பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பாரா வீரர்களின் பல்வேறு உபகரணங்களுக்கான க் நிதிக் கோரிக்கைகளுக்கு ஒலிம்பிக் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது
பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பாரா வீரர்களின் பல்வேறு உபகரண நிதிக் கோரிக்கைகளுக்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது.
தாய்லாந்தில் ஜூலை 16 முதல் 20 வரை நடைபெறவுள்ள ஐ.டி.டி.எஃப் பாரா டேபிள் டென்னிஸ் ஆசிய பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக நிதியுதவி கோரிய வீராங்கனை பவினா படேலின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதில் அவரது பயிற்சியாளர், காப்பாளருக்கான செலவுகளும் அடங்கும்.
மேலும், பாரா துப்பாக்கி சுடும் வீரர்களான மணீஷ் நர்வால், ருத்ராங்ஷ் கண்டேல்வால், ரூபினா ஃபிரான்சிஸ், ஸ்ரீஹர்ஷா ஆர் தேவரெட்டி ஆகியோருக்கு சிறப்பு துப்பாக்கி சுடுதல் உபகரணங்களுக்கான ஒப்புதல்கள் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஸ்ரீஹர்ஷாவுக்கு ஏர் ரைபிள், ரூபினாவுக்கு மோரினி பிஸ்டல், பாரா ஈட்டி எறிதல் வீரர் சந்தீப் சவுத்ரிக்கு இரண்டு ஈட்டிகள் வாங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படும்.
கருத்துகள்