முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாக்காளர் பெயர் நீக்கம் தலைமைத் தேர்தல் ஆணையம் தலையீடு வாக்களித்த முதியவர்

மதுரை மாநகரில் மேலப் பொன்னகரம் பகுதியில் வசிக்கும் மகபூப் ஜான்


ம.தி.மு.க-வில் உள்ளார் பல சமூக நல அமைப்புகளோடு சேர்ந்து பணியாற்றியதால் மதுரை நகரின் மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் அவரைத் தெரியும். ஒவ்வொரு தேர்தலிலும்  வாக்கைச் செலுத்தி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருந்தது. அவரிடம் அடையாள அட்டையும் இருந்தது ஆனால், இரண்டாவது வெளிவந்த வாக்காளர் பட்டியலில்  அவரது பெயர் நீக்கப்பட்டு, இறந்து போன அவரது மனைவி பெயர் மட்டுமே இருப்பதைத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிந்தவர் அதிர்ச்சியடைந்து.நூறு சதவிகித வாக்குப்பதிவுக்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதாவிடம், பெயர் நீக்கப்பட்டுள்ளது குறித்து முறையிட்டாராம். ஆனால், முறையாகப் பதில் அளிக்காமல், வாக்காளர் பட்டியலைச் சரியாகப் பாருங்கள் என்று அலட்சியமாகப் பேசினாராம்.

பொதுவாழ்க்கையில் இருப்பதைக் கூட வெளிப்படுத்தவில்லை. நூறு சதவிகித வாக்குப்பதிவுக்காக மலை மீதெல்லாம் ஏறி பேனர்கள் கட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய நீங்கள், என்னுடைய புகாரைத் தட்டிக் கழிக்கிறீர்கள்' என்றதற்குக் ஆட்சியர் கோபமானவர், பதில் சொல்லாமல், 'வாக்காளர் பட்டியலை நன்றாகப் பாருங்கள், எங்கள் தேர்தல் அலுவலர்களிடம் சொல்லுங்கள்' என்றே திரும்பத் திரும்பச் சொன்னாராம். மற்ற தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லாததைத் தொடர்ந்து தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்குப் புகார் அனுப்பியுள்ளார், அதற்கும் பதில் இல்லை. வாக்குரிமையை மீட்க முடியவில்லையே என்ற கவலையோடு இருந்தவர், தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவரது வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், சத்தியமூர்த்தியிடம் ஆலோசனை பெற்று டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையருக்கு விவரமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அங்கிருந்து உடனே எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து தகவல் வந்திருந்ததில், 19-ஆம் தேதி வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவரது  புகாரை உடனே விசாரித்த தேர்தல் ஆணையம், மாநில மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தித் தவறு நடந்துள்ளதைக் கண்டுபிடித்து உடனே அவரை வாக்களிக்க உத்தரவிட்டது. இதே தகவலை மாவட்டத் தேர்தல் அலுவலருக்கும் அனுப்பிய தேர்தல் ஆணையம், முதல் ஆளாக அவரை வாக்களிக்க வைக்குமாறு உத்தரவிட்டதால் அவரைத் தேடி தேர்தல் அலுவலர்கள் அலைந்துள்ளனர். அது அவருக்குத் தெரியாது. அவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை.19-ஆம் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்றவரைப் பார்த்த அலுவலர்கள், உங்களைத்தான் நேற்றிலிருந்து தேடுகிறோம் என்று மிகவும் மரியாதையாகப் பேசி அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தி உபசரித்து பிறகு முதல் ஆளாக வாக்களிக்க வைத்துள்ளார்கள். இது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் சங்கீதா பொறுப்பில்லாமல் பேசியது தான் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதை ஒரு சவாலாக எடுத்துத் தான் இதை அவரால் சாதிக்க முடிந்தது.

இப்போது பல ஊர்களில் பல வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டதைக் காண்கிறோம் பலரும் சொல்கிறார்கள். அவர்களும் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலைப் பார்த்து உறுதி செய்தபின் இவரைப் போல் தலைமைத்தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தால் வாக்குரிமையை மீட்டிருக்கலாம்" என்பதே உண்மை. இந்த நிலையில் சிரிப்பு நடிகர் S Ve Shekhar: ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்..நேர்மையே தெரியாத திருட்டுத்தனம் : என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.

கோயமுத்தூரில்யில் ஓட்டுரிமை இல்லை என பாஜக தொண்டர்கள் போராடிய சம்பவத்தில் மாநில தலைவர் அண்ணாமலையையை சாடிய எஸ்.வி.சேகர் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2024 ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. ஒருமாத காலமாக நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தனர். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு நாளன்று சில தொகுதிகள் பலருக்கும் வாக்குகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கோயமுத்தூரில், தென் சென்னை , கரூர் உள்ளிட்ட தொகுதிகள் பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

அதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தான் போட்டியிடும் கோயம்புத்தூர் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக வேகுற்றம் சாட்டினார். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு முடிந்த இரு தினங்களில் கோயம்புத்தூர் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பீப்புள் ஆஃப் அண்ணாமலை என்ற குழுவைச் சேர்ந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு வாக்குரிமை பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நியாயம் கேட்டு களமிறங்கிய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பலரின் கையில் ஓட்டு போட்டதற்கான அடையாள மை வைக்கப்பட்டிருந்த காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பாரதிய ஜனதா கட்சியினரை சரமாரியாக இணையவாசிகள் வினா தொடுத்தார்கள் 

ஆனால் அதுதொடர்பாக தேர்தல் அலுவலர் அளித்த விளக்கத்தில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோயம்புத்தூர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதன்பின்னர் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  வாக்காளர் பட்டியலை வழங்கி வெளியிட்டார். ஏதேனும் சந்தேகமிருந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண், தேர்தல் அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை அணுகலாம் எனவும் தெரிவித்திருந்த நிலையில் இந்த கோயம்புத்தூர் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர், ' ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா? தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி. நேர்மைதான் அடிப்படை தேச சேவைன்னு தெரியாத திருட்டுத்தனம்' என பெயர் குறிப்பிடாமல் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்துள்ளார். அவரது பதிவில் S.VE.SHEKHER🇮🇳@SVESHEKHER

·Follow

ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா⁉️தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி. நேர்மைதான் அடிப்படை தேச சேவைன்னு தெரியாத திருட்டுத்தனம். என் விமர்சித்துள்ளார்.   இதில் சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர் செயலை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை காரணம். அவர் ஜாதிய ரீதியாக கட்சியில் பேசி வருவதே பலருக்கும் பிடிக்கவில்லை, பிராமணர்கள் மட்டுமே அந்த பதவியில் இருக்க வேண்டும் என்ற ஒரு தனிக் கும்பலின் சார்பில் பேசுவதே ஆகும்.ஆனால் அண்ணாமலை இதைப் பொருட்படுத்த வில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...