முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குண்டர் சட்டம் 3 ஆம் நீதிபதியின் முடிவில் புழல் சிறைக்கு மாற்றம் செய்து சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வார், என்னவெல்லாம் செய்யமாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி சவுக்கு சங்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


மேலும், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை இறுதி விசாரணை நடைபெறுமென உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

பெண் காவலர்களை உயர் அலுவலர்களுடன் தொடர்பு படுத்தி அவதூறாகப் பேசியதாக  மே மாதம் 4-ஆம் தேதி, யூடியூபர் சவுக்கு சங்கரை, கோயம்புத்தூர் காவல்துறையினர் தேனியில் கைது செய்தனர். அப்போது கஞ்சா வைத்திருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து, சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் மே மாதம் 12-ஆம் தேதி அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.


அந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்கக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ததில், ‘ காவல்துறை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எனது மகன் மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை சட்டவிரோதமாகப் பதிவு செய்து, ஒவ்வொரு நீதிமன்றமாக ஆஜர்படுத்தி வருகின்றனர்.

காவல் துறையால் தாக்கப்பட்டதால் கை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் அடைந்துள்ள எனது மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. காவல்துறையால் தனது உயிருக்கு ஆபத்திருப்பதாக எனது மகன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். எனவே, எனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, அதை இரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.


இந்த ஆட்கொணர்வு மனு நேற்று வியாழக்கிழமை காலை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்துப் பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டதன் படி இந்த வழக்கு, பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் தரப்பில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கை இன்று மே மாதம் 24 ஆம் தேதி விசாரிப்பதாகக் கூறி  தள்ளி வைத்தனர்.


இதேபோல், கோயம்புத்தூர் சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தும்படி தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையையும் இன்று வெள்ளிக்கிழமைக்குத் தள்ளி வைத்தனர்.


 அப்போது, எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்யமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு முதல்வரை ஒருமையில் அழைத்திருப்பதை ஏற்க முடியாது என்ற கருத்தையும் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதால், நேற்று மாலையே சிறையிலுள்ள அவரைச் சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அவர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்காக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும் படி அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கும் உத்தரவிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இவ்வளவு அவசரம், அவசரமாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசரம் என்ன? நாளைக்கே இந்த வழக்கில் இறுதி விசாரணை மேற்கொள்ள அப்படி என்ன சிறப்புள்ளது?” எனக்  என்றார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை இன்று வெள்ளிக்கிழமைக்குத் தள்ளி வைத்தனர். யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் தாயார் செல்வி சென்னை காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதில் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு ஶ்ரீமதி குறித்து சவுக்கு சங்கர் அவதூறு பரப்பியதால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி, பள்ளி விடுதியில் உயிரிழந்தார். ஶ்ரீமதியின் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வந்தது. இது தொடர்பாக விசாரணைகளும் நடத்தப்பட்டன இந்த நிலையில் தற்போது பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது ஶ்ரீமதியின் தாயாரும் ஒரு புகாரைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் சவுக்கு மீடியா யூ டியூப் சேனலில் கள்ளக்குறிச்சி விவகாரம்- மர்மம் அவிழ்க்கும் சவுக்கு என்ற தலைப்பில் ஒரு காணொளிக் காட்சியை சவுக்கு சங்கர் வெளியிட்டார். அதில் என் மகள் குறித்தும் என்னைப் பற்றியும் என் குடும்பத்தினர் பற்றியும் உண்மைக்குப் மாறான விஷயங்களை சவுக்கு சங்கர் பேசியிருந்தார். அப்போது சவுக்கு சங்கர் பேசியதன் பின்னணிக்கான ஆதாரம் எங்களிடமில்லை.தற்போது சவுக்கு சங்கரின் உதவியாளர் பிரதீப் என்பவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திடம் பணம் பெற்றுக் கொண்டு தான் சவுக்கு சங்கர் என் மகள் ஶ்ரீமதி குறித்தும் என் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகப் பேசியதாக தெரிவித்துள்ளார். இதையே ஆதாரமாக வைத்து சவுக்கு சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என  ஶ்ரீமதியின் தாயார் செல்வி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் இழிவாகப் பேசியதால் கைது செய்யப்பட்டார். பின்னர் கஞ்சா வழக்கிலும் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்த வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பாய்ந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஶ்ரீமதியின் தாயார் காவல் துறையில்  புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சவுக்கு சங்கர் வழக்கு விஷயத்தில் நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த அரசும்  காவல்துறையும் மற்றும் பெரும் புள்ளிகள் .என. நீதிபதி G.R.சுவாமிநாதனை இந்தப் புள்ளிகள் நேரில் சந்தித்து இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என இவர்கள் முறையற்ற முறையில் அழுத்தம் கொடுத்துள்ளார்கள். இதெல்லாம் தேவையா? என் விவாதம் எழும் நிலையில் அரசின் விளக்கத்திற்குப் பிறகு நீதிபதி இப்புள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பார் என நாமும் நம்புவோம்.


