முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோழர்கள் படையிடம் தோல்வி கண்ட கிரேக்க அலெக்ஸாண்டர்

உலகத்தில் நாகரிகத்தின் விதைகள் பரவியது கிரேக்கமும் பல சமஸ்தானத்தின் பிரிவுகள் இருந்த இந்தியாவும் தான் இறுதியில் உலகை வெல்ல முயன்ற கிரேக்க அலெக்ஸாண்டரின் கடைசி வார்த்தைகள்


"நான் இறந்தபிறகு, என்னைப் புதையுங்கள், எந்த நினைவுச் சின்னமும் வேண்டாம்.

என்னுடைய இரண்டு கைகளையும் சவப்பெட்டியின் வெளியே தெரியுமாறு செய்யுங்கள். இந்த உலகத்தையே வென்ற ஒருவன், மரணத்திற்கு பிறகு தன்னுடன் ஒன்றும் கொண்டு செல்லவில்லை என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ளட்டும்".  என்பதே ஆகும். படைப்பாளி யாரும் எதையும் எழுதப் புகுமுன் போருக்குப் போகிறவன் நிலை போலத் தான். தனது களம், காலம், கரு சார்ந்து தனது யுத்தியை அமைத்துக் கொள்கிறான். மொழியைத் தேர்ந்து கொள்கிறான். அது தற்செயலாக அமைவதுமுண்டு, திட்டமிட்டுக் கொள்வதுமுண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு பழமொழி வண்டமிழில். ஒவ்வொரு படைப்புக்கும் போர்த் தீவிரத்துடன் செயல்படும் படைப்பாளியாக வேண்டும் என்பதே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஆசை. எழுதப் போகும் செய்தி பற்றிய தெளிவான திட்டம் வேண்டும். உத்தியை யோசித்து பின்னர் நிராகரித்து அல்லது அலைக்கழிக்கிறவர் உலகில் எவருமில்லை” காலமும் சரித்திரமும் வினோதமானது.



வரலாறு என்பதே ஒரு சக்கரம் போன்றது.   அது          பல ஆண்டுக்கு ஒருமுறை திரும்பும் என்கிறார்கள் முன்னோர்கள்

அப்படித் தான் தற்போது இந்தியாவில் அரசியல் களம் உள்ளது.

எனக்கு அந்தக்காலத்தில் நாடு பிடிக்க வந்த அலெக்ஸாண்டரின் முன் வெற்றி அதன் பின் தோல்வியை நினைவு படுத்துகிறது.  

ஆக,  தற்போது பலரும் வரலாறு குறித்த பார்வையின்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்!  இளைஞர்களுக்கு நாம் பழைய வரலாற்றைச் சொல்லித்தரவேண்டும் ஏனென்றால் பலர் வரலாறு அறியாதவர்களாகவே வாழ்கின்றனர், காரணம் கலாச்சார மாற்றங்கள் அது மாறவேண்டும் என்பது  என் எண்ணம் மாவீரர் அலெக்சாண்டர் கதையை எழுதச் சொல்கிறது

முழுமையாய் படித்தால் பல வரலாற்று உண்மைகள் உண்டு.

அன்றைய சோழப்பேரரசு தான் அந்நியப்படைகளை விரட்டியது என்பதைப்போலவே 



கி மு 320 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை மேலோங்கி யெரியும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. 

பல நாடுகளின் மீதான படை எடுப்புகள் அந்த நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாட்டின் அழகிய பெண்களையும், அந்த நாடுகளின் சொத்துக்களையும் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்று தங்கள் நாட்டில் சுகமாக வாழதல் என்னும் கொள்கையில் 620 சமஸ்தானங்களை  யுத்தம் அதில் உள்ள 60 பிரதேசங்களிலும் 


இன்றைய இந்தியாவில் இருந்து செல்வங்களை  அள்ளி வரக் கனவு கண்டார் பிலிப் அதாவது மாவீரர் அலெக்ஸான்டரின் தந்தை.

