முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் தொகுதி பாஜக காங்கிரஸ் இடையில் கடும் பலப்பரிட்சை வெற்றி மதில் மேல் பூனை கதை

கரூர் மாவட்டத்தின் மூன்று தொகுதிகள்,


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை உள்ளிட்ட சட்ட மன்றப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது  கரூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியாகும், நான்கு மாவட்டங்களில் மிகப் பெரிய தொகுதியாகும். காவிரியாற்றின் கரையோரப் பகுதிகளைக் கொண்டதால் முதன்மையான தொழில் விவசாயம். அடுத்தது நெசவுத் தொழில்



கரூர் பகுதியில் உள்ள ஜவுளி ஆலைகளும் முக்கிய தொழிலாகும். மக்களவைத் துணைச் சபாநாயகராக இருந்து தம்பிதுரை அதிமுக சார்பில் பலமுறை போட்டியிட்ட தொகுதி. திமுகவிலும், சின்னசாமி, கே.சி பழனிசாமி எனப் பிரபல வேட்பாளர்களே ஒவ்வொரு முறையும் களம் காண்டு வந்தனர். மாநில திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களையே இந்த பகுதியில் இதுவரை மக்கள் தேர்வு செய்து வந்துள்ளனர். அதிமுக, திமுக என இருகட்சிகளுக்குமே செல்வாக்கு மிக்க தொகுதியாகப் பார்க்கப் பட்டாலும்,  இரு கட்சியிலும் ஆளுமை மிக்க தலைவர்கள் காலமானதால் இப்போது பாரதிய ஜனதா கட்சி இப்போது முதல் முறையாக இங்கு களம் காணும் நிலையில் அக்கட்சியின் சார்பில் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில் நாதன் வேட்பாளராகக் களம் காணும் நிலையில்



இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் மீண்டும் ஜோதிமணி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் காண்கிறார்,  அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியில் உள்ளார் இருந்தாலும் பாஜக காங்கிரஸ் இடையில் தான் போட்டி நிலவுகிறது,                       



  கரூர் நாடாளுமன்றத்தில் கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி, வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை, ஆகிய தொகுதிகளில் அரசியல் தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் வேட்பாளர் சரியில்லை என்பதே பேச்சாகிறது, ஏனெனில் கரூர் மாவட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த மாவட்டம். அதே போல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதி .திமுக தான் இந்த முறை போட்டியிடும் எனக்கூறப்பட்ட நிலையில் கரூர் தொகுதி மீண்டும் காங்கிரஸ் சிட்டிங் சீட் எனற அடிப்படையில் அக் கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது.   அக்காலத்தில் சேரநாட்டுத் தலைநகர் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜோதிமணி மறுபடியும் போட்டியிடுகிறார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஜோதிமணி வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டவருடன் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கரூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க தேர்தல் பார்வையாளர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டி உள்ளிட்ட தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி,




''தமிழகம் முழுவதும் அ.தி.மு.க, என்பது பா.ஜ.க-வின் பி டீமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற நான், தொகுதி மக்களுக்காக ரூபாய்.500 கோடியில் திட்டப் பணிகளைச் செய்துள்ளேன். மக்களவையில் கடந்த 70 ஆண்டுகளாக ஒலிக்காத குரலாக தமிழக மக்கள் பிரச்னைகள் குறித்து குரல் எழுப்பியுள்ளேன். தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை மக்களுக்காகச் செய்துள்ளார். குறிப்பாக, கல்விக்கும், மருத்துவத்திற்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் மகத்தான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இதனால், தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல எழுச்சியும் வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.  கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அமைச்சர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஐ.பெரியசாமி ஆகியோர் கரூர் மக்களவைத் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளனர். இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு கேட்போம். ஆனால், 10 ஆண்டுகள் அ.தி.மு.க தம்பிதுரை எம்.பி-யாக இருந்தும் தொகுதி எம்.பி-க்கு ஓர் அலுவலகம் கிடையாது. அவரை நேரில் சந்திக்க முடியாது. இவர்கள் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் தமிழக மக்களையும், கரூர் தொகுதி மக்களையும் சீரழிவு பாதைக்குக் கொண்டு சென்று விட்டனர். நடைபெறவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என்றார்.  ஆனால்                                  கரூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் கரூர் வேட்பாளர்களாக  செந்தில்நாதன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தங்கவேல்









அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 

ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 

கருப்பையா நாம் தமிழர் கட்சி.   சார்பில் போட்டியிடும் நிலையில் நாம் கரூரில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை கவணிக்க வேண்டும்                                                2019 ஆம் ஆண்டு ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரஸ். 695697 வாக்குகள் வாங்கி 420546 வாக்குகள் வித்தியாசத்தில் 63.சதவீதம் பெற்று வெற்றி தம்பிதுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 275151 வாக்குகள் பெற்று 25.சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது 2014 ஆம் ஆண்டு தம்பிதுரை, எம்.



