போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய 6 நபர்கள் கைது.
போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய 6 நபர்கள் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசு நகர பேருந்தை சனிக்கிழமை இரவு திருவாய்பாடியைச் சேர்ந்த ஓட்டுனர் ரமேஷ் (வயது 54) ஓட்டி வந்தார். அப்பொழுது கும்பகோணம் பாலக்கரை அருகே சாலையின் நடுவே போதையில் இருந்த இளைஞர்கள் நின்று போக்குவரத்து நெரிசலை உண்டாக்கினர், அப்போது ஓட்டுநர் ரமேஷ் ஓரமாகச் செல்லுங்கள் என்று ஹாரண் அடித்துள்ளார் அதற்குள் அவர்களுக்கும் அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் ஆகியோருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக ஆத்திரமடைந்த போதையிலிருந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பேருந்துக்குள் வந்து தாக்கியதுடன் கீழே தள்ளிக் கொலை வெறி தாக்குதலும் நடத்தியுள்ளனர். பயணிகள் அச்சத்துடன் சிதறி ஓடிய சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் நாடிமுத்து மற்றும் அருண்குமார் ஆகிய இருவரும் இந்த தாக்குதலை ஒளிப்பதிவு செய்துள்ளனர் அதனைப் பார்த்து அந்த போதை இளைஞர்கள் எங்களையே படம் எடுக்கிறீர்களாடா எனத் தகாத வார்த்தைகளைப் பேசி செய்தியாளர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் நியூஸ் ஜெ செய்தியாளர் நாடிமுத்து மற்றும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் குமார் ஆகிய இருவருக்கும் பலத்த காயமடைந்த நிலையில் ஓட்டுனர் ரமேஷ் மற்றும் கும்பகோணம் பகுதி செய்தியாளர்கள் நாடிமுத்து அருண்குமார் ஆகியோரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவலறிந்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில் கும்பகோணம் பாலக்கரையைச் சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தனன், உதயகுமார், கார்த்திகேயன், மாரிமுத்து, சந்தோஷ் ஆகிய ஆறு நபர்கள் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது ஒளிப்பதிவு செய்யப்பட்ட படங்கள் மூலம் தெரிய வந்ததை அடுத்து கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் உத்தரவின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் சரக ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையில் குற்றவாளிகளைத் தீவிர தேடுதலில் ஈடுபட்டு இரண்டு மணி நேரத்தில் கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கருத்துகள்