இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் முதல்வர் கடிதத்துக்குப் பதில்
மீன்பிடித் தடை காலம் முடிந்து ஜூன் மாதம்14-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பாக் ஜல்சந்திப் பகுதியில் மீன் பிடித்த மீனவர்களை இலங்கையின் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது மீனவர்களிடையே அச்சத்தை உறுவாக்கியுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறையின் அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் ஒரு நாள் பயணமாக இலங்கைக்குச் சென்று வந்தார். இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகள் குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் ஆலோசனை நடத்தினார் அவர் அங்கிருந்து திரும்பிய அடுத்த நாள் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதா பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில், நான்கு நபர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.இந்த நிலையில் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை எனவும், இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்யவில்லை எனவும் சட்ட மன்றப் பேரவையில் மானியக் கோரிக்கையில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
மேலும் கடலுக்குச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு
மீன்பிடிக்கச் சென்ற 3 விசைப்படகுகளையும், அதில் சென்ற 22 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிதனர் இராமேஸ்வரத்தில் இருந்து மீன் வளத் துறையினர் அனுமதி பெற்று 507 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதில் சென்ற மீனவர்கள் பாரம்பர்ய பகுதிகளில் அதிகாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிமுனையில் 3 படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மீன்பிடித் தடை காலம் முடிவடைந்து 10 நாள்களுக்குள்ளாகவே அடுத்தடுத்து இரு முறை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம், தமிழ்நாடு மீனவர்களிடையே அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்தக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக. தமிழ்நாடு முதல்வருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய பதிலில்
இலங்கையில் இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து எனக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வருக்கு பதில் எனத் தெரிவித்து கடிதம் அனுப்பினார்.
கருத்துகள்