முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டி.டி.வி.தினகரன் எடுத்த ்ஸ்திரமான முடிவால் தடுமாறும் எடப்பாடி கே.பழனிச்சாமி அணி

பிரதமரின் சென்னைப் பயணத்துக்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகளுடன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி நடத்தும் பேச்சுவார்த்தை மற்றும்  நடவடிக்கைகள் அதிகமாகவே மாறியதாம் 


சமீபத்தில் சென்னைக்குப் பிரதமர் வந்திருந்த போது, ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தாமரைச் சின்னமே களமிறங்க வேண்டும். அப்போது தான் தாமரையா, சூரியனா. என மக்களைப் பேசவைக்க முடியும். கூடவே, நம் வாக்கு சதவிகிதத்தையும் உயர்த்திக்கொள்ள முடியும்’ எனப் புதுக்கணக்கு ஒன்றைச் சொன்னாராம் மாநிலத் தலைவர் அண்ணாமலை. பிரதமரும் தலையசைத்துவிட்டுப் புறப்பட்டதில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, சொந்தக் கட்சியில் மூத்தவர்கள் சிலருக்கே உடன்பாடில்லை என்ற நிலையில். தென்மாவட்டத்தில் களமிறங்கத் திட்டமிடும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான ஒருவர், ‘இந்த நிபந்தனைகளுக்கு ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி. தினகரனும்  ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் கூட்டுமில்லை யென்றால், தென்மாவட்டங்களில் நம் நிலைமை மோசமாகிவிடும்’ என்றிருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நல்லிரவில் நடந்த பேச்சுவார்த்தையில் அமமுக கட்சிக்கு நான்கு தொகுதிகளும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அதிமுகவுக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது ஆனாலும், அண்ணாமலை தரப்பு. ‘நம்முடன் கூட்டணி உடன்படிக்கை செய்துகொண்ட கட்சிகளெல்லாம் தாமரைச் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டன. அதை ஏற்பவர்கள் நம்முடன் வருவார்கள்.’ என அவருக்குப் பதில் தந்திருக்கிறது அடுத்ததாக ”திமுகவின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியதன் மூலம் திமுக கூட்டணியில் கட்சிகளுக்காண தொகுதி ஒதுக்கீட்டை நிறைவு செய்துள்ளது


திமுக கூட்டணி கட்சிகளுக்கு 19 இடங்களை திமுக ஒதுக்கியுள்ள நிலையில், மீதமுள்ள 21 இடங்களில் திமுக நேரடியாகக் களமிறங்க உள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்ட திமுக. இந்த முறை அதைவிடக் கூடுதலாக ஒரு இடத்தில் களம் அமைத்துள்ளதில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளன. ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைலையிலான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மட்டும் நாமக்கல் தொகுதியில் திமுக வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது



தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில். தொகுதிப் பங்கீட்டை முதல் அணியாக முடித்துள்ளது திமுக கூட்டணி.  இந்திய யூனியன் முஸ்லீக் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மதிமுக 1, விடுதலை சிறுத்தைகள் 2 


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் உடன்பாடும் கையெழுத்தானது. அதன்படி, மநீம கட்சிக்கு ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டது. ‛திமுகவை கூட்டணி பலம் அசைக்க முடியாது’.. லோக்சபா தேர்தலில் என்ற நிலையில் தமிழகத்தில் அதிமுகவை முந்திய பாஜக கூட்டணி என- டைம்ஸ் நவ் தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்பு வந்துள்ள போதிலும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் வெல்லும் என்பது பற்றி டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு மேற்கொண்ட நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியாகின, நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்காவிட்டாலும் கூட கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்த முறை நான்கு முனை போட்டி இருந்தாலும் 

திமுக தலைமையிலான ‛இந்தியா' கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.




