2024-25 மத்திய பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு ரூ.2,616.44 கோடி ஒதுக்கீடு
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு இடையிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ள நிலையில் வருங்காலத்தில் இது மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,352 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வள கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ், இறால் மீன் பண்ணைகள் அமைக்க முன் வரும் தனியார் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சலுகையுடன் கூடிய நிதியுதவி வழங்கப்படும்.
இந்தியாவின் இறால் பண்ணை தொழிலை உலக அளவில் வலுப்படுத்த, முக்கியமான இடுபொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி செலவு குறைந்து, வருவாய் மற்றும் லாபம் அதிகரிக்கும்.
மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருட்கள் பதப்படுத்தும் தொழிலில் இந்தியாவை முன்னோடி நாடாக வலுப்படுத்த, இதற்கான மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பதுடன், குஞ்சு வளர்ப்புக்கான பொடி மீதான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்