முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் புகார் கடிதமும் கொளத்தூர் மணி புகார் கடிதமும் எதிரெதிர் துருவங்கள்

நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த இருவர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடிதம்


சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாமெனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.


நீதி பரிபாலனத்தில் தலையிடும் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால்,  அந்த இரு நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற  கோரிக்கையுணன் , வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு கடிதமனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில், ‘நீதிபதி சுவாமிநாதன், அந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்தாததால், அவர்களையும், அவர்களை அனுப்பியது யார் என்பதையும் கண்டறிய

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கும் அனுப்பியுள்ளார் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்.       


    இந்த நிலையில்       மேலும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்துகொண்டு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் செயல்படுவதாக, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவரான கொளத்தூர் மணி புகார் செய்தார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினர் 

 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் வேறு சிலர் படுத்து உருளுவது சரியே என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார், கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நபர் கடவுள் வழிபாடு விவகாரத்தில் புகார் அளித்தார் என்பது ஏற்புடையதாக இல்லை.   அதன் விபரம் வருமாறு கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் கோவிலில்  ஆண்டு தோறும்  மே மாதத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் அன்னதானம் நடைபெறுகிறது. அதில் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டு வந்தனர். இந்த நடைமுறைக்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டு இதற்குத் தடை விதிக்கப்பட்டது. பத்தாண்டுகளாக இந்த நடைமுறை நடைபெறாமலிருந்து வந்த நிலையில் எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் புனிதமான சடங்குக்கு அனுமதி அளிக்கவேண்டும் என கரூர் நவீன்குமார் சென்னை உயர்நீதிமன்றம்  மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் வழிபாடுகள் நிகழ்வை நடத்திக் கொள்ளலாமென கடந்த மே மாதம் 17ஆம் தேதி தீர்ப்பளித்தார். மே 18 ஆம் தேதியன்று, நெரூரில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட்ட இலைகளில் அங்கபிரதட்சணம் செய்தனர். எச்சில் இலையில் உருண்டு வழிபாடு நேர்த்திக்கடன் செய்வதை உயர் நீதிமன்றமே அங்கீகரித்துள்ளது. 

இந்ந நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடவுள் வழிபாட்டுக்கு எதிரானவர்கள் 

மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருளுவது சரியே என உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்ததை எதிர்த்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வரும் ஜிஆர் சுவாமிநாதன் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிச் செயல்படுவதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி மற்றும் மதப் பாகுபாடு அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதியாகத் தொடர ஜிஆர் சுவாமிநாதனுக்கு தகுதியில்லை என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்துள்ளதாகவும், அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த பாண்டியன் என்பவரின் மனுவின் மீதான விசாரணையில் எச்சில் இலைகள் மீது அங்கப்பிரதட்சணம் செய்வதற்குத் தடை விதித்து உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், கர்நாடகாவில் குக்கே சுப்ரமண்யா கோவில் உள்பட பல கோவில்களில் மட்டை ஸ்நானம் என்ற எச்சில் இலை மீது நடத்தப்பட்டு வந்த அங்கப்பிரதட்சணம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மதன், பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி - எச்சில் இலைமீது உருளுவது மத அடிப்படை உரிமை, அதைத் தடுக்க முடியாது என்று உத்தரவுப் பிறப்பிப்பது சட்டப்படி குற்றச் செயல் என்றும் அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இதுவரை கொடுத்துள்ள சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக்கொண்டுள்ளனர்.  ஆக இனி யானை ராஜேந்திரன் கருத்து மற்றும் கொளத்தூர் மணி கருத்து இரண்டும் எதிர் எதிர் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் இது குறித்துக் கூறியதாவது:

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட, பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கை மட்டும் விசாரணைக்கு எடுத்தது குறித்து, நீதிபதி பதிலளித்துள்ளார். மேல் மட்டத்திலுள்ள இருவர் தன்னைச் சந்தித்ததாக, நீதிபதி கூறியுள்ளார். இந்தச் செயல், நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவது போலாகும்; நீதிமன்ற அவமதிப்புமாகும்.

நீதிபதி தங்கியிருக்குமிடத்தில், பாதுகாப்புக் காவலர்கள் இருப்பார்கள். நீதிமன்றத்திலுள்ள அறை என்றால், உதவியாளர்கள் இருப்பார்கள். அதனால், தன்னைச் சந்திக்க வந்தவர்களை, அங்கேயே பிடித்துக் கொடுத்திருக்கலாம். நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவதாகத் தான், சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து தண்டனை வழங்கினார். அப்படியிருக்கும் போது, இந்த இருவருக்கு எதிராகவும், அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

பொதுவாக, ஆட்கொணர்வு வழக்கில், அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கப்படும். இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரலும், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளார். மற்றொரு நீதிபதி பாலாஜியும், பதிலளிக்க அரசை அனுமதிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

கள்ளச்சாராய வழக்குகளில், குண்டர் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கும்போது, அதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த அமர்வில், நானும் இருந்துள்ளேன்.

விசாரணைக்கு வந்த நிலையில், குண்டர் தடுப்புச் சட்டக் கைதை இரத்தும் செய்துள்ளோம். ஆனால், அரசு வழக்கறிஞர், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டால், அவகாசமளித்துத் தான் விசாரித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...