தற்போது திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவாகி விட்டது. காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி நீடித்து பின் முடிவானது தேமுதிக, பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபடும் நிலையில்  நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி டைம்ஸ் நவ் - இடிஜி ரீசர்ஜ் அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும். மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 357 நபர்களிடம் சர்வே நடத்தியதில் 85 சதவீதம் பேரிடம் நேரிலும், 15 சதவீதம் பேரிடம் தொலைபேசி மூலமாகப் பேசியும் சர்வே நடத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‛இந்தியா' கூட்டணி தான் அதிக இடங்களை வெல்லுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெல்லும் என இந்தியா டூடே சர்வே கூறுகிறது,,

அதாவது தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளதில் திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அமைந்துள்ள ‛இந்தியா' கூட்டணி குறைந்தபட்சம் 29 முதல் அதிகபட்சமாக 35 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அதிமுக தலைமையிலான கூட்டணியை விட பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன் படி தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 முதல் 6 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் அதிமுக தலைமையிலான கூட்டணி 1 முதல் 3 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கூட்டணியை தவிர்த்து மற்றவர்கள் 0-2 தொகுதி வரை வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கொடுத்த வாய்ப்பும் நேரமும் முடிஞ்சதனால்".. அஸ்திரத்தைக் கையிலெடுத்த அமைச்சர் அமித் ஷா தரப்பு 




எடப்பாடி கே.பழனிச்சாமியை அப்ரூட்டாக கட் செய்து 2 பேரை உள்ளே கொண்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த கருத்து மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது. 5 ஆண்டுகளாக தொடர்ந்த கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது பல முறை அதிமுகவை அண்ணாமலை சீண்டிய போதெல்லாம் பொறுத்துப் போன எடப்பாடி கே பழனிசாமி, கடந்த ஆகஸ்ட் மாதம், பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியை முறித்துக் கொள்கிறோம் எனும் முடிவை எடுத்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் தான், தேர்தல் நெருங்கும் போது சேர்ந்து கொள்வார்கள் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பகிரங்கமாகவே விமர்சித்தன. எதிர்க்கட்சிகள் எவ்வளவுக்கு எவ்வளவு விமர்சித்தனவோ எடப்பாடி கே.பழனிசாமியும் அந்தளவுக்கு பாஜக மீது தாக்குதல்  செய்து பேசத் தொடங்கினார். பாஜகவுடன் கூட்டணி இனி ஒருபோதுமில்லை என அறிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமியின் முடிவு அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து, லோக்சபா தேர்தலுக்கு தனிக் கூட்டணியை அமைக்கும் வேலைகளில் இறங்கினார் எடப்பாடி கே பழனிசாமி. முதலில், தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு தூது விட்டார். அதில் பல கட்சிகள், பாஜகவை விட்டுக் கொடுக்காமல், மீண்டும் பழைய கூட்டணி அமைய வேண்டும் எனப் பேசினர். பாஜகவும் அதிமுகவை கூட்டணியில் இணைத்துக் கொண்டு லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதை மிரட்டலாகவே அதிமுகவுக்கு சொல்லிப் பார்த்தது பாஜக தரப்பு. பாஜகவைச் சேர்ந்த ராம சீனிவாசன் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றால் அதிமுக அரசியல் ரீதியாக விலை கொடுக்க நேரிடும் என்றும் கூறியிருந்தார்.





ஆனால் அதிமுகவோ பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. எடப்பாடி கே.பழனிசாமி அதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், பாஜக - அதிமுகவை மீண்டும் சேர்த்து வைப்பதற்காக எடப்பாடி கே பழனிசாமியை பலமுறை சந்தித்துப் பேசினார். ஆனாலும், எடப்பாடி கே.பழனிச்சாமி பிடிகொடுக்கவே இல்லை.

 ஒருபக்கம், ஓ. பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், எடப்பாடி கே.பழனிசாமி முடிவால் மகிழ்ச்சியாகினர். பாஜகவை விட்டு எடப்பாடி கே.பழனிச்சாமி விலகி இருப்பதால் தங்களுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கும் என்பது அவர்கள் கணக்கு 






பாஜக தலைவர்கள் பலர் மறைமுகமாக எடப்பாடி கே பழனிசாமியிடம் பேசியும் அவரது மனம் மாறாததால், பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாகக் களத்தில் இறங்கினார். அண்மையில் திருப்பூர் பல்லடத்தில் நடந்த பாஜக பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசினார்.

