முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவிபேட் ஒப்புதல் சீட்டுகளை 100 சதவிகிதம் எண்ணுவதற்கு கால விரயம் ஆகும் உச்சநீதிமன்றம் கருத்து

விவிபேட் ஒப்புதல் சீட்டுகளை 100 சதவிகிதம் எண்ணுவதற்கு உத்தரவிடத் தொடரப்பட்ட வழக்கு


உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் சந்தேகங்கள் இருப்பதால், மீண்டும் பழைய முறைப்படி வாக்குச் சீட்டு நடைமுறையை கொண்டுவர வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் வாதிட்டார் அல்லது, விவிபேட் இயந்திரங்களில் அச்சாகும் வாக்குகளை, வாக்காளர்கள் தனிப் பெட்டியில் போடும் நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதற்கு, மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை சாத்தியமற்றது என உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. மேலும், மனிதர்கள் தலையீடு இல்லாமலிருந்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்குமென்றும் முடிவுகள் துல்லியாக இருக்குமென்றும் உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், மனிதர்கள் தலையீடுகள் தான் முறைகேடுகளுக்கு காரணமாக இருக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. அதுகுறித்து ஒரு தெளிவான பார்வை இது அதிமுகவில் ஆர்.எம்.வீரப்பன் எவ்வளவு முயன்றும் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அகில இந்திய அளவில் வலுவாக இருந்த பிராமண லாபிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. எனலாம், ”கலைஞர் மு.கருணாநிதி மீண்டும் மேலெழுந்து வருவதைத் தடுக்கும் ஆற்றல் ஆர்.எம்.வீரப்பனுக்கில்லை. அது செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கே உண்டு” என திமுகவை விரும்பாத தமிழ்நாட்டின் மக்களும் நம்பத் தொடங்கினர். இராஜிவ்காந்தி கொலை ஜெ.ஜெயலலிதாவுக்கு ஒரு ஜாக்பாட் வெற்றியைப் பெற்றுத் தந்தது தான் உண்மை.


இந்தச் சக்தி தான் தொடர்ந்து ஆள்கிறது. வெற்றியும் காண்கிறது. ஒரு நிலையில் செல்வி ஜெ. ஜெயலலிதா தமிழர், தமிழ் தேசியம் பக்கம் முனைவர் காலம்சென்ற ம.நடாஜன் வழிகாட்டல் காரணமாகச் சென்று விட்டார் என்றதும் இந்தச் சக்தி அவரைக் கொன்றும் விட்டது.  வி.கே.சசிகலா நடராஜனை மீண்டும் எழாமலும். முனைவர் ம.நடராசனை சாவின் விளிம்பு வரை விலக்கியும் வைத்து அதில் வெற்றியும் கண்டது. 

இந்த நிலையை அரசியல் ரீதியாக அழித்தொழிக்காமல், எதுவும் மாறி விடாது என திராவிட சக்திகள் இன்று வரை 

நம்புகின்றனர். அதனால் தான் பல வகையான கண்காணிப்பு செய்கிறது. தற்போது வந்த ஒரு தொலைக்காட்சி நடத்திய திணிப்பான கருத்துக் கணிப்பு 


.’’நாம் போடும் வாக்குகள் போட்டவருக்குத் தான் விழுந்ததா? எனச் சரி பார்த்துக் கொள்ளும் ஒப்புகை சீட்டு ‘விவிபேட்’  என்ற இயந்திரத்தை  EVM மிஷினுடன் இணைத்து நிறுவினால் தான் நேர்மையான தேர்தல்  அதை நிறுவினால் தான் சாத்தியம்!  அதைச் செய்ய உச்ச நீதிமன்றம் உத்திரவிட வேண்டும்’’ என மனு!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ADR) , தேர்தலுக்கான குடிமக்கள் ஆணையம் (Citizens Commission for Elections) உள்ளிட்ட பல அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்தனர். தற்போது தான் அந்த வழக்கை தூசிதட்டி எடுத்து நேற்று முதல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

நேர்மையான வாக்குப் பதிவுக்காக ஜனநாயக ஆர்வலர்கள் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.


