உலக ஹோமியோபதி தினம் 2024-ஐ முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு நாளை ஹோமியோபதி கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்
உலக ஹோமியோபதி தினத்தையொட்டி புதுதில்லி, துவாரகாவில் உள்ள யசோபூமி மரபு மையத்தில் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் இந்த இரண்டு நாள் அறிவியல் மாநாட்டை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டின் கருப்பொருள் "ஆராய்ச்சியை மேம்படுத்துதல், தேர்ச்சியை மேம்படுத்துதல், ஒரு ஹோமியோபதி கருத்தரங்கு" ஆகும். மருத்துவ நடைமுறை மற்றும் சுகாதார திட்டங்களில் ஆதார அடிப்படையிலான அறிவியல் சிகிச்சையை ஊக்குவிப்பது, ஆராய்ச்சி அடிப்படையிலான சிகிச்சையில் ஹோமியோபதி சமூகத்தை திறன்படுத்துவது, தனிப்பயனாக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் நம்பகமான சுகாதாரத்திற்கான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சுகாதார அதிகார மையமாக மாறுவது மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தை தரமான நோயறிதல், சிகிச்சை மற்றும் சிறந்த நோயாளி விளைவுகளுக்கான அறிவியல் கருவிகளுடன் வளப்படுத்துவது ஆகியவற்றை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா, ஆயுஷ் அமைச்சகத்தின் சி.சி.ஆர்.எச் தலைமை இயக்குநர் டாக்டர் சுபாஷ் கௌசிக், தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அனில் குரானா மற்றும் ஹோமியோபதிக்கான பத்ம விருது பெற்ற பத்மஸ்ரீ டாக்டர் வி.கே.குப்தா, பத்மஸ்ரீ டாக்டர் முகேஷ் பத்ரா, பத்மஸ்ரீ டாக்டர் கல்யாண் பானர்ஜி, பத்மஸ்ரீ டாக்டர் அனில் குமாரி மல்ஹோத்ரா மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் நந்தினி குமார் ஆகியோர் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். ஆயுஷ் அமைச்சகத்தின் ஹோமியோபதி ஆலோசகர் டாக்டர் சங்கீதா ஏ. துக்கல், ஹோமியோபதிக்கான நெறிமுறைகள் மற்றும் பதிவு வாரியத்தின் தலைவர் டாக்டர் பினாகின் என் திரிவேதி, தேசிய ஹோமியோபதிக்கான மருத்துவ மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தின் தலைவர் டாக்டர் ஜனார்த்தனன் நாயர், தேசிய ஹோமியோபதி கல்வி வாரியத்தின் தலைவர் டாக்டர் தர்கேஷ்வர் ஜெயின் மற்றும் ஸ்பெயின், கொலம்பியா, கனடா, பங்களாதேஷ், நெதர்லாந்திலிருந்து 8 பிரதிநிதிகள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
தொடக்க விழாவைத் தொடர்ந்து, பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ வைத்ய தேவேந்திர திரிகுணா மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் எச்.ஆர்.நாகேந்திரா ஆகியோர் தலைமையில் 'ஞான வார்த்தைகள்' என்ற அமர்வு நடைபெறும்.
அடுத்தடுத்த அமர்வுகளில், ஹோமியோபதிக்கு அதிகாரமளித்தல் மற்றும் நவீன கண்ணோட்டங்கள், மருத்துவர்களின் முன்னோக்குகள் மற்றும் முன்னேறும் நடைமுறைகள் போன்ற தலைப்புகளில் பேச்சுக்கள் மற்றும் குழு விவாதங்கள் இடம்பெறும். இந்த அமர்வுகளில் ஆயுஷ் மருத்துவமனையின் ஹோமியோபதி பிரிவுக் குழுத் தலைவர் டாக்டர் வி.கே.குப்தா, ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு பி.கே. சிங், ஆயுஷ் அமைச்சகத்தின் ஹோமியோபதி ஆலோசகர் டாக்டர் சங்கீதா ஏ. துக்கல் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
2 நாட்கள் நடைபெறும் இந்த அறிவியல் மாநாட்டில் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி, ஆதார அடிப்படை, ஆராய்ச்சி மற்றும் நடைமுறை அனுபவம், தொற்றுநோய் மற்றும் பொது சுகாதாரம், ஹோமியோபதி மருந்து தரப்படுத்தல் மற்றும் அடிப்படை ஆராய்ச்சி, பலதுறை ஆராய்ச்சி, கல்வியில் சீர்திருத்தங்கள் மற்றும் ஆராய்ச்சி, உலகளாவிய கண்ணோட்டங்கள்., ஹோமியோபதியில் உள்ள சவால்கள் - ஹோமியோபதி தொழில்முறை சங்கங்களின் பங்கு, கால்நடை ஹோமியோபதி, ஹோமியோபதி மருத்துவ தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் தர உத்தரவாதம், இக்குழுக்களில் உயிர் மருத்துவம் மற்றும் அதனைச் சார்ந்த அறிவியலின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த முன்னணி அறிவியலாளர்கள் பயிற்றுநர்களாக இருப்பார்கள்.
கருத்துகள்