ஹட்கோ சென்னை பிராந்திய அலுவலகத்தின் உதவி சாதனங்கள் விநியோக முகாம்
ஹட்கோ நிறுவனத்தின் சென்னை பிராந்திய அலுவலகத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்புடமை நிதி மூலமான தொண்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் (அலிம்கோ), தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை, ஈரோடு மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து 26/06/2024-ந் தேதி ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் உதவி சாதனங்கள் விநியோக முகாமை நடத்தியது.
இந்த முகாம், பலருக்கு நம்பிக்கை விளக்காக இருந்தது. ரூ. 12.91 லட்சம் மதிப்புள்ள 138 உதவி சாதனங்கள் 103 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த உபகரணங்கள் சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் உயர வழி வகுக்கும்.
ஹட்கோ இயக்குநர் திருமதி. சபிதா போஜன், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. டி சம்பத், ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தின் தலைமையாசிரியை திருமதி. ரேவதி, மற்றும் அலிம்கோ, ஹட்கோ நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டு, சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி சாதனங்களை வழங்கினர்
கருத்துகள்