"எம்ஜிஆர் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வந்தவர் அல்ல. துரதிர்ஷ்டவசமாக, அவரை கேவலப்படுத்துவது போல தமிழகத்தில் திமுகவினர் ஆட்சி நடத்தி வருகின்றனர். எம்ஜிஆர் போலவே நல்ல ஆட்சியை தந்தவர் செல்வி ஜெ. ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார். அவருடன் நெருங்கிப் பணியாற்றி உள்ளேன்." என உருக்கமாகப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.




 அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசினார். ஜெயலலிதா ஊழல் செய்ததாலே தண்டிக்கப்பட்டார் என கடந்தாண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது, பாஜக அதிமுக கூட்டணியில் கடும் விரிசலை உண்டாக்கியது. இந்த சூழலில் வழக்கமாக ஜெயலலிதாவை ஜி என்று அழைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பல்லடத்தில் பேசும்போது அம்மா ஜெயலலிதா என்று குறிப்பிட்டார்.



அதிமுகவை மீண்டும் கூட்டணிக்கு அழைக்கும் நோக்கத்திலேயே பிரதமர் மோடி அவ்வாறு பேசியதாகவும் விவாதங்கள் நடந்தன. பிரதமர் நரேந்திர மோடி வந்துவிட்டுப் போன பிறகும், எடப்பாடி கே.பழனிசாமிக்கு பாஜக தரப்பிலிருந்து பலமுறை தூது விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி கே.பழனிச்சாமி பிடிவாதமாக, பாஜக கூட்டணியை மறுத்துள்ளார்.

 இதையடுத்தே, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது பாஜக தரப்பு. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவருமே பல மாதங்களாகவே பாஜக கூட்டணி என்ற முடிவில் தான் உள்ளனர். அப்படி இருக்கும் போது, பல்லடம் பொதுக்கூட்டத்திலேயே, கூட்டணி கட்சி தலைவர்களோடு அவர்களையும் மேடையேற்றி இருக்கலாம்.

ஆனால், அவர்களை மேடையேற்றினால், எடப்பாடி கே பழனிசாமியுடன் நெருங்க முடியாது என்பதற்காகவே இத்தனை நாட்களாக தாமதித்து, இப்போது எடப்பாடி கே. பழனிசாமி இனி இல்லை என்பது உறுதியான உடன் ஓபிஎஸ், தினகரனை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பாஜக அழைத்துள்ளது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.

 எடப்பாடி பழனிசாமிக்கு, பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கொடுத்த 'கெடு' முடிவடைந்து விட்டது. பாஜக கூட்டணியில் இணைய அதிமுக துளியும் ரெடியாக இல்லை என்பது அறிந்த பின்னர் தான் தேர்தல் அறிவிப்பு நெருக்கத்தில், ஓ.பன்னீர் செல்வம் , மற்றும் T.T.V.தினகரனுடன் கூட்டணிப் பேச்சை பாஜக வெளிப்படையாகத் தொடங்கியுள்ளது என்கிறார்கள்.

ஓ.பன்னீர் செல்வம் , பாஜக கூட்டணியில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்விகளும் எழுகின்றன. தாமரை சின்னத்தில் நிற்க வைக்க பாஜக முயன்று வருவதாகச் சொல்லப்பட்டாலும், இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என அவர் உறுதியாகக் கூறி வருகிறார்.

இப்படியான சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம், அரசியல் சார்பற்ற சுதந்திர அமைப்பு. அது எடப்பாடி கே.பழனிசாமிக்கு சின்னம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது எதேச்சையானது தான்.