ஆனால், அது நிறைவேறவில்லை. அவருடைய கனவை மகன். அலெக்ஸான்டர் சுவீகரித்துக் கொண்டது . 

ஆசைக்கும், கனவுக்கும் ஏது எல்லை? என்பது போல ஆசைகள்  இவர்களை விட்டு வைக்கவில்லை .

அலெக்ஸாண்டர் இந்தியாவை வெற்றி கொள்ள விரும்பினான். 

கிழக்கின் எல்லை என்று இந்தியாவின் பூகோள வரைபடத்தைக் கொண்டு வரச் செய்து இந்தியாவை அதன் புவியியல் நிலைகளை ஆராய்ந்தான். 

கம்பீரமான இமயமலைத் தொடர் பாய்ந்து ஓடும் பல ஜீவ நதிகள் அடர்ந்த அற்புதமான காடுகள் அந்த நாட்டைக் காக்கும் அரணாக இருப்பதைக் கண்டான்.

இயற்கையே அமைத்திருந்த வானுயர மதில் சுவர்! போல இமையமலை தொடர் , 

அதைக் கடந்தால் தான் இந்திய மண்ணில் காலடி வைக்க முடியும். 

எங்கே, எப்படிக் கடப்பது. இதுதான் அலெக்சான்டரின் மிக பெரிய கேள்வி . 


அந்த மலையரணில் இரண்டு குறுகிய பாதைகள் தென்பட்டன. அவை கைபர் மற்றும் போலன் கணவாய்கள். 

ஆம், அவைதான் இலகுவான வழி . இந்தியாவை நோக்கிப் படை எடுத்து வரும் வழியிலுள்ள பலநாடுகள் அலெக்ஸ்சண்டருடன் போரிட்டு மடிந்தன, 


மீதமுள்ள நாடுகள் பலவும் யுத்தமின்றி சமாதானம் செய்து அலெக்ஸ்சண்டருக்கு வழி விட்டன.

இமைய மலைத் தொடரைக் கடக்கும் முயற்சியில் அவருடைய படைகள் ஈடுபட்டன. 

அவரிடமிருந்த மாசிடோனியப் படை வீரர்களின் எண்ணிக்கை வெறும் 15 ஆயிரம் மட்டுமே. 

அலெக்ஸ்சன்டரின் உளவாளிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி நுழைந்து திரட்டிய தவல்கள் அலெக்ஸ்சாண்டருக்கு பெரும் வியப்பாக இருந்தது.

சோழர் படைகள் வலுவாக இருந்தன . மாமன்னன் ஃபோர்ஸ் எனும் புருசோத்தமன் அலெக்ஸ்சாண்டர் படைகளைச் சந்திக்க தயாராக உள்ளார் 

என்ற செய்தியும் அலக்ஸாண்டரை மேலும் சீற்றம் கொள்ளவே செய்தது 

தன்னால் வெற்றி கொள்ளப்பட்ட .பெர்ஸிய நாட்டு மன்னனருடன் இளைஞர்களில் 30 ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடைய படையில் அவர் சேர்த்துக் கொண்டார். தற்போது படை பலமுடையதாகி விட்டது.


ஆனாலும் சோழர்கள் 2 லட்சம் காலாட் படையையும் 20 ஆயிரம் குதிரை படைகளையும் நான்கு குதிரை பூட்டிய தேர்படை 2000 இதற்கெல்லாம் மேலாக வேல் ஏறிய கூடிய வேழப் படை எனும் யானைப் படை 3000 இருந்தது . 

சோழர்கள் தமது யானைப் படைகளை மிக இரகசியமாக் வைத்திருந்தார்கள் 

அதனை அலெக்ஸாண்டர் முழுமையாக அறிந்திருக்கவில்லை . 

சிறிய அளவில் 500 யானைகள் தான் இருக்கும் என்ற தவறான கணிப்பே அலெக்ஸாண்டரிடம் இருந்தது.

இந்தியாவை நெருங்கி காபூலில் முகாமிட்டிருந்த அலெக்ஸாண்டருடைய படை இந்து குஷ்மலைத் தொடரைக் கடந்தது. 

