அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையம் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடர்பான விளக்கம்
சில ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளைப் பொறுத்தவரை, 07.06.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 394 (இ) மூலம் மத்திய மோட்டார் வாகன விதிகள் (சி.எம்.வி.ஆர்), 1989 இல் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களை (ஏ.டி.டி.சி) பரிந்துரைக்கும் 31 பி முதல் 31 ஜே வரையிலான விதிகள் 01.07.2021 முதல் பொருந்தும் என்றும், 01.06.2024 முதல் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனங்கள் (எம்.வி) சட்டம், 1988, பிரிவு 12, மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக பள்ளிகள் அல்லது நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவும், முறைப்படுத்தவும் வகை செய்கிறது என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறோம். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு அமைப்பால் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் அல்லது நிறுவனங்களுக்கு துணைப்பிரிவு (5) & (6) ஐ சேர்க்க மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம், 2019 மூலம் இது திருத்தப்பட்டது.
சி.எம்.வி.ஆர்., 1989 விதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு சோதனை முகமையின் பரிந்துரையின் பேரில், மாநில போக்குவரத்து அதிகாரி அல்லது மத்திய அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட முகமையால் அங்கீகாரம் வழங்கலாம். 1989 ஆம் ஆண்டு சி.எம்.வி.ஆர் விதி 31 இ இன் துணை விதி (iii) மூலம் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவுடன் ஏடிடிசி வழங்கிய சான்றிதழ் (படிவம் 5 பி) அத்தகைய சான்றிதழை வைத்திருப்பவருக்கு ஓட்டுநர் சோதனையின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கிறது.
சி.எம்.வி.ஆர், 1989 இன் விதி 24 இன் கீழ் நிறுவப்பட்ட பிற வகையான ஓட்டுநர் பள்ளிகள், ஏ.டி.டி.சி.யுடன் ஒப்பிடும்போது குறைவான கடுமையான தேவைகளைக் கொண்டுள்ளன.
சி.எம்.வி.ஆர், 1989 விதி 14 இன் கீழ் ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பத்துடன் படிவம் 5 அல்லது படிவம் 5 பி இணைக்கப்பட வேண்டும்.
கருத்துகள்