இந்த நிலையில் கத்திப்பாரா அருகில் இரவோடு இரவாக நட்சத்திர ஹோட்டலில் நடந்த பாஜக கூட்டணி கட்சி மீட்டிங்.. கைமாறிய தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல். நேற்று  மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது,  



அதேசமயம், எடப்பாடி கே.பழனிசாமியை விட்டு விட்டு, ஓ.பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் பாஜக் மேலிடம் வெளிப்படையாக நெருங்கியுள்ள அதே சமயத்தில், எடப்பாடி கே.பழனிசாமியின் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்துக்கும் சோதனை வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ள போதிலும் தொண்டர்கள் இல்லாத கட்சிகள் பல அதில் நடிகர் மன்சூர் அலிகான் கட்சியின் பேயர் என்ன.என்பது கூட மக்கள் அறியாதது,

நமக்கு மட்டும் தான் அப்புடி தோண்டுகிறதா..இல்லை அனைவரும் கேலி பேச வைப்பது தான் இன்றைய அரசியல். ஆனால் 

உள்ளுக்குள் நடப்பது வேறு.

ஆதிதிராவிடர்களில் ஒரு பிரிவு  வாக்குகள் பூவை மூர்த்தி மூலம் வரலாம் என ஒரு நம்பிக்கை பாஜகவில் உள்ளது அதுபோல

நாடார் வாக்குகள் சரத்குமார இணைவதால் வரலாம் எனவும்,

கவுண்டர் வாக்குகள் அண்ணாமலை இருக்கிறார்,

முக்குலத்தோர் வாக்குகள் டிடிவி தினகரனும், ஓ. பன்னீர் செல்வம் 

வன்னியர் வாக்குகளுக்கு பாமகவும் 

அருந்ததியர் வாக்குகள் இணை அமைச்சர் முருகன் மூலமாக வரலாம் எனவும் 

உடையார் வாக்குகளுக்கு பாரிவேந்தரான பச்சைமுத்துவும், 

முதலியார், பிள்ளைகளின் வாக்குகள் ஏ சி சணமுகம் மூலமும் 

வரலாம் என்ற நம்பிக்கை வைத்து ஒரு தரப்பு அரசியல் செய்த நிலையில் அது சாத்தியமா என்ற வினா எழாமல் இல்லை,

தேர்தல்களில் எண்ணிக்கை விகிதங்கள் தான் பேரமாகிறது .தி மு க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் இறுதிப் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதால், தமிழ்நாடு அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவத் துவங்கி யுள்ளது.

கடந்த தேர்தலைப் போலவே, காங்கிரசுக்கு 10 சீட்டுகளை ஒதுக்கியிருக்கிறது திமுக.. தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி "போராடி" பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

திமுக கூட்டணி வெறும் 6 சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டதாம் ஆனால், முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் 15 சீட்டுகளைத் தர வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருந்தார்.. இதற்குபிறகு புதிதாக தலைமை பொறுப்பேற்ற செல்வம் பெருந்தகை எப்படியாவது இரட்டை இலக்கத்தில் தொகுதியைப்  பெற வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டினார். காரணம் அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் ஆதிதிராவிடர்களின் தலைமை வந்த காரணமாக,

இறுதியில் கடுமையாக முயற்சி செய்து, 10 தொகுதிகளைப் பெற்றது காங்கிரஸ் கடசி. இப்போது அடுத்த சிக்கல் என்னவென்றால், அந்த 10 தொகுதிகளிலும் யார்?  போட்டியிடுவது என்பதில் காங்கிரசுக்குள் புயல் அடிக்கிறது.

உறுதியான தொகுதிகள்: கன்னியாகுமரி தொகுதியில் விஜய்வசந்த், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரம், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் போட்டியிடுவதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.. இவர்களுக்கெல்லாம் தொகுதிகள் எளிதாகவே இறுதி செய்யப்படலாம் அல்லது சிறு மாற்றம் வரலாம்

ஆனால், கரூர், திருச்சிரஸப்பள்ளி, திருவள்ளூர், தேனி, ஆரணி  தொகுதிகளில் தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும், தொகுதிகளை இறுதி செய்வதிலும் பெரும் குழப்பம் ஏற்பட்ட வாய்ப்பு .. கடுமையான ஆலோசனைகள் அக் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன..போட்டிகளும் அதிகரித்தபடியே உள்ளது. கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி ஆரணி தொகுதிகள் மாற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. அப்படித் தொகுதிகள் மாறக்கூடுமானால், கரூர் தொகுதியில் மறுபடியும் ஜோதிமணியே வேட்பாளராக அறிவிக்கக்கூடும் அல்லது ஈரோடு கிடைக்கலாம், அதேபோல, திருச்சிராப்பள்ளி, தேனி தொகுதிகள் மாற்றப்படும் என்றிருந்த நிலையில், இதில்  ஆரணி தொகுதியும் சேர்ந்துள்ளது..