சாதரணக் குடிமக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள் தானே!  தேர்தல் ஆணையம் என்பது இந்திய அரசமைப்பில் நீதி மன்றங்களுக்கு இணையான அதிகாரங்களும் ஆளுமையும் கொண்ட ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.

அத்தகைய சுதந்திர அமைப்பின் இன்றைய பரிதாப நிலைமையை கீழ்கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளையோ, அறிஞர் பெருமக்களையோ, நடுநிலையான தொழில்நுட்ப வல்லுனர்களையோ சந்திக்கவோ, கலந்துரையாடவோ இல்லை என்பதை ஓய்வு பெற்ற மூத்த ஐ ஏ எஸ் அதிகாரியும், தேர்தலுக்கான குடிமக்கள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளருமான எம். ஜி. தேவசகாயம் தெரிவிக்கிறார்.

பொது மக்களின் சந்தேகங்களையும், வல்லுனர்களின் முனைப்பான கேள்விகளையும் வெளிப்படையாகத் தீர்த்து வைக்க தேர்தல் ஆணையம் (E.C) இதுவரை முயன்றதில்லை. இ. வி. எம் குறித்த கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி , ஐயப்பாடுகளை நீக்கி, தேர்தல் நடைமுறையில் நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றது கூட இல்லை என்பதே உண்மை.

19 லட்சம் இ.வி.எம் கருவிகள் கணக்கிற்கு வராமல் காணாமல் போனதற்கும், அவற்றில் சில ஆளும்  கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் கிடங்குகளிலும், வாகனங்களிலும் கண்டுபிடிக்கப் பட்டதற்கும் எந்த விளக்கமும் ஆணையத்தால் தர முடியவில்லை. 


அரசியல் சமூகம் நியாயமான தேர்தலுக்கு சாத்தியம் உள்ளதா?

இருபது அரசியல் கட்சிகள் EVM வாக்களிப்பை எதிர்க்கின்றன. EVM முறையில் நேர்மையான வாக்கு பதிவு சாத்தியமா..? கடந்த தேர்தலின் கசப்பான அனுபவங்கள், தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரிகளின் நியமனங்கள், அவர்கள் செயல்படும் விதம் யாவும் மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது…அதற்கு என்ன செய்யலாம்.எனபதே எழுவினா ?

2019 ஆம் ஆண்டு தேர்தலில் சில முன் உதாரணமாக சர்வே செய்ததிலேயே இ.வி.எம்.மில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டது-  350 க்கும் மேலான தொகுதிகளில்! இதை சாதாரணத் தவறாகக் கடந்து போக முடியுமா ? குறுக்கு வழியில் கோல்மால்களைச் செய்து அதிகார நாற்காலியை அடையத் துடிக்கும் அரசியல் வியாதிகளுக்கு செக் வைத்தே ஆக வேண்டும்.

நாம் போடும் ஓட்டு போட்டவருக்குத் தான் விழுந்ததா? எனச் சரி பார்த்துக் கொள்ளும் ஒப்புகை சீட்டு ‘விவிபேட்’  என்ற இயந்திரத்தை நிறுவினால் தான் சாத்தியம்! ‘Voter Verifiable Paper Audit Trail என்ற இந்த இயந்திரத்தை அனைத்துத் தொகுதிகளிலும் வைத்து ஒப்புகை சீட்டை எண்ணிக்கை சரி பார்த்து முடிவை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றைக் காலம் கடந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒருவழியாக உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

இப்பொழுது உள்ள நடைமுறை என்னவென்றால் , ஒரு சட்டமன்ற தொகுதியில் வெறும் ஐந்து வாக்கு சாவடிகளில் மட்டும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், விவிபேட் சீட்டுக்களை யும் எண்ணி ஒப்பிட்டு சரி பார்ப்பது தான்.

உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்திற்கு இது குறித்து கடந்த ஜூலை மாதத்தில் நோட்டீஸ் அனுப்பி, தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவையும் தாக்கல் செய்துள்ளது.

