மத்திய அமைச்சகங்கள்/ துறைகளின் செயல்பாடு குறித்து மத்திய மக்கள் குறைதீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பின் ஜூன் மாதத்திற்கான 26-வது மாதாந்தர அறிக்கையை மத்திய நிர்வாக சீர்திருத்தம், மக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ளது
மத்திய அமைச்சகங்கள்/ துறைகளின் செயல்பாடு குறித்து மத்திய மக்கள் குறைதீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பின் ஜூன் மாதத்திற்கான 26-வது மாதாந்தர அறிக்கையை மத்திய நிர்வாக சீர்திருத்தம், மக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் குறைகள், தீர்வின் தன்மை ஆகியவை பற்றி விரிவான விவரங்கள் இதில் தரப்பட்டுள்ளன.
2024 ஜூன் மாதத்தில் மத்திய அமைச்சகங்கள்/ துறைகளால் 1,34,386 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்தின் சராசரி குறைதீர்ப்பு காலத்தின் அளவு 14 நாட்களாக உள்ளது.
2024 ஜூன் மாதத்தில் சிபிகிராம்ஸ் பயன்பாட்டிற்கு 64367 பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக அசாமில் இருந்து 12467 பேரும், உத்தரப்பிரதேசத்தில் இருந்து 8909 பேரும் பதிவு செய்துள்ளனர்.
2024 ஜூன் மாதத்தில் மத்திய அமைச்சகங்கள்/ துறைகளால் பெறப்பட்ட 36905 பின்னூட்டங்களில் 52 சதவீதம் பேர் தீர்வுகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.
ஊரக மேம்பாட்டுத்துறை, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம், நிதிச்சேவைகள் துறை, வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, மத்திய நேர்முக வரிகள் வாரியம் (வருமானவரித் துறை) போன்ற துறைகளில்2024 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான குறைகள் மத்திய அமைச்சகங்கள்/ துறைகளால் பெறப்பட்டுள்ளன.
கருத்துகள்