தற்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பை அவர்கள் முதலில் கைப்பற்றினர். அதுவும் அன்றைய இந்திய ப் பகுதியில் இருந்தது தான்.

அப்போது அப்பகுதியிலிருந்து சோழர் படை தந்திரோபாய பின் வாங்கலைச் செய்து சிந்து நதியின் தென் கிழக்கில் ஒரு இடத்தில் தமது படைகள் குவிந்து இருப்பது போல ஒரு பாவனை செய்தது

இரவு வேளைகளில் மிகப் பலமான யானை அணிகளை வடக்காக நகர்த்தி இருந்தார்கள் . 

அலெக்ஸாண்டருக்கு தென் கிழக்கில் மட்டுமே சோழர்கள் படை மிக வலுவாக உள்ளது போன்ற ஒரு தோற்றம் காண்பிக்க பட்டது.

அலெக்ஸாண்டரின் படை, ஆற்றல் மிக்கது; முறையான பயற்சியே அவர்களுடைய ஆற்றலுக்குக் காரணம்.


கிரேக்க மாசிடோனியர்களை கொண்ட தனது படையை பழைய படை என்றும், பெர்ஸிய இளைஞர்கள் கொண்ட படைப் பிரிவை பின்தோன்றல்கள் என்றும் இரண்டு பிரிவுகளாக அலெக்ஸாண்டர் அழைத்தார்.

பின்தோன்றல்களிடம் வலிமை இருந்தும், போர்ப் பயற்சி இல்லை. அவர்களில் பலருக்கு இந்தியாவில் கிடைக்கக் கூடிய பெருஞ்செல்வம் அழகிய பெண்கள் பற்றியே ஆசை விதைகள் விதைக்கப்பட்டது அல்லது காட்டப்பட்டிருந்தது. 

மற்றவர்கள் கட்டாயப்படுத்தியதன் பேரில் படையில் சேர்ந்தவர்கள். 

பயிற்சி இல்லாமல் அவர்களைப் பயன்படுத்த முடியாது. எனவே, காபூலில் முகாமிட்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்குப் போர் பயிற்சியளித்தார் அலெக்ஸாண்டர். 

இதனால் அவருடைய படை முழுமையான போர்வீரர்கள் கொண்ட படையாகி விட்டது.

அலெக்ஸாண்டர் தன்னுடைய படையை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். 

ஒரு பிரிவைத் தனது நண்பன் ஹெபாஸ்டியன் தலைமையின் கீழ் அனுப்பினார்.

அந்தப் படை கைபர் கணவாய் வழியாக, சிந்து நதி தென் பிராந்திய பிரதேசத்தை நோக்கிச் சென்றது. 

மற்றொரு பிரிவுக்கு அலெக்ஸாண்டரே தலைமை தாங்கினார். 

அந்தப் படை ஸ்வாத் பள்ளத்தாக்கில் வடக்குப் பக்கமாக இருந்த மலைச் சாரல் வழியாக உள் நுழைந்து மலை வாழ் ஜாதியினரை எதிர் கொண்டது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வாழும் பழங்குடி போல

மலை ஜாதியினர் பலசாலிகள், முரட்டுத் தனமான தாக்குதல்களை செய்தார்கள் அல்லது எதிர்கொள்வார்கள்.


அவர்களுடன் புருஷோத்தமரின் மைத்துனர் குலகோட்டன் தலைமையில் அங்குதான் சோழர்களின் குதிரைபடைகளும் நின்றன . 

மிகவும் பயற்சி பெற்ற மலைச்சனஜாதி இளைஞர்கள் தாய்மண் காக்க சோழப் படையில் இணைந்திருந்தார்கள் . 

குலக்கோட்டன் படையின் ஒரு தளபதியாக மாகதன் எனும் தளபதி அலெக்ஸான்டரின் படைகளை ஓரளவு உள் நுழையவிட்டு இடையில் குறுக்கே புகுந்து தாக்கினார். 

அத்தாக்குதலே முதல் முறையாக அலெக்ஸாண்டரை மிக பெரிய தோல்விக்குள் தள்ளியது .