இப்பொழுது நடைமுறையில் , ஒரு வாக்காளர் வாக்குச் சாவடிக்கு சென்று , தான் வாக்களிக்க விரும்பும் நபரின் பெயருக்கு நேராக உள்ள நீல நிற பொத்தானை அழுத்தி வாக்களிக்கிறார். அவ்வாறு பொத்தானை அழுத்தும் பொழுது , விளக்கெறிந்து , ஒரு “பீப் “ ஒலி கேட்டால் அவர் வாக்களித்து விட்டார் என கருதப்படுகிறது. இதில் எப்படி நாம் திருப்தி அடைவது?

உண்மையில் வாக்காளர் தான் எண்ணியிருந்தவருக்குத் தான் வாக்களித்தாரா?, அந்த வாக்காளருக்குதான் உண்மையிலே அந்த வாக்கு சேர்ந்ததா? என்பதற்கு எந்தவிதமான, வெளிப்படையான கண் கூடான ஆதாரமில்லை !

இதையே தான் உச்ச நீதிமன்றம், 2013- ஆம் ஆண்டில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி இ.வி.எம். நடைமுறைக்கெதிராக தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்த வழக்கிலும் கூறியது.

அத்தகைய கண் கூடான ஆதாரம் ஒரு வெளிப்படையான, நேர்மையான தேர்தலுக்கு மிக அவசியம் என்றும், தேர்தல் நடைமுறை (Electoral Process) வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என்று தீர்ப்புக் கொடுத்தனர். இப்படித்தான் விவிபேட் இயந்திரம், இ.வி.எம் முடன் இணைக்கப்பட்டது.

“ஜனநாயகத்தின் அடிநாதமான தேர்தலில் வாக்களிப்பவரின் எண்ணம் ஈடேறுவது தான் முக்கியமே ஒழிய , தேர்தல் ஆணையமோ, தொழில்நுட்ப வல்லுனர்களோ, அரசியல் கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ திருப்தி அடைவது முதன்மையானது அல்ல..” என்பதே வாதமாகும்.

“எனவே, தொகுதியில் பதிவான அனைத்து வாக்குகளையும் , விவிபேட் அடையாள சீட்டுகளுடன் ஒப்பிட்டு முடிவை அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

இத்துடன் ஏப்ரல் மாதம்-4 ஆம் தேதி அன்று, முகமது பிரச்சா என்ற வழக்கறிஞர் , மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதால், நம்பகத் தன்மை இல்லாததால் பழைய வாக்குச்சீட்டு முறையையே (Paper ballot system) மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், அது சாத்தியமில்லாவிட்டால் வாக்காளர்கள் வாக்களித்தன் அடையாளமான விவிபேட் சீட்டை வாக்குப் பெட்டியில் போட அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவும் மற்ற மனுக்களுடன் சேர்ந்து விசாரிக்கப்பட்டது.

வாக்கு சீட்டு முறை அல்லது ‘விவிபேட்’ மூலம் ஒப்புகை சீட்டு!

E.C. பொது வெளியில் தனது நிலையை தெளிவு படுத்தியுள்ளதா? அல்லது அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசனை நடத்தியதா?, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, ஜனநாயக ஆர்வலர்கள், அதிகாரம் சாரா சமூகப் பிரதிநிதிகள், அறிஞர் பெருமக்கள், மூத்த அதிகாரிகள், ஆகியோரிடம் கலந்து உரையாடியதா? என்று பார்த்தால், இல்லை என்பதே உண்மையாகும்.

தேர்தல் ஆணையம் என்பது இந்திய அரசமைப்பில் நீதி மன்றங்களுக்கு இணையான அதிகாரங்களும் ஆளுமையும் கொண்ட ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.

அத்தகைய சுதந்திர அமைப்பின் இன்றைய பரிதாப நிலைமையை கீழ்கண்ட விவரங்களில் இருந்து நாம் அறிய முடியும்.

அரசமைப்பு சட்டம் பிரிவு 324 ன்படி தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல்களை சுதந்திரமாக, நியாயமாக யாருடைய தலையீடும் இன்றி நடத்தும் முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.

