குடியரசுத்தலைவரிடம். 18-வது மக்களவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
18-வது மக்களவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவரிடம் வழங்கியது
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு கியானேஷ் குமார், டாக்டர் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று மாலை மணி 4.30 அளவில் குடியரசுத்தலைவரைச் சந்தித்தனர்.
அப்போது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ல் பிரிவு 73-ன் படி தேர்தல் ஆணையம் தயாரித்த 18-வது மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத்தலைவரிடம் வழங்கினார்கள்.
அதன் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் மற்றும் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் ராஜ்காட்டில் அமைந்துள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
கருத்துகள்