திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் இறையூர் பகுதியில் பெண் வருவாய் ஆய்வாளராகப் பணி செய்யும் பாரதி ஆவார்
நாச்சிபட்டு பகுதி பழனிசாமி முதிய நபரிடம் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக 1000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் கொடுக்க விரும்பாத பழனிச்சாமி திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவப்பட்ட பணத்தை பழனிசாமியிடம் பெற்ற பின்னர் அரசு சாட்சிகள் முன்பு கொடுத்துள்ளனர்.
அதையடுத்து நேற்று பழனிசாமி வருவாய் ஆய்வாளர் பாரதியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதுறையினர், பாரதியை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பாரதி என்ற பெண் வருவாய் ஆய்வாளரிடம் செங்கம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர் பிறகு சிறைக்கு அனுப்பப்பட்டார்
கருத்துகள்