 நீதிபதி G.R.சுவாமிநாதன்  குண்டர் சட்டத்தை ரத்து செய்வார் என்பதையும்.  நீதிபதி பாலாஜியின் தீர்ப்பு வேறு விதமாய் இருக்கலாம்.

முடிவாக மூன்றாம் நீதிபதியும் குண்டர் சட்டத்தை ரத்து செய்வார் என்பது விசாரணையின் ஓட்டத்தில் அறிய முடிகிறது .  சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு எதிரான வழக்கு விசாரணையில் அதிகாரம் மிக்கவர்களிடமிருந்து அழுத்தம் வந்ததாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

குண்டர் சட்டம் உத்தரவை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என்ற உத்தரவாத மனுவை தாக்கல் செய்யும்படி சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.


இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் தரப்பில் உத்தரவாத மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுவரை நடந்து கொண்ட செயல்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் கருத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை பொது சொத்துக்களுக்குப் பங்கம் ஏற்படவில்லை. நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையின் குண்டர் சட்ட உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என வாதிட்டார்.

மேலும் இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்து பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி ஆகியோர் முறையீடு செய்திருந்த நிலையில், இவர்கள் தரப்பின் வாதங்களும் கேட்கப்பட்ட நிலையில்,

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியள்ளனர்.

நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்ததாகவும், மாறாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தால், என்னிடம் அவ்வாறு பேசியவர்கள் தங்கள் இலக்கை அடைந்து விடுவதாக அர்த்தமாகிவிடும் என்பதால் இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை இரத்து செய்வதாகவும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

நீதிபதி பாலாஜி தனது தீர்ப்பில் வழக்கமான நடைமுறைப்படி இந்த வழக்கில் அரசுத்தரப்பு பதிலளிக்க அவகாசம் தர வேண்டும். பதிலுக்குப் பிறகே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளதால் இந்த வாழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு நீதிபதிகள் பரிதுரை செய்துள்ளனர். அது மட்டுமின்றி கோயம்புத்தூர் சிறையிலுள்ள சவுக்கு சங்கரை புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.  சட்டம் எதுவோ? அதன் படி நீதிபதி G R சாமிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

சவுக்கு சங்கர் - அவரையே அவதூறாகப் பேசியவர் தான்.

அவர் பேசும் அவதூறுகள் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்.

அவர் செய்த தவறுகளுக்கு தண்டனை அளிக்க உரிய சட்டங்கள் உள்ளன: அவர் செய்த குற்றத்திற்குப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் படி நீதிமன்ற விசாரணையை அவர் எதிர் நோக்கித்தான் ஆக வேண்டும். அவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை.

ஆனால், குண்டர் சட்டம் போட வேண்டிய அவசியமில்லை. ஆகவே தான் குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளார். என்பது தான் உண்மை 


எல்லா வழக்குகளிலும் ஜாமீன் பெறவே குறைந்த பட்சம் 6 மாத காலம் ஆகலாம்.                                  இந்த நிலையில் ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு. திருச்சிராப்பள்ளி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா வழங்கியுள்ளார். ஆறு மாதத்திற்கு திருச்சிராப்பள்ளி கணினி சார் குற்றவியல் பிரிவில் மாதத்திற்கு இரண்டு முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டு அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்