மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள் 2024-க்கான விண்ணப்பங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை வரவேற்கிறது
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. ஆண்டு தோறும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாகப் பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள், மாநிலங்கள், மாவட்டங்கள் ஆகியவற்றுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பத்தை உள்துறை அமைச்சகத்தின் விருதுகள் இணையதளம் (www.awards.gov.in) மூலம் விண்ணப்பிக்குமாறு தேசிய மற்றும் பிராந்திய நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 2024 ஜூலை 31 கடைசி நாளாகும்.
கருத்துகள்