தை முடிக்குமாறும் விணாக ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் அவர்கள் சொல்வதைச் செய்ய கூடியவர்கள் எனவும் எங்களை அச்சுறுத்தும் வகையில் மடாதிபதியின் நேர்முக உதவிடாளர் செந்தில் அவர்களின் கூட்டோடு மனஉளைச்சல் ஏற்படுத்துகின்றார்கள். இவர்களின் இந்த அச்சுறுத்தலால் மடாதிபதியும் மடத்தில் உள்ளவர்களும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளோம் எனவே காவல்துறைத் தலைவர் அவர்கள் மடத்தினர் சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் கேட்டும் பணத்தை கொடுக்காத பட்சத்தில் அதை வெளியிட்டு மடத்திற்கும் மடத்தில் உள்ளவர்களுக்கும் கெட்டபெயர் உண்டு பண்ணவும், பணம் கொடுக்காத மடத்தில் உள்ளவர்களை கொலை செய்து விடுவதாகவும் ஆபாச வார்த்தைகளால் மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடத்தின் பணியாளர் செந்தில் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பாஜக பிரமூகர் ஒருவர் உட்பட 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த படி வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது மயிலாடுதுறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(28), பிரபாகர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


இதையடுத்து, குடியரசு(40), ஸ்ரீநிவாஸ்(28), வினோத்(32), விக்னேஷ்(33) ஆகியோரை தனிப்படைபோலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனர்.இதனிடடையே தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி நேற்று எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள மற்றொரு மனுவில், ‘‘நான் ஏற்ெகனவே கொடுத்த புகார்மனுவில் குறிப்பிட்டுள்ள திருக்கடையூர் விஜயகுமார், இந்த விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். எங்களை மிரட்டிய நபர்களிடம் பேசி, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முயற்சிஎடுத்தார். அதுபலன் அளிக்கவில்லை. இதனால், அவரது யோசனைப்படி தங்களிடம் புகார் அளித்தேன். அவருக்கு இந்த வழக்கில் வேறு எந்த தொடர்பும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.தருமபுரம் ஆதீனகர்த்தர் நேற்றுமாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளுடன் சேர்ந்து சிலர் மிரட்டிய விவகாரத்தில், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து, எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காப்பாற்றியுள்ளனர்.தருமபுரத்தில் அமைந்துள்ள ஆதீன சைவ மடத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம்  வகிக்கிறார் மயிலாடுதுறை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நேற்றுக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது மிகத் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் தருமபுரம் ஆதீனம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.


அது குறித்து தருமபுரம் ஆதீனம் மடம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகத் துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தருமபுர மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.              சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதற்காக 16 ஆம் நூற்றாண்டில் ஆதீனம் நிறுவப்பட்டது தர்மபுரம் ஆதீனத்தின் கீழ் உள்ள கோவில்கள் பல அதில் 


வைத்தீஸ்வரன் கோவில்

திருப்பனந்தாள் அருணாஜடேஸ்வரர் கோவில்

அமிர்தகடேஸ்வரர்-அபிராமி கோவில், திருக்கடையூர்

வீரதீஸ்வரர் கோவில், திருப்பரியலூர்

உத்தவேதீஸ்வரர் கோவில், குத்தாலம்

திருநன்றியூர யாழ்மூரிநாதர் கோவில், திரு தர்மபுரம், காரைக்கால்

ஐயாறப்பர் கோவில், திருவையாறு

மணக்குடி கருங்குயில்நாதன்பேட்டை

உச்சிரவனேஸ்வரர் கோவில், திருவிளாநகர்

தர்பாரண்யேஸ்வரர் கோவில், திருநள்ளாறு

சுயம்புநாதசுவாமி கோவில், பேரளம்

கம்பஹேஸ்வரர் கோவில், திருபுவனம்

சிவலோகத்தியாகர் கோவில், ஆச்சாள்புரம்

வீரதீஸ்வரர் கோவில், திருக்குறுக்கி

மயிலாடுதுறை (ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில்)

வள்ளலார் கோவில், மயிலாடுதுறை

மயிலாடுதுறை (குமார கட்டளை)

முல்லைவனநாதர் கோவில் , திருமூலைவாயல்

மகாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர்

சட்டைநாதர் கோவில், சீர்காழி

உய்யகொண்டான் திருமலை கோவில்

தலஞாயர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருக்குவளை

தியாகராஜர் கோவில், திருவாரூர் - ராஜாங்க கட்டளை,

தர்மபுரம் (ஞானபுரீஸ்வரர் கோவில்) ஆகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...