போக்குவரத்து விதி மீறல்களுக்காக தமிழ்நாடு அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதம் விதிக்கிறார்கள் எனும் செய்தி.
பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் காவல்துறை தாமதமாக மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள், சாலை முழுவதையும் தங்களுக்குச் சொந்தமானது என்பது போலவும், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டி வந்தனர். கட்சி அடிப்படையிலான ஊழியர் தொழிற் சங்கங்களின் ஆதரவுடன், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருந்தனர் மற்றும் அபராதம் விதிக்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை அல்லது இத்தனை நாட்களாக கேள்வி கேட்கவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி செல்லும் பேருந்தில் சட்டப்படி டிக்கெட் எடுக்குமாறு காவலரை வற்புறுத்தி நடத்துனரிடம் வார்த்தைப் போரில் ஈடுபட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக போக்குவரத்துத் துறை செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்துள்ளது. சட்டத்தைக் கடைபிடிப்பது போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவலர்களின் கடமை மற்றும் பொறுப்பு என்றாலும், இது நாள் வரை அரசுப் பேரூந்துகளில் இதுபோன்ற அத்து மீறல்கள் தொடர்பாக காவல்துறை இந்தச் சம்பவத்திற்கு முன் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதை காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாகும்.
சாலை விதிகளை மீறியதாக தமிழ அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கிறார்கள் போக்குவரத்து காவல்துறையினர் என்ற ஒரு செய்தியை பார்க்க, படிக்க நேர்ந்தது. மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்த நடவடிக்கையை தாமதமாக எடுத்துள்ளது காவல்துறை.
போக்குவரத்துத் துறையோ அல்லது காவல்துறையோ யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய கடமையும், பொறுப்புமுள்ளது என்பதை அரசுப் பணியாளர்கள் உணர வேண்டிய அதே நேரத்தில், இது நாள் வரை இதே போன்ற அரசு பேருந்துகளின் விதி மீறல்களின் மீது காவல்துறை எவ்வளவு நடவடிக்கை எடுத்தது என்பதையும் அப்படி இல்லையெனில் ஏன் எடுக்கவில்லை என்பதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடலாம்.
எது எப்படியோ, சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இது காவலர்களுக்கும், போக்குவரத்து துறையினருக்குமான பெரும் மோதலாக உருவெடுக்காமல் தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அதனால் உருவாகும் பாதிப்புகள் பொது மக்களுக்கு தான் என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை.
இந்தச் சம்பவத்திற்கு முன்னர் ஏ பேன் செய்யப்படவில்லை ? என விமர்சனங்கள் வந்த போதிலும்.
அரசு ஊழியர்கள் அல்லது சட்டத்தை அமல்படுத்துபவர்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம் இந்த மோதலால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே என்பதால் காவல் துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் இடையே இது பெரிய மோதலாக மாறாமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட காணொளி அண்மையில் வைரலானது.
அதில், அரசுப் பேரூந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே பயணச் சீட்டு கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட்டா என அந்த அரசுப் பேருந்தில் பயணச் சீட்டு எடுக்காமல் அரசு போக்குவரத்து நடத்துநருடன் வாக்குவாதம் செய்த, காவலர் ஆறுமுகப்பாண்டி மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்த நிலையில், தற்போது 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்துக் காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். சென்னை பரங்கிமலை ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தலைமையில் ஆறுமுகபாண்டியன் உள்ளிட்ட 8 ஆயுதப்படைக் காவலர்கள் மே மாதம் 20- ஆம் தேதியன்று புழல் சிறையிலிருந்து மதுரைக்கு நான்கு கைதிகளையும், பாளையங்கோட்டைக்கு 7 கைதிகளையும் காவல்துறை வாகனத்தில் கூட்டிச் சென்றனர். சிறையில் கைதிகளை ஒப்படைக்கப்பட்ட பின்னர், சார்பு ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தன்னுடன் வந்த காவலர்களை ஓய்வெடுக்க அறிவுறுத்தினார். பின்னர் மே மாதம் 21 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் பாளையங்கோட்டை சிறைச்சாலை வளாகத்துக்கு வருமாறு அறிவுறுத்திய நிலையில் தான் ஆயுதப்படை காவலர் ஆறுமுகபாண்டியன் நாங்குநேரியிலுள்ள அவரது நண்பரைப் பார்த்துவிட்டு வந்த போது நாங்குநேரி பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தக் காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி சென்னை பரங்கிமலை ஆயுதப்படை உதவி ஆணையர் சம்பந்தப்பட்ட காவலர் ஆறுமுக பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்டாபோது திடீரென்று மயங்கி விழுந்ததாகவும். உடனடியாக அவருக்கு ஆலந்தூரிலுள்ள காவலர்களுக்கான மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் எழும்பூரிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆறுமுகபாண்டியன் மன அழுத்ததில் இருந்ததால், மருத்துவர்கள் பரிந்துரைப்படி அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உளவியல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்,
இந்த நடவடிக்கைகள் சரியானதாக இருந்தாலும் காலம் கடந்த செயலாகும்.
கருத்துகள்