இன்னும் ஒரு பகுதியில் “ஹஸ்தி’ என்கிற மலைச் ஜாதித் தலைவன் பெருவீரம் காட்டி அலெக்ஸாண்டரை எதிர்த்தான். 

அவன் புஷ்ப கலாவதி என்கிற தலைநகரைக் கொண்ட குறுநிலப் பகுதிக்கு ஜமீன்.

 மாசிடோனியப் படை தொடர்ந்து இருபது நாட்கள் போர் செய்ய வேண்டியிருந்தது. 

கடுமையான போருக்குப் பிறகு மாசிடோனியர்கள் பெரும் அழிவைச் சந்தித்திருந்தார்கள் . 

இதுவரை தாம் கண்டிராத தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் புதுமையான யுத்திகள் தமிழனின் வீரம் அலெக்ஸ்சாண்டருக்கு வியப்பாகவே இருந்தது.

இதுவரைக்கும் யானைகள் ஏதும் அவன் கண்ணில் படவில்லை. அலெக்ஸ்சான்டர் மிகத் துல்லியமாகப் பயிற்றுவித்த நாய்களைப் பயன் படுத்தினான்,

அக்காடுகளில் நாய்களே அவர்களுக்கு வழி காட்டும் வீரராகவும் இருந்தன .

இந்தியாவின் வளமான காடுகள் மலைகள் நதிகள் அலெக்ஸாண்டரை கவர்ந்தது. 

இந்தியாவை வென்று இங்கேயே இருந்து விட வேண்டும் என்று தான் எண்ணினான் . 

பல சமஸ்தானத்தின் கூட்டரசு அதை முதலில் உருவாக்கிய அரசன் தான் ஃபோர்ஸ் எனும் புருஷோத்தமன் 

இந்தியாவை வளமான நாடு என்பதையும், அது தமிழரின் வீரத்தின் விளைநிலம் என்பதையும், அலெக்ஸாண்டர் முன்பே கேள்விப் பட்டிருந்தான் . 


ஆனால், அங்குள்ள பல மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகவே இல்லை. 

அந்தப் பெரிய நிலப்பரப்பு பல சிறு சிறு துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது என்பதை இந்தியாவுக்கு வந்ததும் தான் தெரிந்து கொண்டார் கிரேக்க அலெக்ஸாண்டர். 

தன்னுடைய நோக்கம் எளிதில் நிறைவேற நிலைமை சாதகமாக இருப்பது அவருக்குப் புரிந்தது. 

அதனால் அலெக்ஸான்டர் சில மன்னர்களை இரகசியமாகச் சந்திக்க தனது ஒற்றர்களை மூலம் தூது அனுப்பி வைத்தான் . 

போராடி வெல்வதில் சிரமங்கள் நிகழும் நிலை தோன்றியது . 

தென் கிழக்குப் படையுடன் இணையும் நாள் நீண்டுகொண்டே வந்தது, அந்தத் தாமதம் வேறு  மனதை மேலும் பலவீனமாக்கியது. 

தான் வரும் வழி எல்லாம் தன்னை எதிர்த்த சிற்றரசர்களைப் புறங்கையால் தள்ளிக் கொண்டே தான் முன்னேறினான் அலெக்ஸாண்டர். 

பாகிஸ்தானம் வரை அதே நிலைதான் ஆனால் இப்போது மிக பெரிய சவாலை சோழர்கள் தலைமையில் இருக்கும் இந்தியப் படைகள் கொடுக்க தொடங்கியது .

அடுத்தது, தட்சசீலம் என்ற குறுநில அரசுக்குள் அலெக்ஸாண்டரின் படை நுழையும் திட்டத்தில் இறங்கியது 

அது சிந்து நதிக்கும், ஜீலம் நதிக்குமிடையே பரவியிருந்த நிலப்பரப்பு. தட்சசீலத்தை, “ஹம்பி’ எனும் மன்னன் ஆண்டான். 

அவன் சோழ மன்னன் உறவாக இருந்த போரஸ் எனும் புருஷோத்தமன் மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்தான் . 

மாவீரர் அலெக்ஸ்சாண்டர் எப்படியாவது மன்னர் புருஷோத்தமனை வெல்வான் அடிமைகொள்வான் . அவனுக்கு உதவினால் தான் வரும் காலத்தில் பெரும் மன்னனாக ஆகிவிடலாம் என்றே கனவு கண்டான் . அலெக்சாண்டரின் கிரேக்க படை இமய மலை தொடரில் சற்று சுலபமான வழியாக ஹிந்து கூஷ் மலை வழியாக  நுழைந்தது. அப்போது தட்சசீலத்தை ஆண்ட மன்னரின் பெயர் "அம்பி". அலெக்சாண்டரை எதிர்க்க வீரம் இல்லாததாலும், தனக்கு ஏற்கனவே ஏழாம் பொருத்தமாய் இருந்த இன்னொரு மன்னனை வீழ்த்த "துரோகி"யாய் மாறுகிறான். வரலாற்றில் பதிவு செய்ததில் போரிடாமல் கதவை திறந்து விட்டான். படை மேலும் இந்தியாவிற்குள் நுழைந்தது. அடுத்ததாக அலெக்சாண்டர் கண் முன் இருந்தது "பௌரிய ராஜ்ஜியம் ". இதன் அரசர் புருசோத்தமன். ஆங்கிலத்திலும், கிரேக்கத்திலும் சுருக்கமாக போரஸ். இவர் சந்திர குல மன்னர் என சில வரலாற்று ஆசிரியர்கள் கூறலாம்.

அவனது எல்லை தாண்டினால் புருஷோத்தமன் படைகள் தயாராக இருந்தன . 

அங்குதான் 2000 யானைகள் நிலை எடுத்து மிக துல்லியமாக ஒரு அதிரடித் தாக்குதலுக்குத் தயாராக இருந்தன . 

அந்த யானைப் படைகளுக்கு தலைமை ஏற்று கரிகால் சோழன் பேரன் மனுநீதிச் சோழன் தயாராக இருந்தார் .

அதற்கடுத்ததாக ஜீலம் நதிக்கும், செனாப் நதிக்கும் இடையிலான பகுதியை மன்னர் ஃபோரஸ் என்ற புருஷோத்தமன் ஆட்சி செய்தார். 

சற்று தள்ளி இரவி, பியாஸ் நதிகளின் பக்கம் மாலி என்கிற மாளவர்களின் தேசமிருந்தது. 

காமரூபம், வங்கம், மகதம் என வட இந்தியாவிலேயே பல பேரரசுகளின் இராஜ்யங்கள் சோழ மண்டல புலிக் கொடியின் குடைக்குள் வந்து ஆண்டு வந்தன .

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கிரேக்க அலெக்ஸாண்டரை தங்களின் பொது எதிரியாகப் பாவித்து, வட இந்திய மன்னர்கள் ஒன்று கூடி எதிர்த்திருந்தால், 

கிரேக்க அலெக்ஸாண்டரின் கதை ஒரே நாளில் முடிந்து போயிருக்கும். 

ஆனால், அவர்களோ யார் வந்தால் என்ன? எது நடந்தால் என்ன? என்று அக்கறை யில்லாமல் இருந்துவிட்டனர். 

வந்த வேலை எளிதாக முடியும் என எண்ணி எண்ணி மகிழ்ந்தார் அலெக்ஸாண்டர்.

அன்று தமிழர்கள் படையே மிகவும் உக்கிரமான போரைத் தொடுத்தது .  

அலெக்ஸாண்டருக்கு ஹம்பி தனது ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்பி தமது ஆதரவை அறிவித்திருந்தார்.

"கிரேக்கத்தில் இருந்து இவ்வளவு தூரம் படை நடத்தி வர முடிந்ததென்றால், வந்திருப்பவர் பெரிய வீரனாகத்தான் இருக்க வேண்டும். 

பல வெற்றிகளைக் குவித்த பின்பே இங்கு வந்திருக்கிறார்

அப்படிப்பட்டவரை எதிர்த்தால் அழிவு நிச்சயம். நாம் ஏன் இவரைக் கொண்டு, புருஷோத்தமராகிய ஃபோரஸின் மீது நமக்குள்ள பகையைத் தீர்த்துக் கொள்ளக் கூடாது? "

என்று திட்டமிட்டார் அரசர் ஹம்பி . தனது நாட்டில் காலடி வைத்த கிரேக்க அலெக்ஸாண்டரை எல்லையில் நின்று அவர் இரு கை நீட்டி வரவேற்றார். 

அவருக்கு மாலை அணிவித்து, மதிப்புமிக்க பரிசுகளைக் காணிக்கையாக்கினார்.

“நான் உங்கள் நண்பன், உங்களை இந்த நாட்டின் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி!’ என்று கட்டியம் கூறிக்கொண்டார்.

அலெக்ஸாண்டரும் பதிலுக்கு சில பரிசுகளை ஹம்பிக்கு வழங்கி, அவருடைய நட்பை ஏற்றார்.

அலெக்ஸாண்டர் ஹம்பியின் அரண்மனையிலேயே தங்கிக் கொண்டார். 

ஹம்பி தன் அக்கம் பக்கத்திலுள்ள சிற்றரசர்கள் சிலரையும் கூட்டி வந்து அலெக்ஸாண்டரிடம் சரணடையச் செய்தார்.

அலெக்ஸாண்டர் ஹம்பி இடையேயான நட்பு அன்பால் விளைந்ததல்ல. அரசியலுக்காக சிலர் ஆதாயம் கருதிய கூட்டு போலவே அது. 

ஹம்பி மூலம் நாட்டு நிலவரத்தை நன்கு அறிந்து கொள்ள முடிகிறது என நினைத்துக் கொண்டார் அலெக்ஸாண்டர்.

அலெக்ஸாண்டர் மூலம் ஃ போரஸ்ஸை அழிக்கலாம். முடிந்தால் ஃ போரஸின் நிலப்பகுதியையும் அலெக்ஸாண்டரிடமிருந்து பரிசாகப் பெற்றுவிடலாம், என்பது ஹம்பியின் எண்ணம்.

நம்முடைய படையெடுப்பு தட்சசீலத்தோடு நின்றுவிடலாம். இங்கே நாம் வெற்றி கொள்ள வேண்டிய மாநிலங்கள் இன்னும் பல இருக்கின்றன என்று எண்ணினார் அலெக்ஸாண்டர். 

எல்லாருமே ஹம்பி மாதிரி சரணடைந்து விட மாட்டார்கள். வீரத்துடன் எதிர்த்து நிற்கக் கூடிய அரசர்களும் இங்கே இருக்கின்றனர் என்பதையும் அவர் அறிந்தார். ஜமீன் எட்டப்பர் போல

காட்டிக் கொடுத்த ஹம்பி இந்திய வரலாற்றில் ஒரு களங்கம். அந்நியனுக்கு இடமில்லை, என்று வீறு கொண்டெழுந்த புருஷோத்தமர் தமிழரின் மானம் காத்த மறவராவார் 

அன்று தமிழன் ஆண்ட நிலப்பகுதி தற்போது பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலம் வரை அகண்டிருந்ததாகும். 

புருஷோத்தமர் வீரம் மிக்கவர். அவரிடம் வடக்கே ஐயாயிரம் பேர் கொண்ட குதிரை படையும், போர்பயிற்சி பெற்ற 3000 யானைகளும் இருந்தன. அலெக்ஸாண்டரிடம் யானைப் படை இல்லை. 

ஹம்பி தன்னுடைய யானைப்படையை அலெக்ஸாண்டருக்குக் கொடுத்து உதவத் தயாராயிருந்தார். 

அத்துடன் புருஷோத்தமர் படைபலம் பற்றிய அத்தனை விவரங்களையும் அலெக்ஸாண்டரிடம் தெரிவித்து விட்டார்.

