திருவிழா முடிந்து வரவு செலவுக் கணக்குகளை டீக்கடையில் அமர்ந்து பார்க்கும் போது பறக்கும் படையினர் கைப்பற்றினர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் செவ்வூர் கிராமத்தில் டீக்கடையில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவர் ராமன் .
அவரிடம் ரூபாய் 56,950 பறிமுதல் செய்திருக்கின்றனர் பறக்கும் படை அலுவலர்கள்.
கீரணிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா முடிந்து வரவு செலவுக் கணக்குகளை டீக்கடையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் மக்களிடம் பணம் வசூல் செய்த நோட்டு ஆகியவற்றையும் கொடுத்துள்ளார்
எனினும், வாக்காளர்களுக்குக் கொடுக்க அவர் பணம் வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அதை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவுக்கு முன்பாக எப்போது எப்படி பணம் தருவார்கள் என்பது மட்டும் இந்த அலுவர்களுக்கு சத்தியமா தெரியாது.
கருத்துகள்