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 540722 வாக்குகள் பெற்று 195247 வாக்குகள் வித்தியாசத்தில் 52.சதவீதம் வாக்குகளில் வென்றவர் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  சின்னசாமி, எம்.  திமுக 345475 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்த நிலையில் 



33.சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.பொது மக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்த கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன்!  நாடாளுமன்ற தேர்தலில் வெற்ற பெற தன்னை ஆசிர்வாதம் செய்ய பொதுமக்களின் காலில் விழுந்து  பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குச் சேகரித்தார். நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர் தொழில்பேட்டை, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் தன்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கூறி வாக்காளர்களின் காலில் விழுந்தார். தொடர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர், "5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் நினைக்கிறார்கள்.தொகுதியில் உள்ள மக்கள் கஷ்டங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அவர்களது குடும்பம் நன்றாக இருந்தால் போதுமென நினைக்கிறார்கள்.


இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில், வளர்ச்சிக்காகப் பாடுபடக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினரை இம்முறை பொதுமக்களாகிய நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒருமுறை கூட குறைகளைக் கேட்டு அறியாத நாடாளுமன்ற உறுப்பினர் எதற்கென்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்கிறோம். 100 சதவீதம் பாஜக மீது நம்பிக்கை வையுங்கள். மீண்டும் நரேந்திர மோடியைப் பிரதமர் பதவியில் அமர வைப்பதற்குத் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொள்ள எனது தொலைப்பேசி எண்ணை உங்களுக்குத் தருகிறேன்.


எத்தனை முறை அழைத்தாலும் மக்கள் பிரச்சனைக்காகச் சேவை செய்ய வருவேன்" எனக் கூறி தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார், அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் பாஜக வேட்பாளர் வாக்குகள் சேகரித்த போது திரளாகக் கூடி நின்று ஆரத்தி எடுத்து வரவேற்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணியில் முழு வீச்சில் உள்ளதை அறியலாம்,   அன்னவாசல் தெற்கு ஒன்றியத் தலைவர் S.V. ரவிச்சந்திரன் தலைமையில் இலுப்பூர் நகரப் பொறுப்பாளர் கோட்டை, சசிக்குமார், சக்தி கேந்திர பொறுப்பாளர் யுவராஜ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சபரிநாதன். மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு ஒன்றியத் தலைவர் முத்துக்குமார் அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் 300 கற்கும் மேற்பட்ட நபர்களும் 600 க்கும் மேற்பட்டடோர்  மேலப்பட்டியிலும் கலந்து கொண்டனர் அன்னவாசல் தெற்கு ஒன்றியம் பெருமாநாடு பகுதியில் 400 கற்கும் மேற்பட்ட நபர்கள் அன்னவாசல் வடக்கு ஒன்றியத் தலைவர் பொன் முருகையா தலைமையில் விராலிமலை சட்ட மன்றத் தொகுதியின் வேட்பாளராகப் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற எம்.பழனியப்பனின் சொந்த ஊரான தென்னலூரில் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் செந்தில்நாதனை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.பாஜக பலம் என்பது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்நிறுத்தி பிரச்சாரம் நடக்கும் போது எதிர் தரப்பினர் பிரதமர் யார் என்பதே தெரியாமல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இது இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் என்பதை இந்தியா கூட்டணி அமைத்த போதே பிரதமர் வேட்பாளராக ஒரு தலைவரைத் தேர்வு செய்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை ஆகவே இது பாஜகவின் பலம்,


மேலும் இராகுல்காந்தி பிரியாணி தயார் செய்ய ஜோதிமணி அழைப்பில் வந்து வைரலான செய்திகளைப் பார்க்கும் மக்கள் இவருக்கு நாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதால் தான் மல்லிகார்ஜுன கார்கே தலைவர் ஆகும் நிலை வந்தது



என காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சொற்பமான தொண்டர்கள் வருத்தம் பகிரங்கமாகவே பேசப்படுகிறது, தமிழ் நாட்டில், தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் மூன்றாகப் பிரிந்திருப்பது, தி.மு.க கூட்டணிக்கு பலம். தி.மு.க தலைமையிலான கூட்டணி வலுவாகவும் அமைப்பு ரீதியான பலமும் உள்ளது. தி.மு.க-வும் ஜாதி ரீதியாகத்தான் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. தி.மு.க-விடம் பண பலமும், அதிகார பலமும் உள்ளன. ஆகவே, தேர்தல் நெருங்கும்  நிலையிலும், தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலில் தான் களம் நகர்ந்து வந்தாலும் போட்டி பா ஜ க வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் தான் போட்டி வெற்றி என்பது மதில் மேல் பூனை கதை தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...