ஒருமித்த கருத்து இல்லாத நிலையில் விவிபேட் அடையாளச் சீட்டுகளையே இறுதி ஆதாரமாக தேர்தல் ஆணையம் கருத வேண்டும் என்று தேர்தல் விதி 56 கூறுகிறது.

இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் 2017- ஆம் ஆண்டில் இ. வி. எம் முறையை எதிர்த்து குரல் எழுப்பிய போது அன்றைய தலைமை தேர்தல் ஆணையர், (குஜராத்தை சார்ந்த ) அச்சல் குமார் ஜோதி உச்ச நீதி மன்ற 2013 -ஆம் ஆண்டு ஆணைக்குப் பின்னும் , ”விவிபேட் இயந்திரங்கள் வழங்கும் அடையாளச் சீட்டுகளை ஒரே ஒரு சதவிகிதம் மட்டும் சரி பார்த்தால் போதும்” என்று உத்தரவிட்டார். இந்த அதிகாரி தான் 2017 -ஆம் ஆண்டில் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல்களில் நரேந்திர மோடி ஆதரவு செயல்பாட்டால் கடும் சர்ச்சைக்குள்ளானவர்.

இவரின் 1 சதவீதம் உத்தரவை எதிர்த்தே வழக்கு உச்ச நீதி மன்றம் சென்றன அனைத்து கட்சிகளும்! குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்குகள் விவிபேட் அடையாள சீட்டுகளை எண்ணுவது மூலம் சரி பார்க்க வேண்டும் என்று கோரின. ஆனால் அன்றிருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ”இதை பரிசீலிக்க நேரமில்லை” என்று கூறி ‘கட்ட பஞ்சாயத்து’ பாணியில் இருவருக்கும் பொதுவாக 3% சீட்டுகளை சரிபார்க்க உத்தரவிட்டார்.

இதை தொடரந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அன்றைய தலைமை தேர்தல் ஆணையர் திரு. ஓ.பி. ராவத் அனைத்து கட்சிக் கூட்டத்தை இ.வி.எம். வாக்குமுறை பற்றி விவாதிக்க கூட்டினார்!

இருபதுக்கு மேற்பட்ட கட்சிகள், பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் ஐம்பது சதவிகித (50%) விவிபேட் அடையாள சீட்டு சரி பார்த்தலைக் கோரினர்.

இந்த கூட்டம் தான் தேர்தல் ஆணையம் கூட்டிய கடைசி கூட்டம். கடந்த ஆறு ஆண்டுகளில் தே.ஆ. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவுமில்லை, கலந்தாலோசித்து, ஒருமித்த கருத்தை எட்ட முயலவுமில்லை.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன்.பி. லோக்கூர் தலைமையில் பிரபல சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் இணைந்து மின்னணு வாக்கு முறை பற்றிய ஓர் தெளிவான அறிக்கையை 2021 ஆம் ஆண்டே தயாரித்து, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினர் . இன்று வரை இதைப் பற்றி கலந்துரையாடவோ, மறுமொழி கூறவோ தேர்தல் ஆணையம் முயலவில்லை.

தேர்தல் ஆணையம் ஒரு வழிப்பாதையில் சென்று பிரதமரின் அலுவலகத்தோடு (PMO) மட்டுமே தொடர்பில் உள்ளது என்பது சரியான அணுகுமுறையல்ல.கிட்டத்தட்ட 450 பக்கங்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவில் வாக்காளர்கள் தங்களது வாக்கை தாங்கள் எண்ணப்படி அளிக்கப்பட்டதை  உறுதி செய்து கொள்வது வாக்காளரின் அடிப்படை உரிமை என்று கருத முடியாதாம் !

100 சதவீதம் விவிபேட் அடையாள சீட்டுக்களை எண்ணி அறிவிப்பது அதிக நேரம் பிடிக்கும் தேவையற்ற கால விரயச் செயலாம்!  இது ஜனநாயகக் கடமை சரிபார்ப்பு நிகழ்வு தான் என்பதை ஜனநாயக சக்திகள் உணர வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு