18-வது மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலின் பில்லி அண்ட் மொல்லி: அன் ஒட்டர் லவ் ஸ்டோரி முதல் படமாகத் திரையிடப்படுகிறது
நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலின் ஆவணப்படமான பில்லி அண்ட் மொல்லி: அன் ஒட்டர் லவ் ஸ்டோரி, மும்பையில் நடைபெறவுள்ள 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. மும்பை சர்வதேச திரைப்பட விழா வரும் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திரைப்படவிழாவின் முதல் திரைப்படம் தில்லி, கொல்கத்தா, சென்னை, புனே ஆகிய நகரங்களில் ஜூன் 15 அன்று ஒரே நேரத்தில் திரையிடப்படுகிறது. தில்லியில் வரும் 17-ம் தேதியும், சென்னையில் 18-ம் தேதியும், கொல்கத்தாவில் 19-ம் தேதியும், புனேயில் 20-ம் தேதியும் சிவப்புக் கம்பள நிகழ்ச்சியாகத் திரையிடப்படும்.
பில்லி அண்ட் மொல்லி: அன் ஒட்டர் லவ் ஸ்டோரி (ஆங்கிலம் - 78 நிமிடங்கள்) திரைப்படத்தை சார்லி ஹாமில்டன் ஜேம்ஸ் இயக்கியுள்ளார். தொலைதூர ஷெட்லேண்ட் தீவுகளில் வசிக்கும் ஒரு மனிதன் காட்டு விலங்கான நீர்நாயுடன் கொள்ளும் நட்பை இதயத்தைக் கவரும் வகையில் இந்த ஆவணப் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் வசீகரிக்கும் இந்த ஆவணப்படம், ஸ்காட்லாந்தின் ஷெட்லேண்ட் தீவுகளின் மயக்கும் கடற்கரைகளின் எழிலைப் பிரதிபலிக்கிறது.
இந்தப் படத்தில், பில்லி, மொல்லியை வளர்ப்பதிலும், காடுகளில் வாழ்க்கைக்கு அதைத் தயார்படுத்துவதிலும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான விட்டுக்கொடுக்காத தொடர்பை ஆராய்வதிலும் ஆறுதலையும் நோக்கத்தையும் கண்டுபிடிப்பதால், தோழமையின் உருமாறும் சக்தியை பார்வையாளர்கள் இதில் உணரமுடியும்.
ஜூன் 15-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மும்பை பெடர் சாலையில் உள்ள இந்திய தேசிய திரைப்பட அருங்காட்சியகத்தில் இப்படம் திரையிடப்படும், புதுதில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய இடங்களில் முறையே சிரி ஃபோர்ட் ஆடிட்டோரியம், என்.எஃப்.டி.சி தாகூர் திரைப்பட மையம், சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் திரையிடப்படும்.
இயக்குனரைப் பற்றி
சார்லி ஹாமில்டன் ஜேம்ஸ் ஒரு புகழ்பெற்ற வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றவர் ஆவார். அவரது படைப்புகள் பல விருதுகளை வென்றுள்ளன.
18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா
தெற்காசியாவில் கதைகள் அல்லாத திரைப்படங்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய திரைப்பட விழாவாக அங்கீகரிக்கப்பட்ட மும்பை சர்வதேச திரைப்பட விழா, ஆவணப்படம், சிறுகதை மற்றும் அனிமேஷன் திரைப்படங்களின் கலையைக் கொண்டாடும் அதன் 18-வது ஆண்டைக் குறிக்கிறது. 1990 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, தற்போது இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இது, உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்களை ஈர்க்கும் ஒரு சர்வதேச நிகழ்வாக உருவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு கொண்டாட்டமும் ஒரு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் 38-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்கின்றன. 1018 உள்ளீடுகள் மற்றும் பல இணையான திரையிடல்கள் தில்லி, கொல்கத்தா, புனே, சென்னை ஆகிய நகரங்களில் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு 300 க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படும் அதே வேளையில், 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், திரைப்பட இயக்குநர்கள் சந்தோஷ் சிவன், ஆட்ரிஸ் ஸ்டோனிஸ், கேதன் மேத்தா, ஷவுனக் சென், ரிச்சி மேத்தா மற்றும் ஜார்ஜஸ் ஸ்விஸ்கெபெல் போன்றவர்கள் கலந்து கொள்கின்றனர்
கருத்துகள்