எனவே, திருச்சிராப்பள்ளி, தேனி, ஆரணி இந்த 3 தொகுதிகளுக்கு பதிலாக, திருநெல்வேலி, கடலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

தீவிர ஆலோசனை: எனினும் யாருக்கு எந்தத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக மாநிலத் தலைவர் செல்வம் பெருந்தகை, சட்டமன்றக் காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மாநில முன்னாள் தலைவர் க.திருநாவுக்கரசர் போன்றவர்கள் டெல்லி மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதாவது ஆரணிக்குப் பதிலாக கடலூர், திருச்சிராப்பள்ளிக்கு மாற்றாக மயிலாடுதுறை, கரூருக்கு மாற்றாக ஈரோடு போன்ற தொகுதிகளைக் கோரலாமா? என்பது குறித்து நேற்று  ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர, தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வது, அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பிரம்மாண்டமான தேர்தல் பொதுக்கூட்டம் நடத்துவது மற்றும் தொகுதியில் செல்வாக்குள்ள வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

 இறுதியில், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரம், என உறுதியானதாம். ஆரணி, திருவள்ளூர், திருநெல்வேலி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகள் குறித்து தற்போது ஆலோசிக்கபபடுகிறது.

இவைகளில் 5 தொகுதிகளுக்கு கே.எஸ்.அழகிரி, க.திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, டாக்டர் செல்லக்குமார், சசிகாந்த் செந்தில், வக்கீல் சுதா, பிரவீன் சக்கரவர்த்தி, விஷ்ணுபிரசாத், விஸ்வநாதன், எம்.பி.ரஞ்சன்குமார் ஆகியோர் பந்தயத்தில் உள்ளனர்.நேற்று முன் தினம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் TTV. தினகரன்  பாஜக, மாநிலத் தலைவர்  K.அண்ணாமலை,  மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணையமைச்சர்கள் Gen.VK.சிங் மற்றும் முருகன் , தமிழகத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்  அரவிந்த் மேனன்  மற்றும் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். 

வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகத்தில்  ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து அனைவரும் உரையாடியதாகத் தகவல் தந்தனர்.               

அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் என்பது போல உருவான தோற்றம் சட்டென்று உடைந்து போனது , பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்கிறது பாமக.

யாருமே கூட்டணி பேச வராமல் ஏமாற்றமடைந்த எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான 

அதிமுக கூட்டணிக்குள் பாமகவை இழுக்க, முன்னாள் அமைச்சர் சி வி.சண்முகத்தை தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. கே.பழனிச்சாமி முதல் சந்திப்பிலேயே, 15. தொகுதியும்  + 1 ராஜ்யசபாவும் வேண்டும்  எனச்  சொன்னார் அதன் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ். இதை எடப்பாடி கே.பழனிச்சாமி ஏற்கவில்லை.

தொடக்கமே குழப்பம்; தொடந்து நடத்த மறைமுகப் பேச்சுவார்த்தையில், 5 +1 அல்லது 8 லோக்சபா தொகுதி என்பதை எடப்பாடி கே

பழனிச்சாமி முன்னிறுத்தினார். மேலும் தேர்தல் செலவுகளுக்கு பாமக தரப்பிடம் நேரடியாகப் பணம் தரப்பட மாட்டாது. அதிமுகவே அதைப் பார்த்துக் கொள்ளும் என சொல்லப்பட்டதில் தான் மருத்துவர் ச.ராமதாஸ் முரண்பட்டதாகத் தகவல்  இதனை அடுத்து, தேர்தல் செலவுகளுக்கான தொகையை நேரடியாக பாமகவிடம் தருவதாக உறுதியும்  தரப்பட்டதாம் இந்த கண்டிசன் சரியான நிலையில், தொகுதி பேரம் தொடங்கியது.

