21-வது கால்நடைகள் கணக்கெடுப்பு முன்னோட்ட ஆய்வுக்கான பயிலரங்கும் பயிற்சியும் இன்று நடத்தப்பட்டன
மத்திய கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் செயலாளரும், புள்ளி விவரப் பிரிவின் ஆலோசகருமான, திரு ஜெகத் ஹசாரிகா தலைமையில் புதுதில்லியில் இன்று 21-வது கால்நடைகள் கணக்கெடுப்பு முன்னோட்ட ஆய்வுக்கான பயிலரங்கும், பயிற்சியும் நடைபெற்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் சில உறுப்பினர்களுடன் கால்நடை கணக்கெடுப்புக்கான தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டது.
2024 செப்டம்பரில் தொடங்கி டிசம்பர் வரை அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்ப்புற வார்டுகளில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும். எருது, ஆடு, பன்றி, குதிரை, ஒட்டகம், நாய், முயல், யானை போன்ற பல்வேறு விலங்குகள், கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
வீடுவீடாக சென்று கால்நடைகள் மற்றும் பறவைகள் குறித்த விவரங்கள் சேகரிப்பு, தேசத்தின் மொத்த கால்நடை செல்வத்தை மதிப்பிட உதவுகிறது. 1919-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால் நடை கணக்கெடுப்பு
மத்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. 20-வது கணக்கெடுப்பு 2019-ம் ஆண்டில் நடத்தப்பட்டது.
கருத்துகள்