டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கிய 21 நாள் இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததால் திகார் சிறையில் நேற்று சரணடைந்தார்.
மே மாதம் 10 ஆம் தேதியன்று, டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், ஜூன் மாதம் 2 ஆம் தேதி சரணடையக் கூறியது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்காட்டிலிருந்து புறப்பட்டார்.
அதற்கு முன் பேசியபோது
"நான் மீண்டும் சிறைக்குச் செல்வது ஊழலில் ஈடுபட்டதால் அல்ல, சர்வாதிகாரத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியதால் தான் என்று கெஜ்ரிவால் கூறினார்.
ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார். கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலுக்கும் சென்றார்.
இதற்கிடையில், பாஜக தலைவர் மனோஜ் திவாரி கெஜ்ரிவாலை கடுமையாக சாடியதுடன், அவரை டெல்லியின் வில்லன் என்றும் கூறினார். “நகரில் தண்ணீர் பஞ்சம் உள்ளது. நீர்வளத் துறை அவருக்குக் கீழ் வருகிறது, ஆனால் அவர் டெல்லி மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க முயற்சிக்கவில்லை என்றார் மேலும்
நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்காட் சென்றார். அவர் மகாத்மா காந்தியைப் பின்பற்றியிருந்தால், அவர் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை" என்று திவாரி கூறினார்.
நீதிமன்றம் மற்றும் அரசியல் சாசனத்தை மதித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் முடிவடைந்ததும் சரணடைந்ததாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்.
கருத்துகள்