தொடக்கமே குழப்பம்: தொடர்ந்து நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தையில், 5+1 அல்லது 8 லோக்சபா என்பதை எடப்பாடி முன்னிறுத்தினார். மேலும் தேர்தல் செலவுகளுக்கு பாமக தரப்பிடம் நேரடியாக பணம் தரப்படாது. அதிமுகவே பார்த்துக் கொள்ளும் என சொல்லப்பட்டது. இதில் ராமதாஸ் முரண்பட்டார். இதனை அடுத்து, தேர்தல் செலவுகளுக்கான தொகையை நேரடியாக பாமகவிடம் தரும்  பாமகவின் இந்த எதிர்பார்ப்பை எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் சொல்ல,  மறுத்தார் 

: சட்டமன்றதஹ தேர்தலில் 40 இடங்கள் ; அதுவும் இப்போதே உடன்பாடு என்பதைக் கேட்டு எடப்பாடி கே.பழனிச்சாமியும் கட்சி மூத்த தலைவர்களும் உடன்பட மறுத்தனர். அதேசமயம், சட்டமன்றதவ தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி தொடரும் என ஒப்பந்தம் போட ரெடி . ஆனால், எண்ணிக்கையை இப்போதே முடிவு செய்து ஒப்பந்தம் போட முடியாது எனக் கூறி அதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி கே.பழனிச்சாமி.

அதன் பிறகு பாமக தரப்பிடமிருந்து பதில் வரவில்லை. அதிமுகவும் அதற்குக் கவலைப்படவில்லை. இதனால் தான் அதிமுக-பாமக கூட்டணி உருவாகவில்லை என்கிறார்கள் அதிமுகவினர். இந்த நிலையில், பாஜக-பாமக கூட்டணி இறுதி செய்யப்படவிருக்கிறது என்கிற தகவல்களை அடுத்து, சட்டமன்ற தேர்தலுக்குமான இடங்களுக்கும் இப்போதே ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம் ; அதிமுகவுக்கு வாருங்கள் என நேற்று மருத்துவர் ச. ராமதாசிடம்  முன்னால் அமைச்சர் சி.வி.சண்முகத்தைப் பேச வைத்திருக்கிறார் எடப்பாடி.கே.பழனிச்சாமி

ஆனால், எந்தக் கட்சியுடன் கூட்டணி என்கிற முடிவை மருத்துவர் அன்புமணியிடம் விட்டுவிட்டேன். அவர் பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்யவிருக்கிறார். நீங்கள், வாய்ப்பை மறுத்துவிட்டு இப்போது கூப்பிட்டால் எப்படி? என்று சி.வி.சண்முகத்திடம் ஆதங்கப்பட்டுள்ளார் மருத்துவர் ச. ராமதாஸ்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் .Gk.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக சென்னை - எழும்பூர் இம்பீரியல் பயஸ் மஹாலில் நடைபெற்ற "ரமலான் நோன்பு திறப்பு" நிகழ்ச்சியில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் , அமமுக பொதுச்செயலாளர் .டிடிவி.தினகரன் அவர்களுடன்.கலந்து கொண்டு அரசியல் களம் அவர்கள் பக்கம் பலமானதால் எடப்பாடி கே பழனிச்சாமி அணி தொய்வானது தெரிகிறது,  இறுதியில் சின்னம் கொடி எங்கு வருமோ அங்கு தொண்டர்கள் தாவ இப்போதே தயார் என்ற நிலையில், அரசியல் களம் நகர்கிறது,  வடக்கிலிருந்து வந்திருக்கும் அதிகாரம் மிக்க குழு ஒன்று தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளது. இதுல் கூட்டணி வையுங்கள் என மிரட்டல் வருவது தான் காரணமோ தெரியாது  வெளியே கேமிராவுக்கு முன்னால் சிரிக்கிறார்கள் உள்ளே அழுகிறார்கள். இது தான் தற்போது நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்