அலெக்ஸாண்டர் தன்னுடைய தூதனை புருஷோத்தமரிடம் சென்று சமாதானத்தை விரும்பினால் தன்னை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்!’ என்று தூதன் மூலம் தெரிவித்தார். 

புருஷோத்தமரோ, “அந்நியருக்குத் தலை வணங்கும் அவசியம் தனக்கில்லை. தான் போருக்குத் தயார்!’ எனத் தெரிவித்து விட்டார்.

ஹம்பியின் மூலம் படகுகளை ஏற்பாடு செய்து கொண்டு, சிந்து நதியைக் கடந்தார் கிரேக்க அலெக்ஸாண்டர். 

சிந்து நதிக்கரையில் தனது படைகளுடன் முகாமிட்டார்.

போருக்கு முன் வேடிக்கை, விளையாட்டு, விருந்து என்று ஓய்வெடுத்து அவருடைய படை ஏறத்தாழ ஒரு மாதகால ஓய்வை அனுபவித்தனர்.

அந்தக் காவ அவகாசத்தில் போரஸ் தன்னுடைய படையைத் திரட்டினார். அவருடைய தோழமை நாடுகளிலிருந்தும் படைகள் வந்து இணைந்தனர்.

ஃ போரஸ் மன்னன் போருக்கு அறை கூவல் விடுவித்த செய்தியை தூதன் மூலம் அறிந்தார் அலெக்ஸாண்டர், ஜீலம் நிதியைக் கடந்து தான், எதிரியைத் தாக்க முடியும். மறுகரையில் ஃ போரஸின் படை, தாக்கும் முனைப்புடன் நின்று கொண்டிருந்தது.

மாவீரர் அலெக்ஸ்சன்டரின் தந்திரங்களை மன்னர் புருஷோத்தமர் அறிந்திருந்தார் . 

போர்க்காலங்களிலிருந்து தப்பி வந்த மன்னர் பலரும் புருஷோத்தமரிடம் தஞ்சமடைந்திருந்தார்கள் . 

மாவீரர் அலெக்ஸாண்டரின் போர்த்தந்திரங்களைப்பற்றி அந்த அனுபவஸ்தர்கள்

ஃ போரஸுக்கு  முன்பே தெரிவிதிருந்தனர். மன்னர் புருஷோத்தமர் மிகத் தந்திரமாக தனது படைப் பிரிவு ஒன்றை ஹம்பியின் நாட்டு எல்லைக்குள் அனுப்பி அங்கிருந்த  விசுவாசிகளை ஒன்று திரட்டி வைத்திருந்தார் 

சரியான நேரத்தில் அவர்கள் ஹம்பியின் அரண்மனை மீது தாக்குதல் நடத்தி ஹம்பியை சிறைபிடிக்கவும் தயாராக இருந்தார்கள்.

மாவீரர் அலெக்ஸாண்டர் இரவு ஒருநாள் தனது படைகளை ஆற்றை இரகசியமாக கடந்து சென்று மன்னர் புருஷோத்தமன் படைகளுக்கு பின்பக்கம் வலமாக நிலை எடுக்கப் பணித்தான் . 

ஆற்றைக் கடப்பது அவ்வளவு இலகுவான விஷயமில்லை மன்னர் புருஷோத்தமன் எப்போதும் தனது எல்லைகளை மிகக் கவனமாக காத்து வந்தார் . 

அங்காங்கே சில குடியிருப்புகளும் இருந்தன அவற்றைக் கடந்து படைகளை உள் நுழைய வைப்பது கடினம் . 

ஆற்றைக் கடக்க இலகுவான இடமாக ஆற்றின் நடுவே இரண்டு தீவுகள் உள்ள பகுதி தேர்வானது. 

முதல் நாள் இரவின் இருட்டில் முதல் தீவை கடப்பது மறுநாள் இரவு இருட்டில் சோழர்கள் எல்லைக்குள் நுழைவது . 

மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறு ஒரு இடத்தில் நகர்வுக்கான ஆயத்தங்கள் செய்வது போல் பாசாங்கு காட்டப்பட்டது 

ஆனாலும் கடல் வழி யுத்தத்தில் கைதேர்ந்தவர்கள். சோழர்கள் எந்தச் சவாலையும் சந்திக்க படைகளை எங்கும் பல தளபதிகள் தலைமையில் தயாராக வைத்திருந்தார்கள் . 

எல்லைக்குள் ஊடுருவிய படைகள் சோழர்களின் ஒற்றர்கள் கண்களிலிருந்து தப்பவில்லை .

யுத்தம் தொடங்கியது குதிரைப் படைகள் காடுகளை மிக வேகமாக் ஊடறுத்து அம்புகளை எய்தன காடுகளை உடைத்த படி யானைகள் பிளிறிக் கொண்டு நலாபுறமுமிருந்து வந்தன 

மாவீரர் அலெக்ஸான்டர் படை செய்வதறியாது சிதறி ஓட ஹம்பியின் அரண்மனையும் சோழர்கள் வசமானது . 

3000 யானைகளின் சீற்றத்துக்குள் கிரேக்க அலெக்ஸாண்டரின் குதிரைப்படைகள் பாதிக்கு மேல் அழிந்தன . 

மனுநீதிச் சோழன் படைதளபதி எறிந்த வேல் கிரேக்க அலெக்ஸான்டரின் பாதி உயிரைக் குடித்தது விஷம் தடவிய வேல் பட்டு உலகையே வெல்லும் ஆசை கொண்ட கிரேக்க மாவீரர் அலெக்ஸாண்டர் வீழ்ந்தான், அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை அதோடு முடிவுக்கு வருகிறது . 

போர் நிறுத்தபடுகின்றது . அலெக்ஸான்டரின் தெற்கு நோக்கிய படைபிரிவின் தலைவன் அலெக்ஸான்டரின் நண்பன் ஹெபாஸ்டியன் கொல்லப்படுகின்றான்.

அவனது வாளை மன்னர் புருசோத்தமன் கிரேக்க அலக்சாண்டரிடம் ஒப்படைத்து மரியாதை செலுத்துகின்றான் . விஷம் ஆழமாக அலெக்ஸாண்டரின் உடலில் பாய்ந்திருந்தது. அவன் மிகவும் துன்பபடுகின்றான். அவனது நாடு பிடிக்கும் ஆசை அத்தோடு முடிவுக்கு வருகிறது.

ஒடுக்கியவன் தமிழ் மா மன்னன் சோழர்கள் வழிச் சக்ரவர்த்தி மன்னர் புருசோத்தமர்.

கிரேக்க அலெக்ஸ்சாண்டர் மீளமுடியாத விஷப்புண் உபாதையில் வீரசொர்க்கமடைகின்றான். இப்படி ஒரு தரப்பினர் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ஆனால் கிரேக்க அலெக்சாண்டர்,  மன்னர் புருசோத்தமனிடம் தோற்று விட்டார். ஆனால் அலெக்சாண்டரைக் கொலை செய்யாமல் அவர் தாய் நாட்டிற்கு வழியனுப்பி வைத்ததாக வரலாறு சில வழிகள் மாறியது. இந்திய மன்னர்களிடம் இருந்த "பெருந்தன்மை"  திரும்பிச் செல்லும் வழியில் போரினால் ஏற்பட்ட விஷக்காயம் தொற்றாக மாறி அவர் இறந்திருப்பார். ஆனால் திரும்பிச் செல்லும் போது வேட்டையாடும் போது விலங்குகள் தாக்கி காயம் ஏற்பட்டு, அதனால் உயிரிழந்தார் எனவும்,  மன்னர் புருசோத்தமனிடம் தோற்ற மன உழைச்சலாலேயே அவர் செல்லும் வழியிலேயே இறந்ததாகவும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

என்றாலும்  பின்னாளில் அலெக்சாண்டரின் படைத்தளபதி மீண்டும் படை திரட்டி வந்து, சந்திரகுப்த மௌரியரிடம் தோற்றுப் போனது தான் தனி வரலாறு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம