புதுச்சேரியில் புதிய இந்திய குற்றவியல் சட்டங்கள் பற்றிய 2-நாள் கண்காட்சி
உள்துறை அமைச்சகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், சட்டத்துறை, பல்கலைக்கழகத்தின் ஆனந்த ரங்கபிள்ளை நூலகம் ஆகியவை இணைந்து மே 6,7 ஆகிய இரண்டு தினங்களில் இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய போஸ்டர் கண்காட்சியை நடத்தின. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய அதிநியம் ஆகியவை இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்கள் ஆகும். கண்காட்சியின் தொடக்க விழா மே 6, 2024 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் சட்டச் சீர்திருத்தங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்குத் தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வு, தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் காவல்துறை ஐஜி முனைவர் அஜித் குமார் சிங்லா, புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கே. தரணிக்கரசு, சட்டதுறை புல முதன்மையர் பேராசிரியர் விக்டர் ஆனந்த் குமார், பல்கலைக்கழக நூலகர் விஜயகுமார் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். இவர்களுடன் சி& சிஆர் பேராசிரியர் கிளமெண்ட் எஸ் லூர்தஸ், சட்டதுறை தலைவர் முனைவர் குருமிந்தர் கவுர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதவி பேராசிரியர் முனைவர் ஷியாம்தானு பால் அவர்களின் அறிமுகத்துடன் நிகழ்வு தொடங்கியது. மேலும் அவர் இந்த கண்காட்சியின் உள்ளடக்கம் மற்றும் முக்கியத்துவத்தை பற்றியும் இந்த புதிய குற்றவியல் சட்ட சீர்திருத்தங்கள் நவீன சவால்களை எதிர்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு முழுமையான அணுகுமுறையை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகின்றன மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான சூழலை எவ்வாறு உறுதி செய்யும் என்பதை எடுத்துரைத்தார். டாக்டர். சிங்லா, தனதுதொடக்க உரையில் இந்தச் சட்டத் சீர்திருத்தங்கள் நமது சமூக சவால்களை எதிர்கொள்வதற்கு சரியான வழித்தடமாக அமையும் என்று கூறினார்.
தலைமை உரையை துணை வேந்தர் பேராசிரியர் கே. தரணிக்கரசு வழங்கினார். புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். குற்றவியல் நீதித்துறையின் செயல்திறன் மற்றும் நேர்மையை மேம்படுத்துவதில் இந்த சட்டங்கள் எவ்வாறு ஒரு மூலக்கல்லாக செயல்படும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
பல்கலைக்கழக நூலகர் முனைவர் விஜயகுமார் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது. இந்நிகழ்வில் பிற துறைகளில் புல முதன்மையர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்