துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சாலையம் தெருவைச் சேர்ந்த சிவலிங்கம், வயது 50. இவர் நிலத்துக்கு பட்டா கேட்டு, ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.
4,000 ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டுமென சர்வேயர் செல்வமாடசாமி கேட்டதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவலிங்கம், துாத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறையில் புகார் செய்தார். விளாத்திக்குளம் அருகே சர்வேயர் செல்வமாடசாமியிடம் ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு கொடுத்திருந்த பினாப்தலின் இரசாயனம் தடவிய பணத்தை சிவலிங்கம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் செல்வமாடசாமியைங் கைது செய்து விசாரித்து சிறைக்கு அனுப்பி னர். அதேபோல்
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடியைச் சேர்ந்த ரமேஷ், வயது 64. அவருக்கு பூர்வீகமாகப் பாத்தியப்பட்ட இடத்திற்கான சொத்து வரியை, அவரது தந்தை பெயரிலிருந்து அவர் பெயருக்கு மாற்ற விண்ணப்பித்தார். நேரில் வருமாறு, திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர், செல்வராணி, மொபைல் போனில் அழைத்தார். அலுவலகம் சென்ற ரமேஷிடம், வருவாய் ஆய்வாளர் செல்வராணி மற்றும் அலுவலக உதவியாளர் ராகுல், ஆகியோர் 30,000 ரூபாயை நேற்று லஞ்சமாகப் பெற்றனர். மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து சிறைக்கு அனுப்பினர். திருப்பூர், காங்கயம் ரோடு, முத்தணம்பாளையத்தைச் சேர்ந்த கமலா, வயது 50, வாரிசு சான்றிதழ் கேட்டு, நல்லுாரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
வருவாய் ஆய்வாளர் மைதிலி, வயது 45, அணுகினார். சான்றிதழ் வழங்க, 2,000 ரூபாய் லஞ்சமாக மைதிலி கேட்கவே . அதிர்ச்சியடைந்த ஜீவா, திருப்பூர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். நேற்று மதியம் அலுவலகத்தில், வருவாய் ஆய்வாளர் மைதிலியிடம், 2,000 ரூபாயை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு, மைதிலியைக் கைது செய்து அவரிடம் விசாரித்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்